போலீஸ் காவலில் கைதிகள் சாவு நிகழ்வது, நீதியை கேலி செய்வது போன்றது என்று போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் 3 நாள் மாநாடு, தலைமைச் செயலகத்தில் 11–ந் தேதி தொடங்கியது.
முதல் நாளன்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்த மாநாடு நடைபெற்றது.
இண்டாவது நாளான நேற்று (12–ந் தேதி) மாவட்ட கலெக்டர்கள் மட்டும் கலந்து கொள்ளும் மாநாடு நடந்தது.
அதைத் தொடர்ந்து இன்று போலீஸ் அதிகாரிகள் மட்டும் கலந்து கொள்ளும் மாநாடு நடந்தது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 10–வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் காலையில் 11 மணிக்கு மாநாடு தொடங்கியது. அப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய தொடக்க உரை வருமாறு:–
ஒருங்கிணைந்த கூட்டத்தில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளின் கூட்டு முயற்சியோடு சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்தோம். சட்டம் ஒழுங்கு என்பது மிக முக்கியம் என்றாலும், அது போலீசின் பொறுப்புகளில் ஒரு அங்கமாகத்தான் உள்ளது.
3 பங்களிப்புகள்
அவர்களுக்கு குற்றங்கள் தடுப்பு, குற்றவாளி கண்டுபிடிப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, இயற்கை பேரிடர் மேலாண்மை, சமுக சட்டங்களை அமல்படுத்துவது போன்ற வேறு எத்தனையோ பொறுப்புகள் உள்ளன.
ஆண், பெண் போலீசாருக்கு 3 முக்கிய பங்களிப்பு உள்ளது. முதலாவது, சமுதாயத்தின் பாதுகாவலர் என்ற முறையில் மோசமான குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பது; இரண்டாவது, சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில் சட்ட விதிகளை அமல்படுத்தும் நடுவராக செயல்படுவது; மூன்றாவதாக, சட்ட அமலாக்கம் தவிர நட்பு ரீதியில் செயல்பட வேண்டிய ஒரு பொது ஊழியர் என்ற பங்களிப்புகள் உள்ளன.
முழு சுதந்திரம்
கல்வியாளர் ஒருவர், ‘‘சாலமோன் போல் ஞானம் பெற்றவர்களாகவும், சிம்சோன் போல் பலமுள்ளவர்களாகவும், யோபுவைப் போல் பொறுமை உள்ளவர்களாகவும், மோசே போல் தலைமைத்துவ பண்பைப் பெற்றவர்களாகவும், நல்ல சமாரியன் போல் இரக்கம் உள்ளவர்களாகவும் போலீஸ் அதிகாரிகள் இருக்க வேண்டும்” என்று கூடியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
இப்படிப்பட்ட உயர்ந்த, நடைமுறைக்கு ஒத்துவராத எதிர்பார்ப்புகள் சில நேரம் போலீசாரின் தோள்களில் மிகப்பெரிய பாரத்தை ஏற்றிவிடுகின்றன. ஆனால் எனது அரசில் போலீசாருக்கு தொழில் ரீதியான சுதந்திரம் அளிக்கப்பட்டு இருப்பதால், எப்படிப்பட்ட சவால் எழுந்தாலும் உடனே அதை எதிர்கொள்கின்றனர்.
கடின உழைப்பு
யாருடைய உயிருக்கும் இழப்பு ஏற்படுத்தாமல் திறமையாக செயல்பட்டு புத்தூரில் பக்ருதீன் மற்றும் அவனது கூட்டாளிகள் இரண்டு பேரை சமீபத்தில் கைது செய்த நடவடிக்கை, ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த சம்பவம் தொடர்பாக 260 போலீசாருக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் ரூ.15 லட்சம் வரை பணப் பரிசும், 20 பேருக்கு ஒருபடி பதவி உயர்வும் வழங்கி, தனிப்பட்ட முறையில் அவர்களை பாராட்டினேன்.
இதுபோன்ற உண்ர்ச்சிபூர்வமான சம்பவங்களில் உங்களின் செயல்பாடு பெரிய அளவில் பேசப்பட்டாலும், பொதுமக்கள் நிகழ்ச்சிகளிலும், உதாரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள மிகமுக்கிய நபர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள், சாதித் தலைவர்களின் ஆண்டுவிழா நிகழ்வுகள் போன்றவற்றிலும் உங்கள் கடின உழைப்பு தேவைப்படுகிறது.
அரசின் அக்கறை
ஆனாலும், இதுபோன்ற விழாக்கள் அமைதியாக நடந்து முடிவதற்கு நீங்கள் தயார் நிலையில் இருந்து முழு முயற்சியுடன் செயல்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். போலீசார் எதிர்கொள்ளும் துன்பங்கள் பற்றியும் தெரியும்.
அதனால்தான், போலீஸ் துறைக்கும், போலீஸ் படைக்கும், தனிப்பட்ட போலீசுக்கும் பல்வேறு நன்மைகளை செய்ய வேண்டும் என்பதில் எனது அரசு மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டுள்ளது.
தற்கொலை செய்திகள்
எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் எனது கருத்தை இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். ஒன்பது லட்சம் மக்களை கைது செய்யும்போது, இங்கும் அங்கும் போலீஸ் காவலில் ஒருவர் சாவதை எண்ணிக்கைப்படி புறந்தள்ளிவிடலாம்.
ஆனால், அந்த தனி மனிதனின் உயிர் பிரிந்ததை, அவனால் நேசிக்கப்பட்ட மக்களால் புறந்தள்ளிவிட முடியாது. போலீஸ் நிலையங்களில் கைதிகள் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறப்பது அல்லது தற்கொலை செய்வது குறித்த செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
நீதியை கேலி செய்யக்கூடாது
வீடுகளிலும், பணியிடங்களிலும், பொது இடங்களிலும் மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டியவர்கள் போலீசார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், போலீஸ் நிலையங்களில் மக்கள் மரணமடைவது, நீதியை கேலி செய்வதாக அமைந்துவிடுகிறது.
தற்போதைய சூழ்நிலைகளில் குற்றத்தின் தன்மை மாறிவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை. உள்மாவட்ட குற்றவாளிகள் பற்றி போலீசார் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், சர்வதேச குற்றவாளிகளும் காலூன்ற முயற்சிக்கின்றனர்.
துரித சாட்சி விசாரணை
புது வகையிலான குற்றங்கள் உலாவருகின்றன. கொடூர குற்றங்களை செய்கிறவர்கள் கைது செய்யப்படுவது மட்டும் போதாது. அவர்கள் தாக்கல் செய்யும் ஜாமீன் மனுக்களை கடுமையாக எதிர்ப்பது, குற்றபத்திரிகை விரைவாக தாக்கல் செய்வது, துரித சாட்சி விசாரணை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளையும் போலீசார் உறுதி செய்வது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்று தமிழக முதல்வர் நிகழ்த்திய உரை முழுவதும் (ஆங்கிலத்தில்):
Hon’ble Ministers of the Government of Tamil Nadu,
Chief Secretary,
Principal Secretary, Home,
Director General of Police,
Senior Police Officers,
District Superintendents of Police and
Delegates attending this Conference,
During the Joint Session we had elaborate and fruitful
discussions on law and order maintenance which draws upon the
co-ordinated efforts of District Collectors and Police Officers. Though
important in itself, law and order is only a portion of Police
responsibilities. Policing encompasses a wide variety of other tasks like
crime prevention, crime detection, traffic regulation, security of VIPs,
security of vital installations, disaster management, and enforcement
of social legislation of different kinds.
The Policeman / Policewoman has to play three major roles.
As a guardian of Society, he/she is the sentry at the gates protecting
the community against dangerous criminals. Secondly, as an
instrument of the law, he / she, is an umpire required to apply
impersonally a set of rules to make possible orderly social transactions
in the community. Thirdly, as a public servant, he / she is a
friend-in-need who performs duties which are not part of law
enforcement such as finding lost children or pushing stranded cars.
No wonder, a learned person said,“The citizen expects Police
Officers to have the wisdom of Solomon; the strength of Samson; the
patience of Job; the leadership of Moses; the kindness of the Good
Samaritan,” and so on and so forth.
Such lofty and sometimes unrealistic expectations place a heavy
burden on the shoulders of the Police. But, the Tamil Nadu Police
endowed with professional freedom under my Government have
always risen to the challenges. The recent arrest of Fakruddin followed
by the operation at Puthur in which two of his associates were arrested
without any loss of life was a noteworthy achievement.
I have personally congratulated 260 personnel giving away cash
rewards ranging from 1 lakh rupees to 15 lakh rupees, apart from the
grant of Accelerated Promotion to 20 Police personnel.
While such sensational operations grab headlines there are also
numerous instances where your hard toil is taken for granted
by the public for example, during the visits of dignitaries facing high
levels of threat or anniversary functions of caste leaders or major
temple festivals. But, I am aware of the elaborate preparations made
and the efforts put in by the Police to make these events go off
peacefully. I know the hardships faced by Police personnel. This is
why my Government has been particular in taking care of the well
being of individual Policemen, welfare of the Force as a whole and the
wellness of the Police as a Department.
I also take this opportunity to share some of my priorities with
you. When you arrest nine lakh people, an odd death in custody here
and there may appear to be statistically negligible. But a dead man is
not a mere statistic for his loved ones. Instances are reported of
suspects dying after suddenly developing illness while in a Police
station or committing suicide while in custody. When the Police are
expected to protect the lives of citizens in their homes, work places
and in public, it would be a travesty of justice if a citizen dies within
the precincts of a Police Station.
Ease of mobility and communication no doubt changes the
character of crime. While once the Police were concerned about
inter-district criminals, today inter-State and even inter-national
criminals, tend to take centre stage. New forms of crime keep
surfacing. It is not enough that offenders in heinous crimes are
arrested. It must be ensured that bail applications are strongly
opposed, cases charge-sheeted quickly and expeditious trial ensured.
I hope today’s discussions will bring to the fore not only the
problems but also effective and lasting solutions.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்ட்டி, டி.ஜி.பி. ராமானுஜம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மூத்த போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9.
மற்றும்
தினத்தந்தி
புகைப்படங்கள்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9.
|