2013 - 2014 கல்வி ஆண்டுக்கான 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிகம் மதிப்பெண்கள் பெறுவது எப்படி? என்ற தலைப்பில் தமிழ்நாடு த்வ்ஹீத் ஜமாஅத் (TNTJ), மாணவரணி - காயல்பட்டினம் நகரக் கிளை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
ஏக இறைவனின் திருப்பெயரால்...
2013 - 2014 கல்வி ஆண்டுக்கான 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிகம் மதிப்பெண்கள் பெறுவது எப்படி?
பயிற்சி முகாம்
நாள் : இன்ஷா அல்லாஹ் 29.12.2013 ஞாயிறு
நேரம் : மாலை 3:30 மணி முதல் 7.00 மணி வரை
இடம் : மஸ்ஜிதுத் தவ்ஹீத், அலியார் தெரு, காயல்பட்டினம்
@ தேர்வுக்கு எந்த அடிப்படையில் தயாரானால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் ?
@ குறித்த நேரத்திற்குள் எவ்வாறு பதில்களை எழுத முடியும் ?
@ அதிக பக்கங்கள் எழுதினால்தான் அதிக மதிப்பெண்கள் கிடைக்குமா ?
@ தேவைக்கு அதிகமாக எழுதினால் மதிப்பெண்கள் குறையுமா ?
@ என் கையெழுத்து நன்றாக இருக்காது என்னால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாத ?
@ தேர்வுக்கு பயத்தை போக்குவது எப்படி ?
.................................
இதுபோன்ற கேள்விகளுக்கும் பொதுத்தேர்வு தொடர்பான இதர சந்தேகங்களுக்கும் தெளிவான பதிலை பெறவும் தேர்வு பயம் நீங்கி புத்துணர்வுடன் தேர்வை எதிர்கொள்ள (தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு கல்வி வழிகாட்டல் நிகழ்சிகளை இறையருளால் வெற்றிகரமாக நிகழ்த்திவரும் ) தேர்ச்சிபெற்ற வல்லுநர்களைக் கொண்டு TNTJ மாணவரனியால் நடத்தப்படும் இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு
அனைத்துதரப்பு மாணவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்
.....................................................
குறிப்பு :
1. மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி
2. பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் 18.12.2013 க்குள் நம்மிடம் முன்பதிவு செய்யவும்
3. கலந்து கொள்ளும் மாணவர்கள் Q BANK (முக்கிய வினாக்கள் தொகுப்பு) இலவசமாக வழங்கப்படும் .
..........................................
அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு த்வ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
மாணவரணி - காயல்பட்டினம் நகரக் கிளை
தூத்துக்குடி மாவட்டம்
தொடர்புக்கு : 99426 44436, 81421 40054, 87549 38587
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தேக் முஜீப்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ),
காயல்பட்டினம்.
|