காயல்பட்டினத்தில் நண்பர் வீட்டில் திருடிய இளைஞர்களை ஆறுமுகனேரி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
காயல்பட்டினம் பாஸ் நகரைச் சேர்ந்த கனி மகன் அலாவுதீன் (33). இவர் கடந்த 04ஆம் தேதி மாலை தனது குடும்பத்துடன் காயல்பட்டினம் கடற்கரைக்கு சென்றுள்ளார். இரவு வீடு திரும்பியபோது, வீட்டில் உள்ள ஜன்னல் கம்பி உடைந்து கிடந்துள்ளது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரியில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் அவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும் நண்பர்களான சீதக்காதி நகர் ஹாஜா மொகிதீன் மகன் ஹஸன் பன்னா (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் மீதும் சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து அலாவுதீன் ஆறுமுகனேரி போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் அந்த இருவரையும் தேடுவதை அறிந்த அவர்கள் சென்னைக்கு சென்று தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி இருவரும் காயல்பட்டினம் வந்துள்ளனர். இதுகுறித்து அலாவுதீன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்தனர். இருவரிடமிருந்தும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
1. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[12 December 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31931
வருத்தமான செய்தி. நண்பன் வீட்டிலா கையை வைத்துள்ளார்கள். நல்ல நைய்யப்புடைங்க.
ஊரில் திருட்டு அதிகம். அதிலும் குறிப்பாக காஸ் சிலிண்டர் திருட்டு கூடுதல். மேலும் செல் போன் திருட்டும் அதிகம். ஆக, ஜன்னல் ஓரத்தில் உங்களின் அலைபேசிகளை வைக்காதீர்கள்.
தராதரம் தெரியாமல் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள்.
கடை சாமான் கொண்டு வரும் பையன்களை, சாமானை வீட்டிற்குள் கொண்டு வந்து வைக்குமாறு கூறாதீர்கள், சிரமம் பாராமல் நீங்களே உள்ளே எடுத்து வையுங்க.
யாசகர்கள், பழம், மீன், காய்கறி வியாபாரிகளிடம் தேவைகள் /வியாபாரம் முடிந்து, பணம் எடுக்கவோ, கூடை எடுக்கவோ வீட்டிற்குள் செல்ல நேர்ந்ததால், கதவை அடைத்து விட்டு உள்ளே சென்று வாருங்கள்.
அறிமுகம் இல்லாத எந்த பெண்ணையும், வீட்டில் கொஞ்சம் வேலை இருக்கு, செய்துவிட்டு போ என்று அனுமதிக்காதீர்கள்.
இன்னும் சில செய்திகள் உள்ளன, பதித்தால் அட்மின் கத்தரித்து விடுவார்.
3. Re:... posted bySEYED ABUTHAHIR (chennai)[12 December 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31935
kayalpatnam.com செய்தி ஊடகம் தான். அதற்காக நாலந்தர ஊடகமாக மாற்றி உங்கள் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த செய்தி அவசியம் தெரிந்தே ஆக வேண்டிய செய்தியும் அல்ல. மட்டுமின்றி பிறர் தவறை மறைப்பது அல்லவா நமது மார்க்க மாண்பு. தயவு செய்து இந்த செய்தியை இந்த தளத்திலிருந்து நீக்கம் செய்யுங்கள், இனி வரும் காலங்களில் இது போன்ற தகவல்களை தவிருங்கள்,
உங்கள் நல் சேவை தொடர வாழ்த்துக்கள்.
என்னப்பா இது நாம் யாரை தான் நம்புவது ..?? இப்படிப்பட்ட நண்பர்களை சும்மா விடவே கூடாது ...சரியான தண்டனை வாங்கி கொடுத்து ....இவர்கள் நிச்சயமாகவே தண்டிக்க ( படனும் ) பட கூடியவர்களே....
நண்பன் என்கிற வார்த்தைக்கே '' இவர்கள் போன்றவர்கள் ஒரு '' களங்கமே '' நண்பன் என்பவன் தன் உயிரையும் விட மேலானவன் ...என்று தான் அர்த்தம் ..+.. நாம் யாவர்களும் இன்று வரைக்கும் அப்படி தான் பழகியும் வருகிறோம் ...
இவன் இத் தொழிலில் ரொம்பவும் கைதேர்ந்தவன் போல் அல்லவா செயல் பட்டு உள்ளான் ...
அந்த காலத்தில் நம் பெரியவார்கள் கண்டிப்புடன் சொல்வார்கள் ...யாரையும் வீட்டுக்கு அழைத்து வராதீர்கள் என்று .... இப்போது தான் நமக்கு பெரியவர்களின் வார்த்தையின் முழுமையான உள் அர்த்தம் புரிகிறது ...
<<<<நமக்கு ...... யாரைத்தான் நம்புவதோ ....என்கிற பாட்டின் வரிகள் நியாபகத்துக்கு வருகிறது ..<<<<
படிப்பதற்கு கஷ்டமாக இருந்தாலும் இதன் மூலம் நமக்குக் கிடைக்க கூடிய பட்ப்பினையை நாம் பெற்றுக் கொள்வது அவசியமாகி விட்டது. நமதூர் மக்கள் இப்படி பட்ட நிகழ்வுகளுக்குப் பழக்கப் படாதவர்கள். இச்சம்பவத்தின் வாயிலாக இனிமேல் இப்படியெல்லாம் கூட நடக்கலாம் என்று எச்சரிக்கையும் கவனமும் எடுத்துக் கொள்வார்கள். இது தான் நமது அட்மின் அவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். பெயர்களை தவிர்த்திருக்கலாம்.
எப்படியும் விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று கைதும் செய்யப் பட்டு இருப்பதால் நாளை எதாவது ஒரு பத்திரிகையில் வர தான் செய்யும். நம்மால் அதை தடுகவா முடியும்???
6. Re:...குற்றம் குற்றமே posted byT.M.RAHMATHULLAH (Kayalpatnam.)[13 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31944
அஸ்ஸலாமு அலைக்கும்!
காயல்பட்னம் சிறு மக்கம் .சரிதான் ஆனால் அது ரசூலுல்லாஹ் வுக்கு முந்திய மக்கமா அல்லது பிந்திய மக்கமா என்றால் ஆராய வேண்டிய விஷயமே. இது naanஆன் சொல்ல வில்லை. 35 வருடங்களுக்கு முன் புகாரி ஷரீபு ஹதீதுவில்.மர்ஹூம் மிசுபாஹி ஆலிம் கூறியது. சுன்னத்தான முறைப்படி மஷூரா செய்தால் முடிவு விளங்கும். போடவேண்டிய நியூசுதான் . பெயர் மாற்று தகவல் செய்து இருக்கலாமே .சம்மந்தப்பட்ட குடும்பஸ்தர் சேர்ந்த வர்களுக்கும் வருத்தம் குறைந்து இருக்கும் الخير فيما وقع
முந்திய காமண்ட்ஸ் எல்லாம் சரியான போதனை தான் ..இன்னுமொன்று டோர் செயின் என்று ஒன்று இருக்கிறது அதனை மாட்டி வீடு களுக்கு அதிக பாதுகாப்பை பெறலாம். இதற்கெல்லாம் மார்க்கம் குறைந்து எவல் விலக்கலும் குறைந்து விட்டது தான் காரணம் அதை செய்ய .கூட்டம் கூட்டமா கூப்பிடவந்தால் அதனையும் தடுக்கவும் ஒரு கூட்டத்தை தயாராக ஆக்கிவிடுகிறார்கள் . எனக்கு ஒரு ஆலிம் ,ஹதீவில் ஒன்று என கூறினார் .
هلاك امتي ب يديين ،الشيخ جاهل والعالم فاسق
அதாவது எனது உம்மத்து களின் அழிவு இருவரின் கையில் இருக்கிறது, ஒருவர் ,அறிவில்லாத ஷைகு ( ஷைகு =தலைவர் ,,பெரியவர், ,மார்க்கத்தை வழி நடத்துபவர்.) ,மற்றவர் பகிரங்கமாய் பாவம் செய்யும் ஆலிம். இது எந்த கிதாபில் உள்ளதோ தெரிய வில்லை தெரிந்தவர்கள் தயவுசெய்து செய்து எனக்கு அறிவியுங்கள் .91-9488507221 Please,, ஆனால் நடைமுறை கருத்தும் அப்படித்தான் இருக்கிறது اللهم احفظها منهم
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross