டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பி.எட் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு துளிரில் சிறப்பு குழந்தைகளை அடையாளம்
காணுதல், கல்வியளித்தல் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. இது குறித்து துளிர் சிறப்பு பள்ளி சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு
வருமாறு:
திருச்செந்தூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பி.எட் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அவர்களின்
கல்வித்திட்டத்தின் ஓரு பகுதியான சிறப்பு குழந்தைகளுக்கு கல்வியளிக்கும் முறைகளை புரிந்துணர துளிரில் சிறப்பு பயிலரங்கம் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. இந்த பயிலரங்கில் 110 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
துளிர் மறுவாழ்வு திட்டபணிகள் குழு தலைவர் A. வஹிதா வரவேற்றார். வாவு வஜீஹா பெண்கள் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்
சசிகலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிலரங்கை துவக்கி வைத்து பேசினார்.
துளிரின் செயல்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஜான் விளக்கி பேசினார். துளிரின் நிறுவனர் வழக்கறிஞர் அஹமத் காணொளி காட்சிகள்
மூலம் சிறப்பு குழந்தைகளை அடையாளம் காணுதல், அவர்களின் உளவியல், சமூகப்பிரச்சனைகள், அவர்களுக்கு கற்பிக்கும் முறைகள,
கொடுக்கப்படும் பல்வேறு பயிற்சி முறைகள் பற்றி விளக்கினார்.
மாணவ, மாணவியர்களின் சந்தேகங்களுக்கும் பயிற்சி முடிவில் விளக்கமளித்தார்.
மனவளர்ச்சி குறை, மூளை முடக்குவாதம், ஆட்டிஸம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பற்றிய குறும்படங்களும் திரையிடப்பட்டன. பயிலரங்கிற்கு
பின்பு கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் துளிர்குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி முறைகளையும, உடல் இயக்க பயிற்சி மற்றும்
ஏனைய பயிற்சிகளையும், நேரடியாக பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டனர்.
கல்வியியல் கல்லூரியின் துணை முதல்வர் சாந்தா பயிலரங்கம் பயனுள்ளதாக இருந்தது எனவும் இதுபோன்ற பயிலரங்குகளை துளிர் எல்லா கல்லூரி
மாணவ, மாணவியர்களுக்கும் நடத்துவதன் மூலம் சிறப்பு குழந்தைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்றும் கூறினார்.
துளிரின் செயலர் M.L. சேக்னா லெப்பை நன்றி கூற நிகழ்வுகள் நிறைவு பெற்றது.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 6:15 pm / 19.12.2013] |