காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இன்று காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் முஹம்மத் பாக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறைவனிடம் இறைஞ்சுகிறோம்
இதய ஆறுதலைத் தெரிவிக்கிறோம்.
காயல்பட்டணம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை தலைவரும், காயல்பட்டணம் நாட்டாமை முஸ்லீம் முத்துச்சாவடியின் தலைவரும், K.M.T. மருத்துவமனையின் துவக்க கால தலைவரும் நிர்வாகியும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - அதன் தலைவரும், நஸூஹிய்யா மகளிர் மத்ரஸாவின் நிறுவனர் தலைவருமான மரியாதைக்குரிய ஒத்தமுத்து ஹாஜி எம்.எம்.உவைஸ் என்ற உவைஸ் ஹாஜியார் அவர்கள் 17.12.2013 (இன்று) காலையில் மரணமடைந்த செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நமதூரும், நம் சமுதாயமும் ஓர் அற்புதமான மனிதரை இழந்துவிட்டது. எல்லோருடனும் பண்போடும் பேசும் நல்லவரையும், இறைவழியில் நற்கொடை செய்தவரையும், சமுதாயத்தின் தலைவரையும் இழந்து நாமெல்லாம் வாடுகிறோம்.
இறைவனுடைய நாட்டப்படி ஏற்பட்டுவிட்ட இந்த மரணத்திற்காக நாங்கள் ஸபூர் செய்து கொண்டோம்.
யா அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளை பொறுத்து, உயரிய சுவனபதியில் அவர்களை அமரச் செய்வாயாக, ஆமீன்.
மர்ஹூம் அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வளவு பெரிய இழப்பைத் தாங்கும் இதயத்தையும், அழகிய பொறுமையையும் அவர்களுக்கு வழங்க இறைவனிடம் மனமுருக பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |