காயல்பட்டினம் தைக்கா தெருவிலுள்ள மஹான் தைக்கா ஸாஹிப் அப்பா தர்ஹாவில், இம்மாதம் 17ஆம் தேதியன்று, 164ஆம் ஆண்டு கந்தூரி வைபவம் நடைபெற்றது.
முன்னதாக, இம்மாதம் 04ஆம் தேதியன்று - குத்பிய்யா மன்ஸில் நிறுவனர் ஹாஜி எம்.இசட்.ஜலீல் முஹ்யித்தீன் காதிரீ தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, ஸஃபர் 01ஆம் நாள் முதல் 13ஆம் நாள் வரை அதிகாலையில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதோடு, வித்ரிய்யா - மவ்லித் - புர்தா மஜ்லிஸ்களும் நடைபெற்றன.
கந்தூரி நாளன்று காலையில் வழமை போல கத்முல் குர்ஆன், வித்ரிய்யா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று மாலையில் கந்தூரி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு திக்ர் மஜ்லிஸும், அதனைத் தொடர்ந்து மஹான் அவர்களின் வாழ்க்கை சரித சொற்பொழிவும் நடைபெற்றன. மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ சொற்பொழிவாற்றினார். அத்துடன் கந்தூரி நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
கந்தூரியை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட சிறார் பல்லக்கில் அமர்த்தப்பட்டு, தஃப்ஸ் முழங்க நகர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
மறுநாள் - டிசம்பர் 18 அன்று அதிகாலையில், நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது. அன்றிரவு, ரிஸ்வான் சங்கம் சார்பில், திருச்சி டி.எஸ்.எஸ்.கென்னடி குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. |