மாவட்ட அளவிலான தொழில் ஊக்குவிப்பு முகாம் 28.12.2013 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட, மாவட்ட அளவிலான தொழில் ஊக்குவிப்பு முகாம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 28.12.2013 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில்கள் சங்க அரங்கம், ராம் நகர், எட்டையபுரம் ரோடு, கே.டி.சி. டெப்போ அருகில், தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில், தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலர்கள், வங்கியாளர்கள், அரசு நிதி நிறுவன அலுவலர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் மற்றும் தொழில் சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டு புதிய தொழில் துவங்க ஆலோசனைகள், பயிற்சிகள், நிதி வாய்ப்புகள், அரசு மானியங்கள், சலுகைகள் மற்றும் உரிமங்கள் பெறுதல் பற்றி விரிவாக எடுத்துரைக்க உள்ளார்கள்.
எனவே புதிதாக தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள், ஏற்கனவே உள்ள தொழிலை அபிவிருத்தி செய்ய விழைபவர்கள், முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள், இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம். ரவி குமார், IAS அவர்கள் கேட்டு கொண்டுள்ளார்கள்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|