காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரது ஜனாஸா, அன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, துபை காயல் நல மன்றம் சார்பில் அதன் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல் மாநகரின் மூத்த வழிகாட்டியும் பல்வேறு பொது ஸ்தாபனங்கள் கல்வி நிறுவனங்கள் மதரசாக்கள் மருத்துவமனை மற்றும் பல்வேறு அமைப்புகள் உருவாக காரணமானவரும் அவற்றின் நிர்வாகிகளுள் ஒருவரும் நற்சினதனையாளரும் நமது ஊரின் மத நல்லிணகத்திற்கு இடையூறு ஏற்பட்டபோது தமக்கே உரிய நிதானமான அணுகுமுறையால் நமதூரை சமூக விரோதிகன் சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாத்து சுமூகமான் சூழல் உருவாக காரணமானவரும், நமது முதிர்ந்த வயதிலும் நமதூரின் மேம்பாடு பற்றியே அனுதினமும் சிந்தித்து செயல்பட்டவரும்> இன்னும் பல்வேறு சிறப்புகளுக்கு உரித்தவருமான கண்ணியத்திற்குரிய பெருந்தகை M M உவைஸ் ஹாஜியார் அவர்களின் வபாஃத்து செய்தி எங்களை பேரதிர்ச்சிக்குள்ளக்கியது. இன்னா லில்லாஹி வ இன்னா இலையஹி ராஜிஊன்.
அண்ணாரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது என்றாலும் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நடந்த இந்த செயலிற்கு நாம் அனைவரும் பொறுமையை மேற்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தார், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையையும் இவ்விழப்பை தாங்கும் சக்தியையும் தருவானாக. ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்கள் செய்த நற்காரியங்களை அங்கீகரித்து பாவங்களை பொறுத்து மன்னரை வாழ்வை ஒளிமயமானதாக ஆக்கி மறுமையில் நல்லோர்களின் கூட்டத்தில் எழுப்பச்செய்து ஜன்னத் வல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியில் வீற்றிருக்க செய்வானாகவும் ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்
துணைத்தலைவர் - துபை கா.ந.மன்றம் |