காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவியர் கேரள மாநிலத்திற்கு இன்பச் சுற்றுலா சென்று வந்துள்ளனர். இதுகுறித்த செய்திக்குறிப்பு:-
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில், அப்பள்ளியின் 11, 12ஆம் வகுப்பு மாணவியர், இம்மாதம் 02ஆம் தேதி திங்கட்கிழமையன்று, கேரள மாநிலத்திற்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
துவக்கமாக ஆலப்புழாவிலுள்ள புகழ்பெற்ற ஏரியில் படகுச் சவாரி செய்தனர். பின்னர், கொச்சி நகரின் Wonderla கேளிக்கைப் பூங்கா சென்று, அங்குள்ள விளையாட்டு அம்சங்களை மகிழ்வுற அனுபவித்தனர்.
பயணத்தின்போது, தொழுகை நேரங்களில் அனைவரும் அருகிலுள்ள பள்ளிவாசல்களில் தொழுகையை நிறைவேற்றினர்.
மாணவியருடன், பள்ளியின் 4 ஆசிரியையர், துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
துணைச் செயலாளர்
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி |