Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:32:51 PM
ஞாயிறு | 6 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1893, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:35
மறைவு18:06மறைவு20:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12597
#KOTW12597
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 19, 2013
16வது ஆண்டிற்குள் நுழைகிறது காயல்பட்டணம்.காம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3249 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

1998 ஆம் ஆண்டு தன் பயணத்தை துவக்கிய KAYAL ON THE WEB (kayalpatnam.com), டிசம்பர் 19 அன்று - இறைவனின் உதவியால் - 15 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது. இதனை முன்னிட்டு சிறப்பு பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனை காண இங்கே சொடுக்குக.

16வது ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், இது காலம் வரை, எங்களுடன் பயணித்தமைக்கு வாசகர்கள் அனைவருக்கும், செய்தியாளர்களுக்கும் - எமது மனமார்ந்த நன்றி.

கடந்த சில நாட்களாக (இலக்கியம், ஊடகப்பார்வை, மருத்துவக்கட்டுரைகள், காயல் வரலாறு போன்ற) புதிய பக்கங்களை காயல்பட்டணம்.காம் அறிமுகம் செய்து வருகிறது. இப்பணி மேலும் தொடர்ந்து, இன்னும் சில புதிய பக்கங்கள், அம்சங்கள் - இறைவன் நாடினால் - அடுத்த சில தினங்களில் துவக்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

துவக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இணையதளத்தின் எழுத்து மேடை / சிறப்பு கட்டுரைகள் பகுதி ஆசிரியர்கள், இணையதள வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலரிடம் - காயல்பட்டணம்.காம், விமர்சனக் கட்டுரை கேட்டிருந்தது. குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தாலும், வைக்கப்பட்ட எமது வேண்டுகோளை ஏற்று, தங்கள் ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி. (பெறப்பட்ட கட்டுரைகள் கீழே)

காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் ஆசிரியர் குழு மற்றும் நிர்வாகிகள், வாசகர்கள் / செய்தியாளர்களின் ஆதரவையும், ஆலோசனைகளையும் தொடர்ந்து வரவேற்கிறது.

ID # 1

ID # 2

ID # 3

ID # 4

ID # 5

ID # 6

ID # 7

ID # 8

ID # 9

ID # 10

ID # 11

ID # 12

ID # 13

ID # 14

ID # 15

ID # 16

ID # 17

ID # 18


--- ஆசிரியர் குழு / நிர்வாகிகள், காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by OMER ANAS (DOHA QATAR..) [20 December 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 32112

பதினைந்தாம் வயதை பூர்த்தி செய்து பதினாறாம் வயதை தொடங்கும் காயல்.காமிற்கு,மேலும் பல்லாண்டுகள் உங்கள் சமூக சேவை தொடர மனமுவந்து பாராட்டுகிறேன்.

நன்றியோடு,
உமர் அனஸ்!
தோஹா கத்தார்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) [20 December 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 32115

நாம் என்ன சொல்கிறோம் என்பதை விட நம்மைப் பற்றி பிறர் என்ன சொல்கின்றனர் என்பதை கேட்பதில் ஆர்வமில்லாதோர் எவருமில்லை. அதன் அடிப்படையில் என் நெஞ்சத்தில் நேசம் கொண்ட காயல்பட்டனம் டாட் காம் பற்றி பிறரது கருத்தினைக் காண மிகுந்த ஆவலோடு காத்திருந்தேன்.

காலையில் எழுந்தவுடன் ஒரே இருப்பாக இருந்து அத்தனை விமர்சன கட்டுரைகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். டாட் காம் பற்றி பல்வேறு கருத்துக்களை ஆதரவாகவும் அதேநேரம் சில குறைபாடுகளை உரிமையோடும் சிந்தனையாளர்கள் எடுத்துக்கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.

பாபநாசம் அனைக்கட்டின் நீர் வரத்து பற்றி வெறும் பக்கத்தை நிரப்புவதற்காக செய்தி போடவில்லை. அணையின் நீர்மட்டம், அவர்கள் திறந்துவிடும் நீரின் அளவு ஆகியவற்றை துள்ளியமாக கணக்கிட்டு அறியதருவதால் நமதூருக்கு தண்ணீர் வரவில்லை எனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், “அணையில் தண்ணீர் இல்லை. அதனால் நாங்க திறந்து விடவில்லை” என ஏமாற்ற முடியாது. இந்த உள்நோக்கத்தில் தான் அந்த செய்தி வெளியிடப்பட்டு வருகின்றது.

அது போல கடல் காட்சியில் கழிவுநீர் கலந்துவிடக்கூடாதே என படமெடுத்து சிந்துபாத் தொடர்போல செய்தி போடுவதால்தான் இந்த மழை சீசனில்கூட கடல்நீர் நீல நிறமாக உள்ளது. அல்லது DCW வின் உபயத்தால் நம்ம கடல் செங்கடலாகத்தான் இருந்திருக்கும்.

இன்னும் பலரது விமர்சனங்களையும், கருத்துக்களையும் காண ஆர்வமாக உள்ளது. அதற்கு வழி வகுத்து நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பும் உள்ளது. இதனால் குறைகள் களையப்பட்டு இன்னும் உயர்தரத்தோடு இந்த தளம் வெளிவர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே .....
posted by Mohamed Salih (Bangalore) [20 December 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 32119

எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே ..

இந்த இணைய தளம் சீரோடும் , சிறப்போடும் பல ஆண்டுகள் தொடர்ந்து சேவைகள் செய்ய வல்ல இறைவனை வேண்டுகிறேன் இன்ஷா அல்லாஹ்...

என்றும் இந்த இணைய தளத்தின் வாசகர் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே..கே எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by A.M. Syed Ahmed (Jeddah) [20 December 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32120

உங்கள் சமூகப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நிச்சயமாக டெய்லி kayalpatnam.com , dinamalar.com இரண்டையும் படித்துவிட்டுதான் என் பணி கம்பெனியில் தொடரும்...

நான் கண்ட நீங்கள் உங்கள் kayalpatnam.com மூலம் உருவாக்கிய சில மாற்றங்கள்...

1. இக்ரா கல்வி சங்கம் உருவாக காரணமாக இருந்தது

2. நம் முனிசிபாலிட்டி ஆட்சி மாற்றம் - I called it as "kayalpatnam.com Revolution"

3. DCW வினால் ஏற்படும் பிரச்சனையை Highlight செய்து விழிப்புணர்வை உருவாக்கியது.

4. அனைத்து காயல் மன்றமும் உருவாக காரணமாக இருந்தது.

5. திறமையானவர்களை வெளியில் கொண்டு வந்தது.

6. கல்விக்கண் திறந்து ஏழை மாணவர்களுக்கு உதவுவது.

7. நலிந்தோருக்கு உதவும் மனப்பான்மையை உருவாக்கிவது.

Thank you guys, continue in the same social spirit which has the real cause.

My two suggestions to you
1. Add "JOKES" & KAVITHAI column and let the people enjoy
2. Box to add "Commentor's "Photos" in all the news

Courtesy : S.A. Ayesha Hannan - Jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கருத்துப்பதிவில் திறந்த மனது
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [20 December 2013]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 32122

பதினாறாம் ஆண்டில் நுழையும் காயல்பட்டணம்.காம் க்கு வாழ்த்துக்கள்.நம் ஊர் மற்றும் நம் சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

கருத்துப்பதிவில், வேண்டிய மற்றும் வேண்டாத அனைத்து கருத்துக்களையும் 'தினமலர் போன்று சர்வாதிகார போக்கை கடைபிடிக்காமல்' திறந்த மனதுடன் சரிசமமாக வெளியிட்டு பத்திரிகை தர்மத்தை நிலைநிறுத்த வேண்டுமாய் இந்த சந்தர்பத்தில் உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. புதுப்பொலிவுடன் நடுநிலை தவறாத பத்திரிகை தர்மம் திளைக்க வாழ்க !
posted by k.v.a.t habib mohamed (qatar) [20 December 2013]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 32123

அன்பு காயல்.காம் ஊடகமே! நீ வருங்கலத்திலும் நீதி நெறிமுறையோடு, நடுநிலை சற்றும் சறுக்காது, சமூக நலனில் அக்கறை கொண்டு, மேலும் புதிய மெருகுடன் புத்தம் புதிய பொலிவுடன், பத்திரிகை தர்மம் தழைக்க... பார்ப்போர் போற்றும் வண்ணம் பீடு நடை போட மனமார வாழ்த்துகிறோம்.

உன் வளர்ச்சியில் உள்ளன்போடு வாழ்த்தும் நெஞ்சம்,
கே.வி.ஏ.டி . ஹபீப் முஹம்மத்,
கே.வி . ஏ.டி. புஹாரி ஹாஜி அறக்கட்டளை,
காயல்பட்டணம் மற்றும் கத்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மனமார்ந்த வாழ்த்துக்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [20 December 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32124

காயல்பட்டனத்தின் சங்க நாதமாய் உங்கள் இணையதளம் ஒலிக்கட்டும் !!! ஊடக உலகில் நமது இணையதளம் மாபெரும் சரித்திரம் படைக்கட்டும் என வாழ்த்தி பிரார்த்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இளைய தலைமுறைகளை நேர் வழி நல்ல வழிகாட்டியாக திகழும் நல்ல ஒரு இணைய தளம்...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [20 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32126

16 வயதுக்கு வந்த வாலிபனுக்கு வாழ்த்துக்கள்...!

இந்த 16 வருடத்தில் இந்த ஊடகத்தால் நகரில் பல நபர்கள் பயன் பெற்று இருப்பது உறுதி..! இன்னும் பல நபர்கள் பயன் பெறுவதும் உறுதி..!

காயல்பட்டணம்.காம் எனும் ஊடகத்துறையின் மூலம் நகரில் ஒரு எழுச்சியை - விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் KAYAL FIRST TRUST குழுமம் அதை யாராலும் மறுக்க முடியாது..

தாங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்...! வர இருக்கும் காலத்தில் இன்னும் பல விழிப்புணர்வுகளை KAYAL FIRST TRUST குழுமம் மூலம் காயல்பட்டணம்.காம் தகவல் தர வேண்டும்... ஆலமரமாக தொடர வேண்டும்..

வாழ்த்துக்களுடன் என்றும் உங்கள் வாசகன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. 8M இலிருந்து .com வரை ..
posted by Firdous (Dubai) [20 December 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32127

16 வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் kayalpatanam.com எனது வாழ்த்துக்கள்.

kayal.8m.com யில் தொடங்கி இன்றுவரை இதனுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். Free server வந்த காலக்கட்டத்தில், அநேகமானோர் personal website தொடங்கினர். நானும் அதில் ஒருவன். ஆனால் சமுதாய அக்கறை கொண்ட நண்பர் சாலிஹ் அவர்கள் ஊரின் பாரம்பரியம் பறைசாற்றும் வகையிலும் மற்றும் ஊரிலிருந்து பிரிந்து வாழும் அன்பர்களுக்கு ஒரு பாலாமாக அமைய இந்த இணைய தளத்தை தொடங்கி இன்று ஒரு குழுமமாக, ஆலமரமாக வளர்ந்து உள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். சப்தமின்றி ஒரு சாதனை புரிந்திருக்கும் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.

இந்த மகுடத்தில் அணி சேர்பதற்காக நண்பன் SK சாலிஹின் செய்திகள் பகுதியும், அதன் தலைப்புகளும் ... சிரிக்க மற்றும் சிந்திக்க தூண்டுபவை!

எழுத்து மேடை ஆரம்பித்து, நம்மிலும் இத்தனை இலக்கியவாதிகளா! சிந்தனையாளர்களா! சமூகார்வலர்களா! என்று வியக்கும் வகையில் அடையாளம் காண செய்தீர்கள்!

உங்களின் சமூக, சமுதாய பணிகள் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.

------------------

இன்னும் மெருகேற்ற, Classifieds, வேலைவாய்ப்பு பகுதி போன்றவைகளை தொடங்கலாம்.

என்னில் வருத்தம்:

தங்களின் செய்திகள் வெகுஜன காயலர்களை சென்றடைய வில்லை. Print media காலத்தின் அவசியம். மீண்டும் நிகழ்காலம், நிகழ்காலத்திலே வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. பதினாறும் பெற்றுயர்வாயாக!
posted by அன்புடன் முஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU) [20 December 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32128

படைத்தோனின் உதவியினால் 16-ம் ஆண்டடில் அடியெடுத்து வைக்கும் காயல்.டாட்.காமே, நீ பதினாறும் பெற்று பெருவாழ்வுபெரும் பயணப்பாதையில் பின்னடைவில்லாமல் உன் நீடித்த நெடியபயணம் நிற்காமல் நீளட்டும்!

காயல்.டாட்.காமே... கடல்கடந்து வாழ்பவருக்கு நம்காயலை ஒரு காட்சிப்பெட்டகமாய் பார்க்க, பரவசமுடைய பெருமகிழ்வை முதன் முதலில் தொடங்கி வைத்தவனே உன் தொண்டு தொடர்ந்துயரட்டும்!

காயல்.டாட்.காமே... உன்னையழிக்க ஒரு குழு. அதுவும் ஒர் இரும்பு அரணைப் போல் வசதிபடைத்தவர்கள் முதல் வலிமைமிகு சக்திகள் அனைத்தும் சேர்ந்து வகுக்கப்பட்ட திட்டத்தின் விளைவால் விரிக்கப்பட்ட சதிவலைகளை உன் நேர்மை, நெஞ்சுறுதி துணிச்சலால் அந்த இரும்பரணைக்கூட இலவம் பஞ்சாய் பறக்கடிக்கச் செய்ததை பகுத்தறிவு நடுநிலையானர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

காயல்.டாட்.காமே... உன் உண்மையான உபயோகமான நேர்மையான பணிகளை புரிந்தும் புரியாதது போல் நடித்து இப்படிப்பட்ட இணையதளம் தேவைதானா? என்று கூப்பாடிட்டவர்கள் கூட இன்று இதுபோன்ற சேவை நமதூருக்கு தேவை என்ற எண்ணத்தை பதிய வைத்து, தகவல் உலகில் தன்னிகரற்ற வெற்றியடைந்த வீரனே, இது 16 வயது பாலகனின் செயலா என்று பிரமிக்க வைக்கிறது!

காயல்.டாட்.காமே.. உன் உன்னத சேவையால், ஊர் கடைக்கோடியிலுள்ளவரும் விழிப்புணர்ச்சிப்பெற்று நமதூர் நற்பணிகளில் பின்னிப் பிணைய வைத்தவனே! ஒரு சிறிய ஊழல் நிகழ்வுகளும் ஊடுருவாமல் காப்பவனே!

காயல்.டாட்.காமே.. உன் புண்ணிய பணியானது ஊர் நன்மைகள் என்ற வெதுவெதுப்பான உணர்வுக்கொப்பானது, அந்த வெதுவெதுப்பை விட்டு சற்று விலகி நின்றாலோ அந்த நன்மையின் பலன் கிட்டாமல் போய்விடும், அத்துமீறி அதன் அருகில் சென்றால் அந்த வெப்பம் உன்னை கரியாக்கிவிடும் ஆகவே, நேர்மை, நடுநிலை, நியாயம் என்ற மிதமான நேர்க்கோட்டில் நீ நின்றால் இந்த நாடே மெச்சும் வண்ணம் நன்மைகள் நிறைந்த நற்பெயரில் நிலைத்திருப்பாய்!

காயல்.டாட்.காமே… நீ ஊடகசெய்தியை மட்டும் தந்திருந்தால் 10-த் தோடு 11யென்று நானும் சம்பிரதாய வாழ்த்துக்களோடு நிறுத்தி இருப்பேன். ஆனால் நீயோ ஊடகச்சேவையையும் தாண்டி ஊர் நல உதவி என்ற வற்றாத நதியாக மாறி பல கிளை நதியாக பிரிந்து பல இடங்களுக்கும் புகுந்து புண்ணிய பணியை செய்து வருகிறாய்! தம்மூர் முதல் தலைநகர் ஊர்வரை உன் புண்ணிய நதி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்ற பெருமையை நாளெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

பேரிறைவன் பெருமைக்குறிய கருணைக்கண்களால் உன் உண்மையான ஒப்புயர்வற்ற பணிகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் அதற்குறிய பண் மடங்கு நன்மைகளை நிச்சியம் நீ அடைந்திடுவாய்,அதற்காக நானும் அனுதினமும் அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்!

அல்லாஹ அனைத்தும் அறிந்தவன்

அன்புடன் முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [21 December 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32134

அஸ்ஸலாமு அழைக்கும்
காயல் . காம் நமது ஊருடைய முகவறி , உலக காயலர்களை ஒருங்கீனைத்து இணைக்கும் தளம்

கருத்து பறிமாற்றததின் மூலம் நம் மக்களை ஒன்றுபடுத்தும் ஒரு நல்ல வடிகால் . இறைவனின் கருணையால் ஊருக்கும் ,சமுதாயத்திற்கும் ,உலகிற்கும் நல்லபல நன்மையான காரியங்கள் தொடர்ந்து புரிய வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...காயலின் சரித்திரம் ஒரு கூ ரைன் கீழ்...
posted by NETCOM BUHARI (CHENNAI) [21 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32135

அஸ்ஸலாமு அழைக்கும்

காயலின் சரித்திரத்தை ஒரு கூரை இன் கீழ் கொண்டுவந்து, பலரின் திறமைகளை ஊர் மக்களுக்கு பறை சாட்டிய KAYALPATNAM.COM தனனுடைய 15 வயதை பூர்தி செய்வதை கண்டு நான் பெருமை கொள்கிறேன்.

இந்த வலைதளம் முன்னேற துணையாக நின்ற அட்மின். ஆசீரியர்கள்,ஆகியருக்கு என் மனமார்த நன்றி இனை தெரிவித்து கொள்கிறேன்.அட்மின் கேட்டு கொண்டதுக்கு இணங்க குறைகளை அதிகமாக எடுத்து சொன்னால்,சரியான குறைகளாக இருக்கும் பட்சதில் அதை நிவர்த்தி பண்ண வசதியாக இருக்கும்.

வரும் கால மக்கள் இந்த வலை தளத்தை பார்த்து காயல் ஹிஸ்டரியை தெரிந்து கொளும் அளவுக்கு உறு துணையக இருக்கும் எண்டு நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...வாழ்த்துக்கள்
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [21 December 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32138

16-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காயல்பட்டணம்.காம் க்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். எங்களை போன்ற வெளிநாட்டில் வாழும் காயலர்களுக்கு உடனுக்குடன் உள்ளூர் செய்திகளை அறிய சிறந்த முறையில் வாய்ப்பினை முதன்முதலில் ஏற்படுத்தி கொடுத்த தங்கள் இணையதளத்திற்கு நன்றிகள் கோடி.

பல ஆக்கங்களை மிக தெளிவான சிந்தனையுடன் அதன் உட்கருத்து புரிந்து கொள்ளும் வகையில் மிக நீண்ட விளக்கத்துடன் தாங்கள் தரும் செய்தின் வடிவம் பாராட்டுக்குரியது.

இத்தனை வருட அனுபவத்தின் மூலமும் பல சமூக ஆர்வலர்களின், என்னை போன்றவர்களின் கருத்துக்கள் மூலமும் மக்களின் எண்ண வோட்டம் என்ன என்பதை புரிந்து இருப்பீர்கள். இந்த தருணத்தில் விரிவாக எழுத விரும்பவில்லை.

தங்களின் ஒருசார்பு நிலை என்பது நகராட்சி தேர்தல் முதற்கொண்டு தொடர்கிறது. அதனை சீர்தூக்கி பார்த்து நடுநிலையை கடைபிடிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

தங்களின் ஒரு சார்பு நிலை காரணமாகத்தான் மேலும் பல இணையதளங்கள் உருவாக அடித்தளமாக அமைந்தது. அதுவும் நன்மைக்கே. அதனால் தான் பலதரபட்ட செய்திகள் பல கோணங்களில் வெளிவர தொடங்கின. படிக்கும் வாசகர்களுக்கும் பகுத்தறிவாய்ந்து உண்மை நிலையை அறிய அரிய வாய்ப்பாக அமைந்தது.

தலைவிக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே எந்த வகையிலாவது மனகசப்பை உண்டாக்கி அதில் குளிர் காய்ந்து அற்ப சந்தோஷம் அடைய நம்மில் பலர் உள்ளார்கள். அதற்கு உங்களை போன்ற ஊடகங்கள் வழிவகுத்து கொடுக்காமல் பார்த்து கொள்வது தார்மீக கடமை.

முன்னால் உறுப்பினர் லுக்மான் அவர்கள் தனது ஆதங்கத்தை மிக தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். சகோதரர் முத்து இஸ்மாயிலுக்கும் தெளிவு ஏற்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன்.

தலைவியையோ, அல்லது உறுப்பினர்களையோ மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்ற ஒற்றை கொள்கையை கடைபிடிக்காமல் நடந்து என்ன?. உண்மை நிலவரம் என்ன? என்பதை சீர்தூக்கி பார்த்து நடுநிலையாக செயல்பட வேண்டும் என்பதே என்னை போன்றவர்களின் எண்ணம்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். சமீபகாலமாக எல்லா தரப்பு கருத்தாளர்களின் கருத்துக்கும் மதிப்பளித்து வெளியிடும் பாங்கு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

பல கருத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளது போல் :

---- Login/password system
---- Rating System
---- Wedding, Birth, death, - separate column
…… பெருநாள் செய்திகளின் ஒன்றுபட்ட தொகுப்பு
…… பாபநாசம் அணை, கடலின் நிலவரம் - வாரம் ஒரு முறை
…… நேர்காணல் நிகழ்ச்சி
……. உள்ளூர், வெளியூர், வெளிநாடு - வேலைவாய்ப்புக்கு தனி பிரிவு

போன்றவைகளில் மாற்றங்களை கொண்டு வந்தால் மேலும் சிறப்பாக அமையும் என்பது எனது கருத்து.

தொடரட்டும் உங்கள் சேவை என்று மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...வாழ்த்துக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [21 December 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32140

பதினாறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காயல்பட்டணம்.காம் க்கு எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.

நம் ஊர் செய்திகள் மற்றும் நம் சமுதாய செய்திகளை தொடர்ந்து வெளி இட்டு இன்னும் பல வருடங்கள் நமது மக்கள் பயன்பெறும் வகையில் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்.

வாழ்க பல்லாண்டு ... வளமுடன் & நலமுடன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by palappa Muhyiadeen Abdhul Kaathar (chennai) [22 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32151

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹித் த ஆலா வ பறகாத்தஹு.

எல்லாம் வல்ல இறைவனின் தனிப் பெருங் கருணையாலும்,தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் நல்லாசியாலும்,உத்தம சஹாபாக்களின் ரலியல்லாஹு அன்ஹும் நற்ப் பேற்றாலும்,உன்னத இமாம்கள்,உயரிய இறை நேசச் செல்வர்களின் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களின் துஆ பறக்கத்தாலும் நமது காயல் பட்டணம்.தளம் தொடர்ந்து நடு நிலையோடு செய்திகளைத் தருவதோடு சமூக,பொருளாதார,சமய நல்லிணக்க கட்டுரைகளையும்,மாணவச் சமுதாயம் பயன் பெரும் வகையில் கல்வி வழிக் காட்டுக் கட்டுரைகளையும் தந்து நமதூரின் ஒற்றுமைக்கு உறு துணை புரிவதன் மூலமும்,நமதூர் முன்னேற்றத்திற்கு பேருதவி புரியட்டுமாக!நமதூரின் மூத்த இணைய தள சேவை மையம் என்றப்பெருமையோடு தனது பதினாறாமாண்டு சேவையில் அடியெடுத்து வைக்கின்றது அல்ஹம்துலில்லாஹ்.எல்லாம் வல்ல அல்லாஹ் நமது காயல் பட்டணம்.காம் சேவையில் நேரடியாக, மறை முகமாக பங்கெடுக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் சரீர சுகத்தையும்,நீடித்த ஆயுளையும்,தேவையான பறக்கத்தையும் தந்தருள வேண்டும் என்ற இறை வேண்டலுடன் எனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்வதுடன்,கருணையுள்ள ரஹ்மான் எனது இறை வேண்டுதலை அங்கீகரித்தருள்வானாக!ஆமீன். வஸ்ஸலாம்

இப்படிக்கு பாலப்பா ஏ.கே.முஹிய்யதீன் அப்துல் காதர் BA, மண்ணடி, சென்னை தொடர்புக்கு-91762 19236


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved