காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரது ஜனாஸா, அன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பெங்களூரு காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவரும், நஸூஹிய்யா மகளிர் மத்ரஸாவின் நிறுவனர் தலைவருமான மரியாதைக்குரிய ஒத்தமுத்து ஹாஜி எம்.எம்.உவைஸ் என்ற உவைஸ் ஹாஜியார் அவர்கள் 17.12.2013 அன்று காலையில் மரணமடைந்த செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பொதுநலப்பணி செய்ய வயதும், முதுமையும் ஒரு தடையில்லை என்பதை அன்றாடம் நம் ஊரின் நிகழ்வுகளில் பங்கெடுத்து பணியாற்றிய பண்பாளர் நம்மை விட்டும் பிரிந்து விட்டார்கள். அவர்கள் செய்த அற்புதமான அனைத்து பணிகளையும் அல்லாஹ் கபூல் செய்து அவர்களுக்கு நன்மைகளாக மாற்றி கொடுப்பானாக.
அவர்களின் சேவை மனப்பான்மையையும், அழகிய நற்பண்புகளையும் நம் அனைவருக்கும் இறைவன் தந்தருள்வானாக.அவர்கள் மறுமை வாழ்க்கை சிறப்பாக அமைய இரையை இறைஞ்சுவோம்.சொர்க்கத்தின் சொந்தமானவராக இறைவன் ஆக்கிகொள்வானாக ஆமீன்.
இறைவனுடைய நாட்டப்படி ஏற்பட்டுவிட்ட இந்த மரணத்திற்காக நாங்கள் ஸபூர் செய்து கொண்டோம்.
யா அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளை பொறுத்து, உயரிய சுவனபதியில் அவர்களை அமரச் செய்வாயாக, ஆமீன்.
எங்கள் சங்கத்தின் அங்கத்தினர் அனைவரும் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் சலாம் எனும் சாந்தியை சமர்பிக்கின்றோம்.
வஸ்ஸலாம்.
இவண்,
பெங்களூரு கா.ந.மன்றத்தின் சார்பாக,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்,
துணைத் தலைவர், பெங்களூரு.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|