காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - அதன் தலைவரும், நஸூஹிய்யா மகளிர் மத்ரஸாவின் நிறுவனர் தலைவருமான ஒத்தமுத்து ஹாஜி எம்.எம்.உவைஸ் என்ற உவைஸ் ஹாஜியார் காலமானார். அவருக்கு வயது 93.
அவரின் மறைவு குறித்து சென்ட்ரல் துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் சார்பாக இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
வருந்துகிறோம்!! இறைஞ்சுகிறோம்!!!
காயல்பட்டணம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை தலைவரும், காயல்பட்டணம் நாட்டாமை முஸ்லீம் முத்துச்சாவடியின் தலைவரும், K.M.T. மருத்துவமனையின் துவக்க கால தலைவரும், முஹிய்யத்தீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர்களில் ஒருவரும், சென்ட்ரல், சுபைதா பள்ளிகளின் அபிமானியும், சமூக சேவையில் அர்பணிப்பு உணர்வோடு திகழ்ந்தவரும், சமூக நல்லிணக்க ஆர்வலரும், மனித நேயமிக்கவருமான ஒத்தமுத்து அல்ஹாஜ் எம்.எம்.உவைஸ் அவர்கள் இன்று காலை வபாத்தாகிவிட்டார்கள், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஊர் நலம் பேணுவதில் ஒப்பற்றவராக திகழ்ந்த அவர்களின் மறைவிற்கு எங்களது ஆழ்ந்த இரங்களை உரித்தாக்குகின்றோம். வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் மறுஉலக வாழ்வை உயர்வாக்கித்தர இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறோம்.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகி, தாளாளர்,
வாவு அறக்கட்டளை உறுப்பினர்கள,
தலைமையாசிரியர்கள் மற்றும்
ஆசிரியர் - ஆசிரியைகள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள்,
சென்ட்ரல் துவக்க,மேல்நிலைப்பள்ளிகள்,
காயல்பட்டணம்.
குறிப்பு:
இன்று காலை பள்ளி மாணவர்கள் இறைவணக்க கூட்டத்தில் அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து 2 நிமிடங்கள் பிராத்தனை நடத்தப்பட்டது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |