டிசம்பர் 15 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. ஆகிய இரு கட்சிகளுடனும் தி.மு.க. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டு வைக்காது என அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தி.மு.க. தலைவரை நேற்று (டிசம்பர் 17) சென்னையில் சந்தித்தார். இது குறித்து அக்கட்சியின் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
தி.மு.க. தலைவர் கலைஞரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்தித்து , நாடாளுமன்ற
தேர்தல் தொடர்பாக தி.மு.க பொதுக் குழு எடுத்த முடிவிற்கு வாழ்த்து தெரிவித்தார். கலைஞர் அதற்கு நன்றி கூறினார்.
தி.மு.கழகத் தலைவர் டாக்டர் கலைஞரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்று
காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார்.
அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது,மாநில செயலாளர்கள் காயல்
மகபூப், திருப்பூர் எம்.ஏ. சத்தார், கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர்கள் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், ஆப்ப னூர்
ஜபருல்லா,எஸ்.ஏ. இப்ரா ஹிம் மக்கீ, வடசென்னை மாவட்ட தலைவர் எம். ஜெய்னுல் ஆப்தீன், செயலாளர் ஏ.எச். முஹம்மது இஸ்மாயில்,
தென் சென்னை மாவட்ட தலைவர் பூவை எம்.எஸ். முஸ்தபா, செய லாளர் எச். ஹைதர் அலிகான், தேசிய கவுன்சில் உறுப்பினர் கே.டி.கிஸர்
முஹம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.
15ம் தேதி தி.மு.க. பொதுக் குழு எடுத்த முடிவிற்கும், நிறைவேற்றிய தீர்மானங்களுக்கும், கலைஞர் ஆற்றிய உரைக்கும் பேராசிரியர் கே.எம்.
காதர் மொகிதீன் நன்றி தெரிவித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நேற்றும் இருந்தது - இன்றும் இருக்கிறது -
நாளையும் இருக்கும் என உறுதி கூறினார்.
இதற்கு பதிலளித்த கலைஞர், தி.மு.க. பொதுக்குழு முடிவிற்கு பின் எங்களை முதலில் சந்தித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்த கட்சி இந்திய
யூனியன் முஸ்லிம் லீக் அதற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முஸ்லிம் சமுதாயத்தை ஒருமுகப்படுத்தும் நோக்கோடு, வரும் 28ம் தேதி தமிழகத்தின் அனைத்து
மஹல்லா ஜமாஅத் துக்கள், பள்ளிவாசல் முத்த வல்லிகள், அரபிக்கல்லூரி களின் பேராசிரியர்கள், இமாம் கள், உலமாக்கள் அனைவரை யும்
ஒன்று திரட்டும் நோக்கோடு திருச்சியில் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளோம் என பேராசிரியர்
கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார். அம்மாநாட்டிற்கு கலைஞர் வாழ்த்து தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
கலைஞரை சந்தித்து விட்டு வெளியில் வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரை ஏராளமான பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு பேட்டி
கண்டனர். அவர்கள் கேட்ட கேள்வி களுக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அளித்த பதில்கள் வருமாறு:
கேள்வி: தி.மு.க. தலைவர் கலைஞரை இன்று சந்தித்த நோக்கம் என்ன?
பதில்: தி.மு.க. பொதுக்குழு 15ம் தேதி கூடி நிறைவேற்றிய தீர்மானத்திற்கு வாழ்த்துக் களை சொல்வதற்காக இங்கு வந்தோம்.
கலைஞருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்தோம். அவர் அதற்கு நன்றி கூறினார்.
கேள்வி: பா.ஜ.க வோடு தி.மு.க. செல்லாது என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? அவர் நிருபர்களிடம் பேசும் போது கூட்டணி குறித்து
பேசுவ தற்கு ஐவர் குழு அமைத்திருப் பதாகவும், அது இந்த விஷயம் குறித்து முடிவெடுக்கும் என்று சொன்னாரே?
பதில்: தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கலைஞர் தெளி வாக அறிவித்துவிட்டார், """"காங்கிரஸோடும், பாரதீய ஜனதா கட்சியோடும்
கூட்டு இல்லை என்று"". வாஜ்பாய் பதவியில் இருந்த காலத்தோடு பா.ஜ.க. உடனான உறவு முடிந்து விட்டது என தெளிவாக அறிவித்த பின்பும்
இந்த சந்தேகம் தேவையில்லாதது. சிலர் ஆசைப்படுவது போல், கனவு காணுவதை போல் தி.மு.க. பா.ஜ.க. உறவு நிச்சயம் ஏற்படாது.
கேள்வி: காங்கிரஸோடு உறவு இல்லை என்று தி.மு.க. முடிவு அறிவித்துவிட்டது ஆனால் அந்த காங்கிரஸோடு நீங்கள் உறவு சேர்வது
உங்களுடைய கட்சியின் நிலைபாட்டிற்கு மாற்றமில்லையா; ஏனெனில் உங்களுடைய தேசிய தலைவர் இ.அஹமது மத்தியில் காங்கி ரஸ்
தலைமையிலான கூட்டணி அரசில் அமைச்சராக அங்கம் வகிக்கிறாரே?
பதில்: இதில் எந்த குழப்பமும் இல்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய கட்சியாக இருந்தாலும் தேர்தல் கள் குறித்து மாநில
அளவில் தான் கூட்டணி குறித்து முடிவெடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலும்,
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்ட ணியிலும் நாங்கள் இருக்கி றோம் என்பதை தெளிவு படுத்தி வந்துள்ளோம். எங்களுடைய தேசிய
தலைவர் மத்திய அமைச்சர் இ. அஹமது கேரளா வில் இருந்து தேர்தெடுக்கப் பட்டு வந்தவர். ஆகவே இதில் எந்த பாதிப்பும், பிரச்சினையும்
இல்லை.
கேள்வி: நான்கு மாநில தேர்தலில் பா.ஜ.க. பெரும் வெற்றிபெற்றுள்ளதே. இது மோடி அலை தானே. இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலில்
ஒரு தாக்கத்தை ஏற்படுத் தாதா?
பதில்: மோடி அலை என்றெல்லாம் ஒன்று இல்லை. பா.ஜ.க. பிறந்து வளர்ந்து காலூன்றிய மாநிலங்களில் தான் வெற்றிபெற்றுள்ளது. இது
நாடாளுமன்ற தேர்தலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
கேள்வி: தி.மு.க. தலைமை யில் மூன்றாவது அணி அமையுமா?
பதில்: தமிழகத்தை பொறுத்த வரையில் தி.மு.க. அ.தி.மு.க. என்ற இரண்டு அணிகள்தான். அகில இந்திய அளவில் மூன்றாவது அணி
அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. டெல்லியில் காங்கிரசும் தனது முதல்வர் வேட்பாளரை அறி வித்தது, பா.ஜ.க.வும் தனது முதல்வர் வேட்பாளரை
அறிவித் தது; ஆனால் யாரும் எதிர் பாராமல் ஆம் ஆத் மி கட்சி தலைவரை முதல்வராக்க காங்கிரசும், பா.ஜ.க.வும் இன்று வலியுறுத் துகின்றன.
இந்த நிலைதான் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஏற்படும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
இவ்வாறு முஸ்லிம் லீக் கட்சியின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
புகைப்படம்:
www.tutyonline.net |