காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இன்று காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரின் மறைவை முன்னிட்டு, காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகர்மன்றம் கூடி, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பின், இன்று நடைபெறவிருந்த இம்மாதத்தின் சாதாரண கூட்டம் ஒத்திவைக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தெரிவித்துள்ளார். |