தமிழக அரசின் நன்னூலகர் விருது பெற்ற காயல்பட்டினம் அரசு நூலகர் அ.முஜீபுக்கு பாராட்டு விழா இம்மாதம் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை 16.30 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
எழுத்தாளர் கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் தலைமை வகிக்க, அரசு நூலக வாசகர் வட்ட தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், வரலாற்று ஆய்வாளர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், நூலாசிரியர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், விஸ்டம் பப்ளிக் பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இவ்விழாவில், பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர் எஸ்.இருதயராஜ், ‘மானுட வசந்தம்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகவும், அரசு நூலக மாவட்ட அலுவலர் கே.ஏ.மந்திரம் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.
காயல்பட்டினம் அரசு நூலகர் அ.முஜீப் ஏற்புரையாற்றுகிறார். பின்னர், அவருக்கு பாராட்டுச் சான்றிதழும், பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.
இவ்விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் சிலரும் கவுரவிக்கப்படவுள்ளனர். ரூபாய் பத்தாயிரம் பணப்பரிசை உள்ளடக்கிய கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பும் விழா நிறைவில் வெளியிடப்படவுள்ளது.
தனியார் நிறுவனமும், உள்ளூர் இணையதளமும் இவ்விழாவை இணைந்து நடத்துகின்றன.
தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |