காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரது ஜனாஸா - காயல்பட்டினம் நெய்னார் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
பிரமுகர்கள் வருகை:
திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் தொகுதி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன், அவரது மனைவி டாக்டர் கமலி ஜெயசீலன், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், ஏ.டி.முத்து ஹாஜரா, ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா, ஏ.ஹைரிய்யா, ரெங்கநாதன் என்ற சுகு, ஏ.பாக்கியஷீலா, இ.எம்.சாமி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் ஜனாஸாவைப் பார்த்துச் சென்றனர்.
நல்லடக்கம்:
அன்று மாலை 04.00 மணியளவில், ஹாஜி எம்.எம்.உவைஸ் அவர்களது ஜனாஸா - அன்னாரின் வீட்டிலிருந்து, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அப்பள்ளியின் இமாமும், மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முதல்வரும், தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயுமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ ஜனாஸா தொழுகையை வழிநடத்தினார். மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் துஆ இறைஞ்சினார்.
பின்னர், பள்ளியின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மையவாடிக்கு ஜனாஸா எடுத்துச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தல்கீன் ஓத, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ துஆ இறைஞ்சினார்.
பின்னர், மீண்டும் பள்ளி வளாகத்தில் அனைவரும் கூடினர். மறைந்த ஹாஜி எம்.எம்.உவைஸ் குடும்பத்தார் சார்பில் - நல்லடக்கத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மொத்தமாக ஸலாம் சொல்லப்பட்டது. நிறைவில், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ துஆ இறைஞ்ச, அத்துடன் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கலந்துகொண்டோர்:
இந்நல்லடக்க நிகழ்ச்சியில்,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை துணைத்தலைவரும், ஜாவியா அரபிக்கல்லூரியின் நிர்வாகியுமான ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஐக்கியப் பேரவை பொதுச்செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், அதன் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, பொருளாளர் ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ,
அஹ்மத் நெய்னார் பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன், முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, குருவித்துறைப் பள்ளியின் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.கபீர், துணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், புதுப்பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹாஜி ஜவாஹிர், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், செயலாளர் ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், பொருளாளர் ஹாஜி எம்.என்.எம்.ஐ.மக்கீ, துணைப் பொருளாளர் ஹாஜி கரூர் ஹஸன், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி செயலாளர் ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை,
ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, அதன் செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) செயலாளர் பேராசிரியர் சதக்கு தம்பி, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் கே.எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, அதன் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் நிர்வாகி கண்டி ஸிராஜ், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) அங்கத்தினரான கே.ஏ.நூஹ், ஏ.எஸ்.புகாரீ, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், நோனா அபூஹுரைரா,
நஸூஹிய்யா மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், ஜாவியா நிர்வாகி ச.த.ஸதக்கத்துல்லாஹ், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, மக்தப் மக்தூமிய்யா முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஷாதுலீ,
மார்க்க அறிஞர்களான - ‘முத்துச்சுடர்’ மாத இதழ் ஆசிரியர் மவ்லவீ என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ, மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, மரைக்கார் பள்ளி இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், திமுக நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், நகர நிர்வாகி எம்.என்.சொளுக்கு,
காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் வைரமுத்து, தலையாரி முனுசாமி,
எழுத்தாளர்களான கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன், கவிஞர் ஏ.ஆர்.தாஹா, செய்தியாளர்களான ‘தினத்தந்தி’ பாஸ்கர், ‘தினகரன்’ சுந்தர், உள்ளூர் இணையதளங்களைச் சேர்ந்த ஜெ.ஏ.லரீஃப், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத்,
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிர்வாகிகளான முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தாளாளர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், ஹாஜி வாவு சித்தீக்,
ஹாங்காங் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் ஹாஜி எம்.எம்.ஷம்சுத்தீன், அதன் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ், ஜித்தா காயல் நற்பணி மன்ற உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், அதன் முன்னாள் தலைவர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) தலைவர் ஹாஜி எம்.ஏ.செய்யித் அபூதாஹிர், கத்தர் காயல் நல மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஹாஜி எம்.இ.செய்யித் முஹம்மத் ஸாஹிப்,
மருத்துவ நிபுணர்களான டாக்டர் மஹ்பூப் ஸுப்ஹானீ, டாக்டர் முஹம்மத் தம்பி, டாக்டர் எஸ்.எம்.ஏ.அபூபக்கர், டாக்டர் ஜாஃபர் ஸாதிக்
உட்பட நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
ஜனாஸா தொழுகைக்கு முன்பாக, மறைந்த ஹாஜி எம்.எம்.உவைஸ் அவர்கள் தம் வாழ்நாளில் யாருக்கேனும் தீங்கிழைத்திருப்பின் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், அவர்கள் யாருக்கேனும் எதுவும் தர வேண்டியதிருந்தாலோ - தருவதாக வாக்களித்திருந்தாலோ, தம்மிடம் பெற்றுக்கொள்ளுமாறும் அவர்களது குடும்பத்தார் சார்பில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கள உதவி:
K.M.T.சுலைமான் |