வங்கக் கடலில் உருவான 'மாதி' புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த மாதி புயல், வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.
அது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தி இந்து
|