காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - அதன் தலைவரும், நஸூஹிய்யா மகளிர் மத்ரஸாவின் நிறுவனர் தலைவருமான ஒத்தமுத்து ஹாஜி எம்.எம்.உவைஸ் என்ற உவைஸ் ஹாஜியார் காலமானார். அவருக்கு வயது 93.
சுவாசக் கோளாறு, காய்ச்சல் உள்ளிட்ட சில நோய்களால் கடந்த சில நாட்களாக அவதியுற்றிருந்த அவர், இம்மாதம் 11ஆம் தேதி கே.எம்.டி. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி - இன்று காலை 06.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
அன்னார் மர்ஹூம் ஒத்தமுத்து அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் முஹம்மத் மீராஸாஹிப் என்பவரின் மகனும்,
மர்ஹூம் அல்ஹாஜ் கத்தீப் முத்து முஹம்மத் என்பவரின் மருமகனும்,
2. Re:...:...இனாலிலாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் posted byM.S.ABDULAZEEZ (Hk ( Camp ))[17 December 2013] IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 31992
எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!
அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!
அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.
3. OUR COMMUNITY LOSS A GREAT AND PIOUS LEADER- INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON posted byV.M.T.MOHAMED HASAN (TUNG CHUNG, HONG KONG)[17 December 2013] IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 31993
ASSALAMU ALAIKUM.
INNA ILILLAHI WA INNA ILAIHI RAZIOON. MAY ALMIGHTY ALLAH FORGIVE HIS SINS AND PLACE HIM IN JANNATHUL FIRDOUS AMEEN.
MARHOOM HAJI M.M.UVAIS APPA IS VERY HUMBLE, GENEROUS,RELIGIOUS,PIOUS PERSONALITY PERSON AND GUIDE MANY YOUTH AND ASSOCIATIONS. HEAVILY INVOLVED IN ALL KIND OF SOCIAL, COMMUNAL ACTIVITIES AND ALSO HE IS WITH THE INDIAN UNION MUSLIM LEAGUE AND HE IS THE CO FOUNDER FOR MANY WELFARE ASSOCIATIONS, SCHOOLS, K.M.T. HOSPITAL, BAITHUL MAL, KAYALPATNAM UNITED FORUM.
HE SACRIFIES MOST OF HIS TIME FOR THE WELFARE OF NEEDY PEOPLE AND FOR THE COMMUNAL ACTIVITIES. HE IS GOOD AT SOLVING MANY PROBLEMS AMONG FAMILIES. VERY FAMOUS AND POPULAR LEADER AMONG ALL KAYALITES.
HE TREAT EVERYONE VERY KINDLY.
INDEED OUR COMMUNITY LOSS A GREAT AND PIOUS LEADER.
MAY ALLAH GIVE SABR FOR US TO BEAR THIS GREAT LOSS, AMEEN.
SALAAM TO ALL FAMILY MEMBERS.
ASSALAMU ALAIKUM WA RAHMATHULLAHI WA BARAKATHAHU.
FEE AMANILLAH
V.M.T.SHAIK SULAIMAN & FAMILY AND V.M.T. MOHAMED HASAN & FAMILY.
4. Re:...நேர்மை - தூய்மையின் மறு பெயர் posted bymackie noohuthambi (kayalpatnam)[17 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31994
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
பேச்சிலே இனிமை - தொழிலே நேர்மை - பொது வாழ்விலே தூய்மை இவற்றை தன் வாழ்வியலாக கொண்டு வாழ்ந்த பெருந்தகை. ஊருக்காக ஓய்வின்றி உழைத்தவர்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோம் என்ற பெருமை எனக்குண்டு. எனது தந்தை மக்கி ஆலிம் அவர்களுக்கு மிக நெருங்கிய நண்பர். அதனால் என்னை பெயர் சொல்லி அழைக்காமல், "ஆலிம்சா மகனே" என்றுதான் கூப்பிடுவார்கள்.
ஒரு சொத்து பிரச்சினை வந்தபோது என்னைக் கூப்பிட்டு "நான் சொல்வதை கேப்பியா?"என்றார்கள். "கேட்பதா, ஒரு வெள்ளை தாளில் நீங்கள் கையெழுத்து போட்டு கேட்டாலும் தருகிறேன்" என்றேன். மறுபக்கம் பேசினார்கள். அவரும் "நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பேன்" என்றார். "ஆளைக் கூபிட்றேன் , இரு என்றார்கள்" "நான் இருக்க தேவை இல்லை. நீங்கள் போனில் சொல்லுங்கள், நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றேன். அரை மணி நேரத்தில் போன் வந்தது. மூன்று வருட பிரச்சினை முப்பது நிமிடங்களில் தீர்ந்தது.
இப்படி நமதூரில் உள்ளவர்களுக்கு நிறையவே அனுபவங்கள் இருக்கும்."சமாதான் தூதுவர்" என்று காயல்பட்டினத்தில் ஒரு நோபெல் பரிசு இருந்தால் அந்த பரிசை பெறுவதற்கு மிகவும் தகுதியானவர்கள். அல்லாஹ் அவர்கள் மண்ணறையை சுவர்க்க பூங்காவாக ஆக்கி மேலான சுவன வாழ்வை கொடுத்தருள்வானாக. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக. நம் எல்லோருக்கும் நமக்கு நாமே பொறுமை சொல்லிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் நம் காயல்பட்டின் ஒட்டு மொத்த குடும்பத்தில் ஒருவர்.
5. Re:... posted byMAMINAKAR (Chennai)[17 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31995
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அல்லாஹ் எங்கள் பெரியப்பாவின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக! ஆமீன். எங்கள் குடும்பத்தின் பெரிய மனிதரை நாங்கள் இழந்தது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியே. அல்லாஹ்வின் கட்டளைக்கு நாங்கள் சபூர் செய்து கொண்டோம். எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள்வானாக! அவர்களின் மறுமைக்காக துஆ செய்யுமாறு மிக அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். posted byM.A.C.AHAMED THAHIR (NEW DELHI)[17 December 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31999
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பேச்சிலே இனிமை - தொழிலே நேர்மை - பொது வாழ்விலே தூய்மை இவற்றை தன் வாழ்வியலாக கொண்டு வாழ்ந்த பெருந்தகை. ஊருக்காக ஓய்வின்றி உழைத்தவர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹு, அன்னாரின் பிழைகளை பொறுத்து , ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக, ஆமீன்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு சபூர் என்னும் அழகிய பொறுமையையும் அல்லாஹ் கொடுத்தருள்வானாக.ஆமீன்.
13. Re:... posted byLukman (chennai)[17 December 2013] IP: 223.*.*.* India | Comment Reference Number: 32004
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
தள்ளாத வயதிலும் ஊர் நலனுக்கஹா பாடுபட்டவர்கள்.
எல்லோர்களுடனும் இன்முகத்துடன் பழகுபவர்கள்.
விஷய ஜானமிக்கவர்கள். மாற்று கருதுடயவர்களையும்
மதிக்ககுடியவர்கள். பொது வாழ்க்கையில் தூய்மையானவர்கள்.
அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னிப்பானாக.
அ. லுக்மான்
கோமான் தெரு.
14. Re:... posted byOMER ANAS (DOHA QATAR..)[17 December 2013] IP: 37.*.*.* | Comment Reference Number: 32006
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். எல்லாம் வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து, ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சொர்க்கப் பதவியை கொடுத்து அருள்வானாக! ஆமீன்! அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், மற்றும் அனைவர்களுக்கும் சபூரை கடைபிடிக்க செய்வானாக!
15. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் posted byMBS abu (Chennai Amanjikarai )[17 December 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 32007
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். எல்லாம் வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து, ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சொர்க்கப் பதவியை கொடுத்து அருள்வானாக! ஆமீன்! அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், மற்றும் அனைவர்களுக்கும் சபூரை கடைபிடிக்க செய்வானாக!
22. காயல் நகரம் ஒரு தலைவரை இழந்தது. posted byB.M.லுக்மான் மௌலானா (ஜெய்ப்பூர் )[17 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32018
அஸ்ஸலாமு அலைக்கும்.எங்கள் அன்பு தோழ அப்பா பெரியவர் உவைஸ் அப்பா அவர்கள் மரணச்செய்தியறிந்து மிக்க கவலைக் கொண்டோம்.( இன்னாலில்லாஹி வின்னா இலைஹி ராஜிவூன் )
பெரியவர் அவர்களோடு என் சிறு வயது முதல் பழகும் வாய்ப்பு பெற்றவன் என்ற முறையில் எனக்கு பல விசயங்கள் என் நினைவலைகளில் ஓடி மறைகிறது.
சிறந்த நுண்ணறிவும் , பொது விசயங்களில் மிக்க அக்கறையும் அவாவும் கொண்டு திகழ்ந்த அன்னாரிடம் நாங்கள் கற்றுக்கொண்ட உலக அறிவு நிறைய.சில பல விசயங்களில் இளைஞர்களுக்கே உண்டான வேகத்தோடு நாமெல்லாம் இருக்கையில் அதையெல்லாம் முறையோடு நெறிப்படுத்தி இந்த பிரச்சினைகளினால் எதிர்காலத்தில் என்ன எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதை நமக்கு புரிய வைப்பதில் வல்லவர் ஆவார்கள்.
நமது வயதையொத்த அல்லது அதை மிஞ்சிய அவர்களது அனுபவ அறிவு கொண்டு நம் ஊர் விசயங்களில் நல்ல பல முடிவுகளை எடுத்ததன் மூலம் இந்த ஊரின் வரலாற்று ஏஏடுகளில் அழியா பெயரும் தவிர்க்க முடியா தனி இடமும் பெற்று திகழ்ந்தார்கள். நமதூரின் பழமையானதும் முதன்மையானதும் ஆன பெரிய பள்ளிவாசலில் அமைந்த சதுக்கையின் கடைசி தூணாக திகழ்ந்த அன்னார் அவர்களின் சேவைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்தி அதற்கு பிரதிபலனாக மறுமையில் சிறந்த உயர்நத பதவிகளை வழங்குவானாக.ஆமின்.
அன்னாரை இழந்து தவிக்கிற அவர்கள் குடும்பத்திற்கும் அழகிய பொறுமையை அல்லாஹ்வழங்குவானாக.ஆமின்.இன்னுமொரு சிறந்த தலைவரை இந்த காயல் மண்ணிற்கு அல்லாஹ் அடையாளம் காட்டுவானாக.ஆமின்
26. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[17 December 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32024
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
உவைஸ் ஹாஜியாரின் மரண செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தோம். இவர்களின் மறைவு காயலுக்கு ஒரு மாபெரும் இழப்பு.
அதிகம் பேசாமல், மிக அதிகம் சாதித்தவர். ஒற்றுமை. ஊர் நலனில் அதிகம் அக்கறை கொண்டவர்கள்.
சினிமாவில் காட்டக்கூடிய நாட்டாமையை, இவர்களை கண்டு அறிந்தோம்.
முடுக்கு பிரச்சனை, சகோதர சொத்து பிரச்சனை, கொடுக்கல் வாங்கல்,குடும்பப் பிரச்சனை போன்ற தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைக் குள்ளானவர்கள் இறுதியில் உதிக்கும் வார்த்தை "சரி..உவைஸ் ஹாஜியிடம் போயி பேசுவோம்.." என்றே இருக்கும்.
கிருபை உள்ள வல்ல அல்லாஹ், இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தின் கதவை திறந்து, அதன் நறுமணத்தையும், காற்றையும் இவர்களை கபுரில் சுவாசிக்க செய்வானாக. சுவனத்தில் உயர்ந்த பதவியை அளித்து அருள் புரிவானாக.
அன்னாரின் பிரிவில் வாடும் குடும்பத்தார்கள், ஊர் மக்கள் ஆகியோருக்கு எங்களின் வருத்தத்தையும், நற் சலாதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சாளை S.I.ஜியாவுத்தீன்,
துணைத் தலைவர்,
தம்மாம் காயல் நற்பணி மன்றம்
சௌதி அரேபியா
28. ஐக்கியத்தின் முகவரி! posted byMauroof (Dubai)[17 December 2013] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32026
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் எண்ணற்ற நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
33. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[17 December 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32031
அஸ்ஸலாமு அழைக்கும்
ஹாஜி உவைஸ் அவர்கள் நம் காயல்பட்டினத்தில் பொது நலனில் ஆர்வம் கொண்டவர் .இது போன்ற மக்கள் இறைவனடி சாரும் போது ஊருக்கும் மக்களுக்கும் அது ஒரு பாரிய இழப்பு , எல்லாம் வல்ல இறைவன் அவர்களுடைய பாவம்களை மனித்து உயர்வான் சுவனத்தை கொடுக்கட்டும் ஆமீன் .
37. கண்ணியமிகு பெருந்தகையாளர் மறைவு posted byW.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (காயல்பட்டணம்)[17 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32035
'என் கடன் பணிசெய்து கிடப்பதே' என்ற மூதுரைக்கேற்ப ஊர் நலனில் மிகுந்த அக்கறையோடு, தனது பழுத்த அனுபவ அறிவு முதிர்ச்சி மற்றும் நிர்வாகத் திறமையோடும் நமதூரின் பல்வேறு பொதுநல அமைப்புக்களின் சிறப்பான தலைமையேற்று நடத்தியும், அரிய பல நல் ஆலோசனைகளை வழங்கியும் வாழ்ந்த பெருந்தகையாளர். அன்னாரின் மறைவு பேரிழப்பாகும். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியில் சேர்த்தருள்வானாகவும் ஆமீன்.
W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் மற்றும் குடும்பத்தினர்கள்
38. Re:... posted byV.S.H. Syed Mohamed Ali (Riyadh)[17 December 2013] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32036
இன்னா லில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன் . எல்லாம் வல்ல அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவன பூங்காவை அன்னாருக்கு நிரந்தரமாக்கி தந்தருள்வானாக ஆமீன்.
நம் உவைஸ் அப்பா அவர்கள் நமது ஊரின் கவுரவமான பொக்கிஷமாக திகழ்ந்தார்கள். அவர்களை பார்த்தது , அவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்தது நமக்கெல்லாம் பெருமை. உலகமெல்லாம் பரவலாக இருக்கும் நமதூர் மக்கள் செய்யும் நற்பணிகள் மேலும் சிறக்க பல வகையில் நம் உவைஸ் அப்பா அவர்கள் ஊக்கமூட்டினார்கள்.
நம் அப்பா அவர்கள் காயல் மாநகர் என்ற பெரிய குடும்பத்திற்கே அப்பாவாக திகழ்ந்தார்கள். நம் அப்பாவின் மறைவிற்கு நாம் அனைவர்களும் சபூர் செய்ய வேண்டும்.
அன்னாரின் நாட்டப்படியும், என்னப்படியும் நம் ஊரின் பாரம்பரியமான கலாச்சாரத்தையும், ஒற்றுமையையும் நாம் தலைமுறை தலைமுறையாக பேணி காக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.
எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!
அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக! ஆமீன்!!
மர்ஹூம். உவைஸ் அப்பா கனைப்பு சவண்டு கேட்டவுடன் எல்லா பசங்கல்லும் ஓடி விடுவோம். பெரிய பள்ளிவாசல் ரவுண்டு சடுகையில் தினமும் உட்கார்து இருப்பர்ஹல். அவர்ஹல் போன பிறகு விளையாட்டு துவங்கும்.
மர்ஹூம் உவைஸ் அப்பா அவர்களின் குடும்பத்தார் அனைவர்ஹல்லுகும் எங்களது "அஸ்ஸலாமு அலைக்கும்."
ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் + குடும்பத்தினர்,
குளம். ஷேய்க் அப்துல் காதிர்,
இப்ராகிம் ஜமீல், கே.
நஹ்வி. சட்தக்கு ஹாபீல்.
ரியாத். சவுதி அரேபியா.
அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹித் த ஆலா வ பறகாத்தஹு
எனது பாச மிகு மூத்த சகோதரர் ஆலி ஜனாப் அல்ஹாஜ் பாலப்பா ஏ.கே.யாசீன் அவர்களுக்கும்,எனக்கும்,மட்டுமல்லாமல் நமதூருக்கே கலங்கரை விளக்கமாக இருந்து ஏழைப் பணக்காரர் வேறுபாடின்றி வழி காட்டியவரும்,தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய சமூக சேவகரும்,எனது மனைவி வழி அப்பா அண்மையில் மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இறை நேசச் செல்வர் ஆலி ஜனாப் அல்ஹாஜ் அல்ஹாபிழ் S.L.அஹமது ஆலிம்(நவ்வரல்லாஹு மர்கதஹு) அவர்களின் நெருங்கிய நண்பருமான ஆலி ஜனாப் அல்ஹாஜ் ஒத்த முத்து M.M.உவைஸ் அவர்களின் மறைவு எங்களுக்கும் நமதூருக்கும் பேரிழப்பாகும்.இருப்பினும் இறை நாட்டத்தை ஏற்றுக் கொண்டு நாமும் பொறுமையாக இருந்து அன்னாரின் குடும்பத்தார்க்கும் எல்லாம் வல்ல இறைவன் பொறுமையைக் கொடுத்தருள்வானாகவும்!மேலும் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌசென்னும் சொர்க்கத்தின் உயர்ந்த பதவியை கொடுத்தருள்வானாகவும்!என நானும்,எங்கள் குடும்பத்தார் சார்பாகவும் கருணையுள்ள ரஹ்மானகிய ஏக இறைவனிடம் இரு கரமேந்தி பிரார்த்திக்கின்றோம்.வல்ல இறைவன் எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்
இப்படிக்கு
ஜனாப் ஆலி ஜனாப் அல்ஹாஜ் பாலப்பா A.K.செய்யது
முஹம்மது யாசீன் மற்றும் குடும்பத்தார்,
பாலப்பா A .K .முஹிய்யதீன் அப்துல் காதர்
மற்றும் குடும்பத்தார்.
44. Re:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA)[17 December 2013] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32042
செனட் சபையின் பில்லர் வீழ்ந்து விட்டது.
சிறந்த பண்பாளர், சமாதான விரும்பி, எத்தகைய பிரச்சினையும் மிக எளிதாக கையாண்டு தீர்வு காண கூடியவர்.
நமதூரில் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்ற சமயத்தில் வாலிப பிள்ளைகள் உணர்ச்சி வசப்படும் போது பொறுமையாக அவர்களை அமைதி படுத்தி இந்த பிரச்சினையை இது போன்று கயான்றால் தான் நல்லது என்பார்கள். அந்த சமயத்தில் எம் போன்றவர்களுக்கு கசப்பாக இருக்கும் அவர்களின் முடிவு, பின்னர் தான் அவர்கள் கையாண்ட விதம் மிக சரியானது என்பது தெரியும். அவ்வளவு ஆழமாக சிந்தித்து செயல் படுத்துபவர்களில் உவைஸ் ஹாஜி அவர்களுக்கு நிகர் அவர்களே.
அன்னாரின் இழப்பு நமதூருக்கு பேரிழப்பு. எல்லாம் வல்ல அல்லாஹ் உவைஸ் ஹாஜியார் விட்டு சென்ற சமுதாய பணிகள் யாவும் நமது ஐக்கிய பேரவை நிருவாகிகள் ஒற்றுமையாக செயல் பட்டு அன்னார் காட்டிய வழியில் செயல் பட நல்லருள் புரிவானாக ஆமீன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்
45. ஆழ்ந்த இரங்கல்கள் posted byசாளை ஷேக் சலீம் (Dubai)[17 December 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32043
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ...
கண்ணியத்திற்குரிய உவைஸ் ஹாஜியார் அவர்களின் வபாஃத்து அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தோம். காயல்பட்டினம் என்றாலே உனக்கு உவைஸ் ஹாஜியார் அவர்களை தெரியுமா என்று பிறர் கேட்க்கும் அளவிற்கு நமதூரின் முகவரியாகவே வாழ்ந்து விட்ட ஒரு மாமனிதரின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஓன்று. தன்னலமன்ற வெள்ளாந்தியான மனதிற்கு சொந்தக்காரர். நமதூரின் எதிர்காலத்தை பற்றி காணாத கனவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு முற்ப்போக்கு சிந்தனையும் சமூக நோக்கும் கொண்ட வெண்தாடி வேந்தர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து அவர்களின் மண்ணறையை ஒளிமயமாக்கி மறுமையில் சுவனபதியில் நல்லடியார்களுடன் தரித்திருக்க அருள் பாலிப்பானாகவும் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார்கள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் பொறுமையை கொடுதருல்வானாகவும். ஆமீன்
இவண்
சாளை ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தார்கள்
துபாய் - அமீரகம்
சமுதாயதிற்கென தன் வாழ்வை அர்ப்பணித்த பெரியவர்களில் ஒருவர் நம்மை விட்டு பிரிந்துள்ளார்கள். இவர்களின் மரணம் அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் நம்தூருக்கே பெரிய இழப்பாகும்.
வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாகிய ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக
51. காயலின் கனக மகுடத்தில் ஒளிவீசிய ரத்தினம்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.)[17 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32050
காயலின் மணிமகுடத்திலிருந்து ஒளிவீசிக்கொண்டிருந்த விலைமதிப்பில்லா ரத்தினக்கல் ஒன்று உதிர்ந்து விட்டது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜிய்யூன்.
சேவைச்செம்மல் கண்ணியத்திற்குரிய பெருந்தகை உவைஸ் ஹாஜியார் அவர்களின் மண்ணறையை எல்லாம் வல்ல நாயன் ஒளிமயமாக்கி மறுமையில் மேலான சுவனபதியை வழங்கியருள்வானாக...ஆமீன்.
கனத்த மனதுடன்,
-ஹிஜாஸ் மைந்தன் மற்றும் குடும்பத்தினர்,
அம்பலமரைக்காயர் தெரு,
காயல்பட்டினம்.
54. إنا لله وإنا اليــه راجعــون posted bySyed Muhammed Sahib SYS (Dubai)[17 December 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32054
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களையும், பொது நல சேவைகளையும் ஏற்று ஜன்னதுல் பிர்தௌஸ் ல் சேர்த்து வைப்பானாக, ஆமீன்.
அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் சொந்தங்களுக்கு மேலான சபுரை கொடுத்தருள்வானாக.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவபிழைகளை பொருத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்குவானாக அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்தார் யாவேற்கும் சபூரன் ஜமீலை கொடுப்பானாக ஆமீன்
நண்பர் ஒத்த முத்து meerasahib அவர்களுக்கு எனது சலாத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன் .
57. Re:... posted byA.M. Syed Ahmed - Jeddah (Jeddah)[17 December 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32058
Inna lillahi wa Inna Ilaihi Raji’un (Surely we belong to Allah and to Him shall we return). May Almighty Allah dwell him in Jannatul Firdaus (the most beautiful paradise). Ameen.
ஒருவர் எப்படி வாழனும் என்பதற்கு மர்ஹூம் உவைஸ் ஹாஜியார் பெரிய உதாரணம், எவ்வளவு வசதியிலும் தன்னிலை மாறாதவர் பொது வாழ்வில் தன்னை முழுமையாக அர்பணித்தவர் அவர் நம்மில் மறைந்து வாழ்கிறார், அல்லாஹ்
அவர்களின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை அருள்வானாக ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்...
58. Re:... posted byL .A .K .புஹாரி (Hong Kong)[17 December 2013] IP: 110.*.*.* Hong Kong | Comment Reference Number: 32059
கண்ணியத்திற்குரிய எங்கள் அன்பு பெரியவாப்பா அல்ஹாஜ் M.M. உவைஸ் அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள் என்று செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைந்தோம்.
இந்த தள்ளாத வயதிலும்,தன்னலம் பாராமல்,தளராது,தன் கடமைகளை தானே செய்ததோடு ,தன் குடும்பத்தினர்க்கும்,காயல் நகர மக்களுக்கும் பேருதவி ஆற்றி, ஒற்றுமையில் நிலை நிறுத்தி வைத்து விட்டு நம்மில் விடை பெற்று இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் .இன்னாளில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்
இறுதி நாள் வரை இறை சிந்தனையுடன், தொலைநோக்குடன் பொது வாழ்வில் நேர்மையுடனும்,கண்ணியத்துடனும் ,பிரதி பலன் பாராது,சத்தமின்றி சுய விளம்பரமற்ற சேவை செய்த ஓர் மகத்தான தலைவரை நாம் இழந்துவிட்டோம் என்பதில் ஐயம் இல்லை.
எல்லாம் வல்ல அல்லாஹ் பெரியவாப்பா அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி ஒளிமயமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் வுயர் சுவனபதியில் சேர்த்தருள்வானாகவும் ..ஆமீன்.
ஹாஜி A.C.அஜீசுத்தீன் & பிரதர்ஸ்
5.எல்.கே.காலனி.
காயல்பட்டினம்.
[Administrator: ஈமெயில் முகவரி / பெயர் முரண்பாட்டால், பெயர் திருத்தப்பட்டுள்ளது]
59. Re:...condolence posted bysegu abdul cader.s.d. (kayalpatnam)[17 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32060
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
உவைஸ் ஹாஜியாரின் மறைவு நமக்கு மிகவும் பேரிழப்பு!
அவர்கள் காலமெல்லாம் நமதூரின் நலன், சமுதாய நலன்களில் மிகவும் அக்கறை கொண்டவர்களாகவே இருந்தார்கள். ஊர் ஒற்றுமைக்காக பாடுபட்ட் "சமாதான் தூதுவர்" என்றே அவர்களை சொல்லலாம்
அல்லாஹ் அவர்கள் மண்ணறையை சுவர்க்க பூங்காவாக ஆக்கி மேலான சுவன வாழ்வை கொடுத்தருள்வானாக!
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக!.
61. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[17 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32062
அன்னாரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
உவைஸ் ஹாஜியாரின் மறைவு நமக்கு மிகவும் பேரிழப்பு! அவர்கள் காலமெல்லாம் நமதூரின் நலன், சமுதாய நலன்களில் மிகவும் அக்கறை கொண்டவர்களாகவே இருந்தார்கள். ஊர் ஒற்றுமைக்காக பாடுபட்ட் "சமாதான் தூதுவர்" என்றே .அவர்களை சொல்லலாம் ...அன்னாரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு சபூர் என்னும் அழகிய பொறுமையையும் அல்லாஹ் கொடுத்தருள்வானாக.ஆமீன்.
அல்லாஹ் அவர்கள் மண்ணறையை சுவர்க்க பூங்காவாக ஆக்கி மேலான சுவன வாழ்வை கொடுத்தருள்வானாக!ஆமீன்.
65. Re:... posted bykudack buhari (kuala lumpur)[17 December 2013] IP: 203.*.*.* Malaysia | Comment Reference Number: 32066
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்,
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் ஒப்பற்ற தலைவர்மற்றும் கே.எம்.டி. மருத்துவமனையின் தலைவருமாகிய எங்கள் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அல்ஹாஜ் எம்.எம். உவைஸ் அவர்கள் வஃபாத் செய்தி அறிய மிகுந்த கவலை கொள்கின்றோம் எல்லாம் வல்ல இறைவன், மர்ஹூம் அவர்களது பிழைகளைபொறுத்து, ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை அருள்வானாக. ஆமீன்.அன்னாரின் குடும்பத்தினருக்கு சபூர் என்னும் அழகிய பொறுமையையும் அல்லாஹ் கொடுத்தருள்வானாக. ஆமீன்.
ஆழ்ந்த இரங்கலுடன் குடாக் குடும்பத்தார்கள்,
குடாக் புஹாரி
கோலாலம்பூர் -மலேசியா
67. Re.Gem of a person posted byK.M. SEYED AHAMED (Hong Kong)[17 December 2013] IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 32068
Heartfelt condolence on the demise of our beloved Al-Haj M.M. Uvais appa (innalillahi wa inna ilaihi rajioon). May Allah give enough strength to the bereaved family to bear this irreparable loss. May Allah S.W.T. forgive his sins and place him in highest of Jannah. Ameen!
Legend refers to actions that are perceived both by teller and listeners to take place within human history for a person to possess certain qualities that makes him/her stand tall from others.
Alhamdulillah, I and my generations have had the opportunity to witness the real Legend, Marhoom Al-Haj Uvais appa in our life time. Be it leadership quality, vast knowledge, humbleness, community/social service, finding right solution for problems, charity works and many more good deeds, this religious and righteous person had set an example for our future generation to follow. We all wished this nonagenarian’s selfless service to continue but Allah has called him to lead a peaceful life in the world hereafter. Saboor!
எல்லாம் வல்ல இறைவன் .மர்ஹும் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து .அவனின் மிக உன்னதமான '' ஜன்னத்துல் பிர்தௌஸ் '' என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக, ஆமீன்.
மர்ஹும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் '' சபூர் ' என்னும் பொறுமையையும் எல்லாம் வல்ல இறைவன் கொடுத்தருள்வானாக.ஆமீன்.
நம் காயல்மா நகரின் மாபெரும் '' ஆல மரம் '' சாய்ந்ததை எண்ணி நம் யாவர்களின் மனது துடிக்கிறது ..........
சமாதானப்புறா நம்மை விட்டும்
விடைபெற்றது!
சமுதாயத்தின் தலைமகன்
சரித்திரத்தின் நாயகன்
சாதிப்பதற்கு இனி ஒன்றும் இல்லை
தம் வாழ்வில் என்ற சமாதானத்தில் ,
சரீரத்தை சாய்த்தது ஷஹாதத் முழக்கத்துடன் !
தமக்கொத்த பெரியவர்கள்....
தகை சால் நல்சான்றோர்கள்...
தரணி போற்றும் தாய்மார்கள் ....
தங்க நிகர் மங்கையர்கள்...
தாயகத்தின் தம்பிமார்கள்
தங்கையர்கள்...
தம் இதயத்தில் தாங்கிப்போற்றிய தகுதியாளர் ...
தர்க்கம்..தகராறு ..
.தம் குடும்பத்தில் ...பந்தத்தில் ...நட்பு
வட்டாரத்தில் யார் கண்டாலும்
சமயம் பாராது
சளைக்காது சட்டென்று
சமாதானத்துக்கு வித்திட்ட வித்தகர் !
தரத்தால் ஏற்ற த் தாழ்வு கிஞ்சிற்றும் நோக்காதவர் !
சமயம்(நேரம்) அறிந்து செயல்படுவதில்
சாணக்கியர் !
இந்த காலத்தின் காயலின் என்சைக்ளோபீடியா....
இன்றோ அவரை இழந்து
காயல்நகரமோ என்செய்வோம் என்று கவலையில் !
இவர் சென்றதால் மண்ணறை
மகிமை பெற்றதோ?
இம்மாமனிதரை தன் வயிற்றில்
சுமக்கும் பேறு பெற்றதால்!
இனியொரு மனிதர் இவரைப்போல்
இக்காலத்தில் இத்தரணியில் அவதரிப்பாரோ???
இவர் விட்ட இடத்தை
விழாமல் தாங்க
இவர் போல் நமதூருக்கு
இனி யார் வருவாரோ....
இறைவா....
ஏங்குகிறேன்....
இவர் பிரிவை
தாங்கும் சக்தியை முதலில் எனக்கும் ,
இழந்து தவிக்கும் இன பந்துக்களுக்கும் ,
இவர் இழப்பால் வாடும் அனைத்து
இதயங்களுக்கும்
இரக்கத்தோடு ஈந்தருள் வாயா ?
ஈந்த நற்காரியத்தை
ஆஹிரத்தின் நல்சொத்தாய் சுமந்து செல்பவரே ...
உமது அமல்கள் மண்ணறையில் மலரட்டும் !
வல்லோனாம் அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையினால் ,
பூமான் நபிகள்
பொற்கரங்கள் பற்றி
உமது கால்கள்
சுவனத்தை சுவைக்கட்டும் !
இதுவே இறுதியாக நாம் காட்டும்
இறுதி அவா எங்கள் இறைவா.....
ஆமீன் !ஆமீன்!யா ரப்பல் ஆலமீன் !
உமது பாதச்சுவட்டை பார்த்து நடை போடும்,
கே .வீ.ஏ.டி.ஹபீப் முஹம்மது ,
கே.வீ.அஹமது தாஹிர் மர்ஹூம் குடும்பத்தினர் ,
கே.வீ.ஏ.டி.புஹாரி ஹாஜி அறக்கட்டளை ,
காயல் பட்டணம் மற்றும்
தோஹா
கத்தார்
71. மதிப்பிற்குரிய பெருந்தகை... posted byS.K.Salih (Kayalpatnam)[18 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32074
பெருமதிப்பிற்குரிய பெருந்தகை உவைஸ் அப்பா அவர்களின் மறைவு என்னைப் பெரிதும் வாட்டியது.
அவர்கள் சுகவீனமுற்று, கே.எம்.டி. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தியை, ஐக்கியப் பேரவை அலுவலகப் பொறுப்பாளர் மரைக்கா காக்கா மூலமாக 16ஆம் தேதியன்று அறிந்தேன். மனம் துடித்தது. கைவசம் மோட்டார் வாகனம் எதுவுமில்லா நிலையில், லரீஃப் காக்காவின் உதவியுடன் அங்கு சென்று பார்த்தேன். மூச்சுத்திணறலால் அவர்களது மிருதுவான மேனி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. மருத்துவர்கள் இருவர் அங்கேயே இருந்து அவர்களது உடல் நல நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களை நிச்சயம் குணமாக்குவான் என்ற நம்பிக்கையோடு இல்லம் திரும்பினேன்.
மறுநாள் டிசம்பர் 17 காலையில் அவர்களது பிரிவுச் செய்தி எனக்குக் கிடைத்தது. அனைவராலும் மதிக்கப்பட்ட உவைஸ் அப்பா இனி நம்மோடு இருக்கப் போவதில்லையே... என்று நினைக்கையில் கண் கலங்கியது.
நஸூஹிய்யா மத்ரஸாவின் நிறுவனரான அவர்களது தலைமையில், அம்மத்ரஸாவின் மாநில அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிக்காக, அவர்களது இல்லத்தில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தின்போது (http://kayalpatnam.com/shownews.asp?id=12182), அவர்கள் அருகில் இருந்ததே - ஆரோக்கியமான நிலையில் அவர்களை நான் சந்தித்த கடைசித் தருணமாகிப் போனது.
நகர மக்களின் குடும்ப உறவு, சொத்துப் பிரச்சினைகளை அவர்கள் சிரமேற்று தீர்வளித்த விதத்தைப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் அவற்றில் பெற வேண்டிய பாடம் நிறையவே உள்ளது என்று. அந்த புனிதமான - இறைவனுக்கு மிகவும் விருப்பமான - ஷைத்தானுக்கு மிகவும் வெறுப்பான பணியை தன்னலம் பாராது செய்த பெருந்தகைகளுள் ஒருவரான உவைஸ் அப்பா இன்று நம்மோடு இல்லை.
அவர்களது ஜனாஸா நல்லடக்கத்தின்போது, தொழுகை நடத்துவதற்கு முன் - குடும்பத்தார் சார்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டது:
“மறைந்த மர்ஹூம் உவைஸ் ஹாஜியாரின் குடும்பத்தார் அனைவரும் உங்கள் யாவருக்கும் ஸலாம் சொல்கிறார்கள்... அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்னார் தம் வாழ்நாளில் உங்களில் யாருக்கேனும் தவறிழைத்திருந்தால் அதற்காக நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் வாழ்நாளில் உங்களில் யாருக்கேனும் எதுவும் தர வேண்டியிருந்தாலோ, தருவதாக வாக்களித்திருந்தாலோ - அவர்களது மகனார் அதை நிறைவேற்ற ஆயத்தமாக உள்ளார். தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்...”
இவ்வாறு அந்த அறிவிப்பு அமைந்திருந்தது. இதைக் கேட்டவுடன், என் தந்தை மறைந்தபோது, ஜனாஸா தொழுகை நடத்துமுன் நானும், அடக்கம் நிறைவுற்ற பின் என் இல்லம் அருகில் - உவைஸ் அப்பா தலைமையில் நகரப் பிரமுகர்களால் நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் (http://kayalpatnam.com/shownews.asp?id=5484) என் சகோதரர் ஷமீமுல் இஸ்லாமும் இதேபோன்று சொன்னது நினைவுக்கு வந்து சென்றது.
பொதுவாழ்வில் என் தந்தையோடு நெருங்கிய பற்றும், பாசமும் கொண்டிருந்த உவைஸ் அப்பா அவர்கள், அப்பாசத்தை குடும்ப அளவிலும் விரிவுபடுத்தி, சுக - துக்கங்களில் எங்களோடு இணைந்திருந்தமை என் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத நிகழ்வுகள்.
எழுத நிறைய உள்ளன. இடம் போதாது!
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் உவைஸ் அப்பா அவர்கள் அறிந்தோ - அறியாமலோ செய்த பாவங்களையெல்லாம் அவனது அளப்பெருங்கருணையால் மன்னித்து, அன்னாரின் மண்ணறையை சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில் நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் அவர்களையும், நம்மையும் ஒன்றாக இணைத்தருள்வானாக.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக, ஆமீன்.
72. Re:... posted byMiskeen Sahib (Bangkok)[18 December 2013] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 32075
Innalillahi Wa - Inna Ilaihi Raajioon.
Kayal lost a big pioneer and big gentle man. He is the role model for all the youngsters how to handle a problem.
May Almighty Allah forgive his Sins and accept all his A'amaal and all the other good things he done in this world and make his Kabr as a Paradise. Allahumagfirlahu Warhamhu.
74. Re:... posted byS.M.B Faizal (Kayalpatnam)[18 December 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 32084
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் – உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
76. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். posted byyahya mohiadeen (dubai)[20 December 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32114
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மதிப்பிற்குரிய எனது அப்பா உவைஸ் ஹாஜியார் அவர்களின் வபாத்து செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், அதிர்வையும் ஏற்படுத்தியது.
நமது ஊரின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டவர்களில் இவர்களும் ஒருவர். வயதின் முதிர்ச்சி உடலுக்குத்தான், மனதுக்கு இல்லை என்பதை தனது தொடர்சேவைகளால் நிரூபித்த பெருமகனார். ஒவ்வொரு நாளும், KMT மருத்துவமனை சென்று அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள சுகவீனர்களிடமும், அவர்களின் உறவினர்களிடமும் சிகிச்சை முறை, இன்னபிற வசதிகள் குறித்து விசாரித்து தேவையானவற்றை செய்தவர்கள். என்னற்ற நற்சேவைகளை புரிந்தவர்கள்.
எனது அப்பா மர்ஹூம் செய்யது அபு தாஹிர் ஆலிம் அவர்களின் உற்ற நண்பர் ஆதலால் என் பால்ய வயது முதலே அவர்களை நன்கு அறிந்திருக்கிறேன். சிறுவயதில் அவர்களின் காரில் பலமுறை பயணித்திருக்கிறேன். சாந்த முகத்திற்கு சொந்தக்காரர். என்னை காணும்போதெல்லாம் என்னைப்பற்றியும், எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் தவறாமல் விசாரிப்பார்கள்.
எங்கள் குடும்பத்திற்கு அவர்கள் செய்த உதவியை என்றும் எங்கள் நினைவில் நிற்கும். அவ்வுதவிகளுக்கு பிரதிபலனாக எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக.
மர்ஹூம் அவர்கள், நமதூருக்கு செய்த சேவைகளை அங்கீகரித்து, அவர்களின் பாவங்களை மன்னித்து, நல்லமல்களை ஏற்றுக்கொள்வானாக! அன்னாரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும், ஊரார் அனைவருக்கும், அல்லாஹ் பொறுமையை வழங்குவானாக! அன்னவர்களின் மண்ணறையை சுவனப் பூங்காவாக்கி வைப்பானாக. ஆமீன்
77. இளைய தலைமுறைக்கு ஓர் முன்னுதாரரணம் ! posted bySalai.Mohamed Mohideen (Bangalore)[21 December 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 32131
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இச்செய்தியை படித்தவுடன் மனதில் சற்று அதிர்வை ஏற்படுத்தியது. நான்கைந்து வருடங்களுக்கு முன், KMT சென்றபோது உவைஸ் ஹாஜியார் மற்றும் KMT நிர்வாகத்தினர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு அப்புறம் பலமுறை ஹாஜியார் அவர்களை சந்தித்திருக்கின்றேன். இறுதியாக காயல் மெடிக்கல் கார்ட் - க்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் சந்தித்தேன்.
பருவத்தை முதுமையை காரணம் காட்டி சமூகத்தை பொது சேவையை விட்டு தள்ளி நிற்கும் பெரும்பாலானோரில், இந்த தள்ளாத வயதிலும் சமூக அக்கறையுடன் KMT & ஊருக்காக திறம்பட ஆற்றிய பணிகள், சோதனைகளை சாதனைகளாக மாற்றிய தருணங்கள் நம் அனைவருக்கும் ஓர் படிப்பினை ! இளைய தலைமுறைக்கு ஓர் முன்னுதாரரணம் ! மர்ஹூம் அவர்களை போன்று வேறுபாடுகளை துறந்து நமதூரில் நிறைய சமாதான புறாக்கள் உருவாகட்டும் !!
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்குவானாக ! அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்தார் யாவர்க்கும் சபூரன் ஜமீலை என்ற அழகிய பொறுமையை தருவானாக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross