ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில், அம்மன்றத்தால் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சிகளின் நிறை-குறைகள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் அதன் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லருளால், எமது துபை காயல் நல மன்றத்தின் சிறப்பு செயற்குழுக் கூட்டம், மன்றத் தலைவர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ தலைமையில், அவரது வில்லாவில் - இம்மாதம் 07ஆம் தேதி சனிக்கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பின் நடைபெற்றது.
வழமை போல, வில்லாவிலுள்ள கூட்ட அரங்கில் நடத்தப்படாமல், திறந்த வெளியில் புல் தரையில் பாய் விரிக்கப்பட்டு - இதமான வானிலைக்கிடையில் கூட்டம் நடத்தப்பட்டது. ஹாஃபிழ் கே.எம்.இஃப்திகாருத்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து, கூட்டத் தலைவர் தலைமையுரையாற்றினார்.
இச்சிறப்பு செயற்குழுக் கூட்டம், மன்றத்தால் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சி குறித்த நிறை குறைகளை மீளாய்வு செய்வதற்காகவென்றே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், வேறு பொருட்கள் எதுவும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கூறிய அவர், பொதுக்குழுக் கூட்டம் இறையருளால் மிகச் சிறப்பாக நடைபெற்று - அனைவரையும் உற்சாகத்துடன் பங்கேற்கச் செய்ததாக பலர் கூற கேட்டறிந்ததாகவும், அது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் மேலும் கூறினார்.
அடுத்து, நடைபெற்று முடிந்த பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சியின் நிறை-குறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒரு சில குறைகள் தவிர பொதுவாக ஏற்பாடுகள் நிறைவாகவே இருந்ததாக பங்கேற்றோர் கருத்துக் கூறினர்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வந்திருந்த இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் அவர்களை - மன்றத் தலைவர் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
வரவேற்புரையாற்றிய முஹம்மத் ஈஸா, குறுகிய கால அவகாசத்தில் நடப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு - அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும், கலந்துகொள்வது கடமையெனக் கருதி திரளாக வந்து கலந்து சிறப்பித்த அனைத்து செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பழைப்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோரை வாழ்த்தி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புரையாற்றினார். துபை காயல் நல மன்றத்தின் செயல்பாடுகளை தான் தவறாமல் அவதானித்து வருவதாகவும், இணையதள ஊடகங்களில் வெளியாகும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளிலேயே - துபை காயல் நல மன்றம் நடத்தும் கூட்டங்களில்தான் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் காண முடிவதாகவும், அதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் காயலர்கள் செறிவாக உள்ளது முக்கிய காரணம் என்றும் கூறினார். நடப்பு கூட்ட ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதாகப் புகழ்ந்துரைத்த அவர், நேரந்தவறாமை குறித்தும் வலியுறுத்திப் பேசி, தனதுரையை நிறைவு செய்தார். சிறப்பு விருந்தினருக்கு மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது.
பொதுக்குழுக் கூட்ட ஏற்பாடுகள், அவற்றைச் செய்வதற்காக சந்தித்த சிரமங்கள் குறித்து, மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ராவன்னா அபுல்ஹஸன், துணி உமர், விளக்கு தாவூத் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
இப்படியான நிகழ்ச்சியின் பின்னணியில் ஒளிந்துள்ள ஏற்பாட்டு விபரங்கள், ஏராளமானோரின் கூட்டு உழைப்பு ஆகியன இவ்வுரைகள் மூலம் அனைவராலும் அறியப்பட்டது. நிறைவில்,
>> பொதுக்குழுக் கூட்டம் சிறப்புற நடந்தேற அவ்வப்போது நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்றோர்
>> பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க - அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலமாக அழைப்பு விடுத்த எம்.யு.முஹம்மத் அலீ, எஸ்.எஸ்.அப்துல்லாஹ் ஆகியோர்
>> உறுப்பினர்கள் வருகையைப் பதிவு செய்த லரீஃப், சுல்தான், நிஜாம், தஸ்தகீர், உமர் காலித், நூஹ் லெப்பை, சுஹ்ரவர்த்தி ஆகியோர்
>> உறுப்பினர் சந்தாக்களை வசூல் செய்து ஒப்புகைச் சீட்டு வழங்கிய முத்து ஃபரீத், முனவ்வர், ஹாஜா, மூஸா நெய்னா, அலாவுத்தீன்
>> இறைமறை வசனங்களையோதி கூட்டத்தைத் துவக்கி வைத்தா ஹாஃபிழ் எச்.என்.டி.ஹஸ்புல்லாஹ் மக்கீ
>> ஆண்டறிக்கையை ஆயத்தம் செய்து, கூட்டத்தில் சமர்ப்பித்த செயலாளர் டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன்
>> நிதிநிலையறிக்கையை ஆயத்தம் செய்து சமர்ப்பித்த பொருளாளர் ஏ.ஜெ.முஹம்மத் யூனுஸ்
>> உறுப்பினர்கள் நிகழ்விடம் வந்து சேர வாகன ஏற்பாடுகளை சிறப்புற செய்து தந்த ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன்
>> ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்த முத்து அஹ்மத்
>> பொதுமக்களுக்கான வினாடி-வினா போட்டி, பொழுதுபோக்கு அம்சங்கள், சிறாருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அனைவரையும் மகிழ்வித்த துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம், பாஸுல் ஹமீத்
>> கூட்டத்தில் பங்கேற்றோருக்கு மருத்துவக் குறிப்புகளையும், உடல் நலன் தொடர்பான செய்திகளையும் வழங்கிய - காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர் பி.எம்.செய்யித் அஹ்மத்
>> ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்த டி.ஏ.எஸ்.மீராஸாஹிப்
>> காலை சிற்றுண்டி, மாலை தேனீர் ஏற்பாடுகளைச் செய்த எம்.ஏ.முஹம்மத் ஈஸா
>> ஒலிபெருக்கி ஏற்பாடுகளைச் செய்த எம்.ஏ.ஸாஜித், ஃபஸல்
>> நிகழ்வுகளைப் படப்பதிவு செய்த ஃபயாஸ், சுபுஹான் என்.எம்.பீர் முஹம்மத்
>> தார் பாய், மேசை, நாற்காலிகள், தள்ளுவண்டி உள்ளிட்ட தளவாட சாமான்கள் மற்றும் இதர உபகரண ஏற்பாடுகளைச் செய்த செய்யித் இப்றாஹீம், ஜாஃபர், இர்ஷாத், கலந்தர், ஃபைஸல் ஆகியோர்
>> நிகழ்ச்சியின் துவக்கம் முதல் நிறைவு வரை இருந்து, கொண்டு வந்த அனைத்துப் பொருட்களையும் பாதுகாப்பான முறையில் பொறுப்புடன் திரும்ப எடுத்துச் சென்ற ஹுஸைன் ஃபாரூக், பிரபு சுல்தான்
>> மன்ற வழமையை மாற்றி, நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் நமதூர் காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு ஏற்பாடு செய்த எம்.ஏ.முஹம்மத் உமர், விளக்கு தாவூத், அஹ்மத் முஹ்யித்தீன்
>> விருந்து சமைப்பதற்காக - கைதேர்ந்த சமையல் நிபுணர் மஸ்தான் அவர்களை அபூதபீயிலிருந்து அனுப்பித் தந்த அபூதபீ காயல் நல மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ
ஆகியோர் மற்றும் இதர பொறுப்பாளர்களுக்கும் இச்சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பழைப்பாளர்கள் திரளாகப் பங்கேற்றனர். அனைவருக்கும் சுவையான இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. நிறைவில், குழுப்படம் பதிவு செய்யப்பட்டதோடு, கஃப்பாரா துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
[குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
கூட்ட நிகழ்வுகளின் படப்பதிவுகளை, https://plus.google.com/photos/106706915650987578691/albums/5955529885483348145/5955532435437225794?banner=pwa&pid=5955532435437225794&oid=106706915650987578691 என்ற இணைப்பில் சொடுக்கி, தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு, துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை கேக் ஸலீம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
அய்யூப் ஜமீல் |