தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 10, 2014 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 65வது செயற்குழு கூட்டம், 20.12.2013 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி அளவில், தம்மாமில் சகோதரர் ஜனாப் H.M. முஹியத்தீன் அவர்களின் இல்லத்தில் வைத்து இனிதே நடந்து முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
இந்த கூட்டத்தில் மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜனாப் அஹமத் ரபீக், துணைத்தலைவர் ஜனாப். ஜியாவுத்தீன் மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களோடு, சிறப்பு அழைப்பாளராக ஜனாப். H.M. முஹியத்தீன் அவர்களும் கலந்து கொண்டார்.
கூட்டத்தை சகோதரர் ஜனாப் செய்யது முஹம்மது ஷாதுலி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.
அடுத்து, தலைவர் டாக்டர்.ஜனாப்.இத்ரீஸ் அவர்கள் வந்தோரை வரவேற்று உரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து, அண்மையில் அல்லாஹ்வின் நாட்டப்படி நம்மை விட்டுப்பிரிந்து சென்ற, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப்பேரவைத் தலைவரும், கே.எம்.டி. மருத்துவ மனையின் நிர்வாகிகளுள் ஒருவரும்,முஹியித்தீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் முக்கிய நிறுவனர்களுள் ஒருவரும், சமுதாய நலனுக்காகத் தன் வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்த பெரியாருமாகிய ஹாஜி. எம்.எம்.உவைஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அன்னாரின் மறு உலக நல் வாழ்விற்காக வல்ல அல்லாஹ்விடம் இரு கரமேந்தி இறைஞ்சுமாறு தலைவர் வேண்டிக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.( இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).
அடுத்து, மன்றத்திற்கு உதவி கோரி வந்துள்ள மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் நிகழும் புத்தாண்டில் ஜனவரி 10ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மன்றத்தின் 66வது பொதுக்குழு கூடுவது என்று முடிவு செய்யப்பட்டது .
இனிய தேநீர் விருந்து, நன்றி அறிவித்தலைத் தொடர்ந்து துஆவுடன் செயற்குழு சிறப்புற நிறைவுற்றது, அல்ஹம்து லில்லாஹ்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை S.I. ஜியாவுத்தீன்,
துணைத் தலைவர், தம்மாம் காயல் நற்பணி மன்றம்.
[மன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க, செய்தியின் திருத்தப்பட்டது @ 22:43 / 24.12.2013]
|