| 
 ரியாத் காயல் நல மன்றத்தின்  38-வது செயற்குழு கூட்டம் டிசம்பர் 12, 2013  வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. அது குறித்து 
வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
  
  எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் ரியாத் காயல் நற்பணி 
மன்றத்தின் (RKWA) 38ஆவது செயற்குழுக் கூட்டம், 12.12.2013 வியாழக்கிழமை இஷாத் தொழுகைக்குப் பின், எமது மன்றத் துணைத்தலைவர் 
ஹாஃபிழ் தாவூது இத்ரீஸ் அவர்கள் இல்லத்தில் செயலாளர் கூஸ் முஹம்மது அபுபக்கர் தலைமையில் நடைப்பெற்றது. 
  
 
  
 
  
ஹாஜியார் சாலிஹ் அவர்கள் இறைமறை ஓதி துவங்கி வைக்க, மன்றத் தலைவர் M.N. மின்ஹாஜ் முஹ்யித்தீன் அவர்கள் 
வரவேற்புரையாற்றினார்.
  
 
  
 
  
புதிய நிர்வாகிகள் தேர்வு:
  
பின்னர், நிர்வாக குழுவால் தேர்வு செய்யப்பட்ட 2014-15 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் செயற்குழுவின் ஒப்புதலுடன் பின் வருமாறு 
அறிவிக்கப்பட்டன.
  
Management Committee
  
Hafil M.A. Shaik Dawood Idhrees 
President
  
A.H. Mohamed Nooh	 
Vice President
  
P.M.S. Mohamed Lebbai	 
Vice President
  
A.T. Soofi Ibrahim	 
Secretary
  
Y.A.S. Muhsin	 
Joint Secretary
  
N.M. Seyed Ismail 	
Joint Secretary
  
M.N. Mohamed Hassan 	
Treasurer
  
S.A. Velli Siddiq	 
Joint Treasurer
  
K.M.N. Aboobacker Samsudeen 	
Joint Treasurer
  
Executive Advisory Committee
  
M.E.L. Nuski 
M.N. Minhaj Muhideen 
S.A.T. Muhammad Aboobacker 
S.M.A. Muhyideen Sadakathullah 
S.M.B. Seyed Mohamed Salih 
H.Hyder Ali
  
Executive Committee
  
M.S. Nayeemullah 
S.L. Sadakathullah 
K.S Mohamed Niyaz 
Hafil S.A.C Ahmed Salih 
K.S Safiullah 
V.S.H. Seyed Mohamed Ali 
P.S.J. Zainul Abdeen 
S.H. Seyed Mohamed Haji 
H.A. Omer Farooq Fasi 
Vawoo Kithur Mohamed 
S.B. Mohamed Mohideen 
Omer Abdel Latif 
K.S.M. Mohamed Abdul Kader 
S.S. Mohamed  
A.R. Ibrahim Faisel 
I. Ismath Nowfel
  
 
  
 
  
தீர்மானங்கள்:
  
அடுத்த பொதுக்குழுக் கூட்டம்:
  
எம் மன்றத்தின் அடுத்த ஆண்டிற்கான முதல் பொதுக் குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ், பிப்ரவரி 07,2014 வெள்ளிக் கிழமை நடத்த முடிவு 
செய்யப்பட்டுள்ளது. 
  
நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு:
  
ஷிஃபா மூலமாக நமதூர் வறிய மக்களிடம் இருந்து வந்த கடிதங்கள் வாசிக்கப்பட்டு ஏழு நபர்களின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.51,250-யும், ஒரு 
நபரின் கல்விக்காக ரூ.27,000-மும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும் புகழும்.
  
தகுதி மதிப்பெண் (கட்-ஆஃப்):
  
தகுதி மதிப்பெண் (கட்-ஆஃப்) கூடுதலாகப் பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசு வழங்குவது குறித்து செயற்குழு உறுப்பினர் S.A.சித்தீக் 
விளக்கினார். மேலும், இது பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு அனைத்து பள்ளிகள் மற்றும் பிரசுரங்கள் மூலம் அறிவிக்க முயற்சிகள் 
மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
  
மலேசிய கா.ந.மன்றத்திற்கு வாழ்த்து:
  
புதிதாக துவக்கப்பட்ட மலேசிய காயல் நல மன்றம் அமைப்புக்கு, இக்கூட்டத்தில் வாழ்த்துக்களும் - பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.
  
 
  
நன்றி உரை:
  
நன்றி உரை துணைத்தலைவர் A.H. முஹம்மது நூஹ் அவர்களால் நிகழ்த்தப்பட்டு, இறுதியாக ஹாஃபிழ் தாவூது இத்ரீஸ் அவர்கள் துஆ ஓதி நாயகம் 
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓத, கூட்டம் நிறைவுபெற்றது.
  
 
  
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
தகவல்: 
N.M. செய்யது இஸ்மாயில், 
ஹாபிழ்.S.A.C. அஹ்மது ஸாலிஹ், 
ஊடகக் குழு, ரியாத் காயல் நல மன்றம்,
ரியாத் - சஊதி அரபிய்யா.
  |