காயல்பட்டினத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் – கட்சிக்கொடியேற்றினார். இதுகுறித்து அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரது இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இம்மாதம் 21, 22 தேதிகளில் காயல்பட்டினம் வந்திருந்தார். அதனையொட்டி, 21ஆம் தேதியன்று மாலையில், காயல்பட்டினம் கொச்சியார் தெருவில் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கட்சியின் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில செயலாளர் திருப்பூர் சத்தார், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர், துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், அமீரக காயிதேமில்லத் பேரவை துணைத்தலைவர் எம்.எஸ்.நூஹ் ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வந்திருந்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனை, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி வளாகத்திலிருந்து, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் அரபி பைத்துகளைப் பாடியவாறு நகர்வலமாக நிகழ்விடம் அழைத்து வந்தனர்.
மாலை 17.30 மணியளவில் அவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பச்சைப் பிறைக்கொடியை ஏற்றி வைத்தார்.
கட்சியின் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், சுதந்திர தொழிலாளர் யூனியன் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் ஆர்.பி.ஷம்சுத்தீன், தூத்துக்குடி நகர தலைவர் நவ்ரங் சஹாபுத்தீன், காயல்பட்டினம் நகர நிர்வாகிகளான எஸ்.டி.கமால், எம்.எச்.அப்துல் வாஹித், ஏ.கே.மஹ்மூத் சுலைமான், பெத்தப்பா சுல்தான் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |