தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு அட்டை இதுவரை கிடைக்காதவர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியரகத்தை அணுகுமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்த செய்திக்குறிப்பு:-
தூத்துக்குடி மாவட்டத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 12 ஆயிரம் நபர்களுக்கு 23 கோடி செலவில் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அட்டை கிடைக்கப்பெறாதவர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள District Kioskஐ உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
15.12.2013 தேதி முதல், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயனடைய வாய்ப்புள்ளது. இத்தகைய அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி நலமுடன் வாழ வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross