காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரது ஜனாஸா, அன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவரும், நஸூஹிய்யா மகளிர் மத்ரஸாவின் நிறுவனர் தலைவருமான மரியாதைக்குரிய ஒத்தமுத்து ஹாஜி எம்.எம்.உவைஸ் என்ற உவைஸ் ஹாஜியார் அவர்கள் 17.12.2013 அன்று காலையில் மரணமடைந்த செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பொதுநலப்பணி செய்ய வயதும், முதுமையும் ஒரு தடையில்லை என்பதை அன்றாடம் நம் ஊரின் நிகழ்வுகளில் பங்கெடுத்து பணியாற்றிய பண்பாளர் நம்மை விட்டும் பிரிந்து விட்டார்கள். அவர்கள் செய்த அற்புதமான அனைத்து பணிகளையும் அல்லாஹ் கபூல் செய்து அவர்களுக்கு நன்மைகளாக மாற்றி கொடுப்பானாக. அவர்கள் செய்திட்ட சமுதாய பணிகளுக்கும், அவர்களின் குடும்பத்தின் வெற்றிடத்திற்கும் அல்லாஹ் அதற்க்கு பகரமான ஒன்றை வழங்குவானாக.
அவர்களை பிரிந்து தவிர்க்கும் அவர்களின் குடும்பத்தார்கள் யாவருக்கும் அல்லாஹ் சபூர் எனும் மேலான பொறுமையை கொடுப்பானாக. அவர்களின் மறு உலக வாழ்க்கையை வெற்றியாக்கி வைப்பானாக என பிரார்த்தித்து எங்கள் சங்கத்தின் அங்கத்தினர் அனைவரும் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் சலாம் எனும் சாந்தியை சமர்பிக்கின்றோம். வஸ்ஸலாம்.
இவ்வாறு அபூதபீ காயல் நல மன்றம் சார்பில், அதன் செய்தித்துறை பொறுப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |