காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - அதன் தலைவரும், நஸூஹிய்யா மகளிர் மத்ரஸாவின் நிறுவனர் தலைவருமான ஒத்தமுத்து ஹாஜி எம்.எம்.உவைஸ் என்ற உவைஸ் ஹாஜியார் காலமானார். அவருக்கு வயது 93.
அவரின் மறைவு குறித்து தாய்லாந்து காயல் நல மன்றம் (THAKWA) சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
இறைவனிடம் இறைஞ்சுகிறோம்!!!
காயல்பட்டணம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை தலைவரும், காயல்பட்டணம் நாட்டாமை முஸ்லீம் முத்துச்சாவடியின் தலைவரும், K.M.T. மருத்துவமனையின் துவக்க கால தலைவரும் நிர்வாகியும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - அதன் தலைவரும், நஸூஹிய்யா மகளிர் மத்ரஸாவின் நிறுவனர் தலைவருமான மரியாதைக்குரிய ஒத்தமுத்து ஹாஜி எம்.எம்.உவைஸ் என்ற உவைஸ் ஹாஜியார் அவர்கள் 17.12.2013 (இன்று) காலையில் மரணமடைந்த செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஊர் நலம் பேணுவதில் ஒப்பற்றவராக திகழ்ந்த அவர்களின் மறைவிற்கு எங்களது ஆழ்ந்த இரங்களை உரித்தாக்குகின்றோம். வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் மறுஉலக வாழ்வை உயர்வாக்கித்தர இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறோம்.
எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக! ஆமீன்!
அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக! ஆமீன்!
அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
வாவு ஷம்சுத்தீன்,
தலைவர், தாய்லாந்து காயல் நல மன்றம் (THAKWA).
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|