காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரது ஜனாஸா, அன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஹாஜி எம்.எம்.உவைஸ் அவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் நகர்மன்றம், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, கே.எம்.டி. மருத்துவமனை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் பள்ளிகள், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி, எம்.கே.டி. குடும்பத்தினர் ஆகியோர் சார்பில் இரங்கல் பிரசுரம் அச்சிடப்பட்டு, நல்லடக்கத்தில் பங்கேற்றோரிடம் வினியோகிக்கப்பட்டது. பிரசுரங்கள் வருமாறு:-
பிரசுரங்கள் உதவி:
A.R.ஷேக் முஹம்மத் |