காயல்பட்டினத்தில் வீட்டில் வைத்திருந்த 3 சிலிண்டர்களை திருடிய நபரை ஆறுமுகனேரி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்நதவர் மொகுதூம் பாரூக் மகன் மொகுதூம் ஹுஸைன் (35). இவர் வெளிநாட்டில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது வீட்டிற்கு வெளியே படிக்கட்டில் சமையல் எரிவாயு இருந்த இரு சிலிண்டர்களையும் மற்றும் ஒரு வெற்று சிலிண்டரும் வைத்திருந்தாராம். இதனை 11ஆம் தேதி இரவு யாரோ திருடிச் சென்றுவிட்டனராம்.
12ஆம் தேதி ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் மொகுதூம் ஹுஸைன் புகார் கொடுத்துள்ளனார். ஆறுமுகனேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக காயல்பட்டினம் சீதக்காதி தெருவைச் சேர்ந்த முகம்மது ராவுத்தர் மகன் அப்துல் ரகுமானை (40) கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து திருடு போன மூன்று சிலிண்டர்களும் கைப்பற்றப்பட்டன. அப்துல் ரகுமான் ஒரு மாத்திற்கு முன்னர் வரை மொகுதும் ஹுஸைன் வீட்டில் வேலை புரிந்து வந்தார்.
1. Re:... posted byAbdul Wahid S. (Kaayalpattinam)[14 December 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31949
"இவரது வீட்டிற்கு வெளியே படிக்கட்டில் சமையல் எரிவாயு இருந்த இரு சிலிண்டர்களையும் மற்றும் ஒரு வெற்று சிலிண்டரும் வைத்திருந்தாராம். இதனை 11ஆம் தேதி இரவு யாரோ திருடிச் சென்றுவிட்டனராம்". (C& P)
"வீட்டிற்கு வெளியே" என்ற இந்த வாசகத்தைப் பார்த்தால் திருடனை "என் வீட்டிற்கு வந்து திருடு" என்று அழைப்பது போல் இருக்கிறது. வீட்டிற்கு வெளியே வைத்த 3 சிலண்டரை காணவில்லை. அதிலேயும் இரண்டு சிலிண்டர் Fully Loaded, அதுவும் இரவு நேரத்தில் என்பது "Does not make sense".
தொழும்போது கூட ஒட்டகத்தை கட்டிவிட்டு தொழும்படி நபிமொழி வலியுறுத்துகிறது.
2. காவல்துறைக்கும் மக்களுக்கும் அதிக இடைவெளி உள்ளது...! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[14 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31950
நகரில் ஒரு குழுவாகவே இந்த திருடர்கள் செயல்படுகிறார்கள்...
நகரில் பல வீட்டில் பல சிலிண்டர்கள் திருட்டு போய் உள்ளன. இதில் அதிகம் பேர் காவல் நிலையம் சென்று புகார் செய்வதில்லை. காரணம் காவல் துறைக்கும் மக்களுக்கும் உள்ள நட்புறவு திருப்தி அளிக்கவில்லை. ஆகையால் காவல்துறைக்கும் மக்களுக்கும் அதிக இடைவெளி உள்ளது, இதை இந்த திருடர்கள் நன்கு பயன் படுத்தி கொள்கிறார்கள் என்பது வேதனையான செய்தி...
3. பாதுகாப்பு எல்லை posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[14 December 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31951
வீட்டிற்க்கு வெளியே என்றால் காம்பௌண்ட்க்குள்ளே உள்ள
படிக்கட்டுக்கு அடியில் உள்ள இடத்தில்தான் வைத்திருக்க வேண்டும். விபத்து பாதுகாப்பு கருதி அங்கு வைத்திருக்ககூடும். சிலிண்டர் வைக்க சரியான இடம்தான், ஆனால் சங்கிலியாலோ, அல்லது அதுக்கு மட்டும் இரும்பு வலை கதவுகளோ போட்டு பூட்டி வைக்கலாம்! காம்பௌண்டு கதவுகளையும் இரவில் பூட்டுபோட்டு பூட்டிவைக்கலாம்!
இவ்வளவையும் மீறி ஒருவன் திருடுகிறான் என்றால் அவன்
பலேகில்லாடி திருடன்தான்,அக்கில்லாடியையும் காவல்துறை திறமையையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கவேண்டியது தான்! முடிவு நம் அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலேயே அமையும் (கிடைக்கும்).......ம் எங்க வீடும் அலியார்தெருவில்தான் இருக்கிறது, ஆனால் காம்பௌண்ட் இல்லை????.
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்!
6. முறையான விசாரணை தேவை ...! posted byM.N.L.Mohamed Rafeeq (Kayalpatnam)[14 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31957
நமதூரில் சிலிண்டர் திருட்டு சர்வ சாதாரணமான ஒன்றகிப் போய் விட்டது. கடந்த ஆண்டு எனது தங்கை வீட்டில் ஓடைக்குள் கூண்டு அடித்து பூட்டு போட்டு வைத்திருந்த சிலிண்டரை யாரோ திருடி விட்டுச் சென்றுவிட்டனர். காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்ததும் அவர்கள் பல காரணங்கள் கூறி புகாரை வாங்க மறுத்து விட்டனர். நான் வலியுறுத்தி கூறிய பின் ஒப்புக்காக எங்கள் வீட்டிற்கு வந்து விசாரித்து விட்டுச் சென்றனர்.
சிலிண்டர் திருடனை இது வரை பிடித்த பாடில்லை! சமையல் செய்வதற்கு அத்தியாவசியமான சிலிண்டர் இல்லாமல் என் தங்கை பட்ட பாட்டை சொல்லி மாளாது. இப்படி வீட்டு ஓடைக்குள் இரவு நேரத்தில் சுவர் ஏறிக் குதித்து சிலிண்டரைத் திருடிச் செல்லும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது.
சுமார் ஐயாயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து திருடிய சிலிண்டரை வாங்க ஆள் இருப்பதாக கேள்வி! இந்த திருடனை வைத்தே மற்ற திருடர்களைப் பிடித்து விடலாம். முறையான விசாரணையை காவல்துறை மேற்கொண்டால் இது சாத்தியமே! சிலிண்டர் திருட்டை பற்றிய புகார்களை வாங்கினால் அலைச்சல் என தட்டிக்கழிக்கும் காவல்துறை இனிமேலாவது இவ்விஷயத்தில் அக்கறை கொண்டு கவனம் செலுத்த வேண்டும்.
நமது ஊரில் தான் இதுபோன்ற சிலிண்டர் திருட்டு அதிகம் நடக்கிறது....நம் ஊர் பெண்மணிகளின் கவன குறைவு என்றேதான் நாம் சொல்லவேணும்....இந்த மெத்தன போக்கை நாம் தான் சரி செய்ய வேணும் ....
நம் பெண்மணிகள் அவர்களின் ''கவன குறைவில் '' இருந்து திருந்தாத .. வரைக்கும் ....இந்த சிலிண்டர் திருட்டுக்காரர்கள் திருந்த போவது இல்லை ....பொதுவாக சிலிண்டரை நாம் வெளியே வைப்பதே முழுக்கவே தவறான ஒரு செயல் என்றே சொல்லலாம் ....
நம் மக்களிடம் தவறை வைத்து கொண்டு நாம் காவல் துறையை குறை சொல்வது எந்த விதத்திலும் சரி இல்லை ....இது போன்ற சிலிண்டர் கள்ளனுக்கு நமது காவல் துரைனர் சரியானதோர் தண்டனை வழங்கி ..மேலைக்கு இது போன்ற தவறு நடக்காமல் பார்த்து கொள்ளவேணும்.........
இந்த செய்தி ஊடே ...நம் ஊர் பொது நல அமைப்புகளுக்கு ஒரு சின்ன வேண்டு கோள் >>>> சிலிண்டர் கொண்டு வரும் ....சிலிண்டர் காரர்கள் ஒரே வீட்டுக்கு 2 சிலிண்டர் கொண்டு வந்தாலும் ...அவர்கள் கூலியாக.... 30 + 30 --60 RS கேட்கிறார்கள் ... சிலிண்டர் காரரின் இந்த செயலையும் நம் ஊர் மக்கள் யாருமே தட்டி கேட்பது இல்லை .....இந்த புலம்பலை நான் தற்போது ஊரில் இருக்கும் போது...கேட்டவை ...இதற்கும் எப்போது தான் முடிவு வருமோ ......நமது ஊர் பொதுநல அமைப்புக்கள் இந்த விசயத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது ....பொது மக்களின் சிரம்மம் + மன வேதனை நீங்கும் ...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross