நுகர்வோர் தமது கைபேசி எண்களை மின் வாரியத்திடம் சமர்ப்பித்தால், அவர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய விபரங்கள் குறித்து குறுஞ்செய்திச் சேவை வழியே தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் (பொறுப்பு) சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் இணைப்பு வழங்கப்பட்ட மின் நுகர்வோர்களில் தங்களுடைய கைபேசி எண்ணை பதிவு செய்யும் மின் நுகர்வோருக்கு, “மதிப்பு கூட்டு சேவை”யாக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் அவர்களது மின் கட்டணம், கட்டணம் செலுத்த கடைசி நாள் போன்ற விபரங்களைத் தெரிவிக்க வசதி செய்யப்பட்டு வருகிறது.
எனவே, திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் இந்த வசதியைப் பெற தங்களது கைபேசி எண்ணை - சம்பந்தப்ப்ட பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |