காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் எனும் தஃவா சென்டர் சார்பில், தர்பிய்யா தொடர் வகுப்புகள் பிரிவு (Batch) அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், 3ஆம் பிரிவிற்கான 2ஆம் வகுப்பு குறித்து தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
தஃவா தர்பிய்யா Batch-3 இன் 2 ஆம் வகுப்பு:
நமது தஃவா சென்டர் சார்பாக பிறமத சகோதரர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது என்ற தஃவா தர்பிய்யா பயிற்சி வகுப்பானது தற்போது மூன்றாம் Batch-ல் கிறிஸ்துவர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது? என்ற தலையங்கத்தில் கடந்த 08.12.13(ஞாயிறு) அன்று சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வகுப்பை நடத்திட சென்னை-ஐ சார்ந்த முன்னால் பாஸ்டராக இருந்து இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்று தாயியாக பணிபுரிந்துக் கொண்டிருக்கும் சகோதரர் உமர் ஃபாரூக் அவர்கள் கிறிஸ்துவர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது? என்ற தலைப்பில் வகுப்பை காலை 10 மணி முதல் 1 வரை நடத்தினார்கள்.
இந்த வகுப்பில் அலசப்பட்ட கேள்விகள்.
..... கிறிஸ்தவம் பற்றி.....
• கிறிஸ்தவம் எப்போது & எங்கே உருவானது? கிறிஸ்தவர்கள் என்ற வார்த்தை எப்போது தொடங்கியது?
• கிறிஸ்தவத்தில் எத்தனை வகையுள்ளது?அந்தந்த வகையினரின் கொள்கைகள் என்னென்ன?
பவுல் யார்? இவருக்கும் கிறிஸ்தவத்திற்கும் என்ன சம்மந்தம்?
..... பைபிளை பற்றி .....
• பைபிள் எப்போது எழுதப்பட்டது? எத்தனை பைபிள்கள் உள்ளன? பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளை பற்றி விளக்கம்?
• பைபிள் இறைவனின் வார்த்தையா? இல்லை என்றால் அதை எழுதியவர் யார்?
• பைபிளில் முரண்பாடுகள் உள்ளதா? ஆம் என்றால் சிறு உதாரணம் தரவும்?
• இயேசுவுக்கு இறக்கப்பட்டது இந்த பைபிள் தானா? அல்லது வேறு ஏதும் இருக்கிறதா?
• சுவிஷேசங்களை எழுதியவர்கள் யார்? (யோவான்,மார்க்,மத்தேயு,லூக்கா இவர்கள் யார்?
.....கொள்கை பற்றி.....
• திரித்துவம் என்றால் என்ன? இதற்கும் கிறிஸ்தவத்திற்கும் என்ன சம்மந்தம்?
• இயேசு "நானே சத்தியமும் வழியும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று சொல்வதால் அவர்தான் கடவுள் என்று கிருஸ்தவர்கள் கூறுகிறார்களே .......அது பற்றி தங்களின் கருத்து.
• இயேசுவை கர்த்தர் என்றும் ,தேவ குமாரன் என்றும்,இறைவனின் தூதர் என்றும் கூறுகிறார்களே எது உண்மை?
• பரிசுத்த ஆவி என்றால் என்ன?
• நியாய தீர்ப்பு நாளில் ஏசுவின் உதவி இருக்காது என்பதை பைபிளில் இருந்து எவ்வாறு விளக்குவது?
..... சிலுவை பலி பற்றி.....
1. இயேசு அனைவரின் பாவத்திற்காகவும் உயிர் நீத்தார் என்பது உண்மையா?
2. அவர் சிலுவையில் அறைய பட்டாரா?
3. உயிர்தெழுதல் பற்றி....
..... அற்புதம் பற்றி.....
• கிறிஸ்தவர்கள் அற்புதம் செய்வதாக சொல்கிறார்களே அது உண்மையா?
• இது போன்று செய்பவர்களிடம் இது உண்மை இல்லை என்று சொல்லி எப்படி சத்தியத்தை எடுத்து சொல்வது?
• அற்புதத்தின் மூலம் குணம் கிடைத்தது என்று சொல்கிறார்களே அவர்களிடம் எப்படி நாம் தஃவா செய்வது?
..... பிற கேள்விகள்.....
• பர்னபாஸ் சுவிஷேசம்,சாவுக் கடல் சுருள் இவைகள் என்ன?
• இயேசு கூறும் தேற்றவாளன் யார்?
• முஹம்மது நபி (ஸல்) அவர்களை பற்றி பைபிள் என்ன கூறுகிறது?
• டாவின்சி கோடு (Da Vinci Code) என்பது பற்றி....?
• அந்நிய பாஷை உன்மையா?
• கஃபா பற்றிய செய்தி பைபிளில் உள்ளதா?
• Israel என்ற ஒரு தேசம் உருவாகும் என்று பைபிளில் முன்னறிவுப்பு உள்ளதா?
• கிறிஸ்தவம் பற்றி குர்ஆன் கூறுவதென்ன?
• ஈஸா (அலை) அவர்களுக்கு திருமணம் நடந்ததா ?
• ஈஸா (அலை) அவர்களின் இரண்டாம் வருகை பற்றி பைபிள் & குர்ஆன் / ஹதீஸ் கூறுவது என்ன?
• ஆதியாகமம் 2:26 வசனத்தை விளக்கவும்.
போன்ற கேள்விகளுக்கு மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கம் தந்தார்கள்.
பின்பு மதியம் மதியம் துஆ மனனம் வகுப்பை சகோ.பிலால் & அப்துர்ரஹ்மான் பென்சியன் அவர்கள் நடத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து தாய்யிகளாக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் உளத்தூய்மையுடன் தஃவாப் பணி செய்திட வேண்டும் என்பதற்க்காக "ஷைத்தானின் ஊசலாட்டம்" என்ற தலைப்பில் மௌலவி. நூஹ் அல்தாபி அவர்கள் சிறப்புற நடத்தினார்கள்.
இதில் ஷைத்தான் மனிதர்களை கெடுத்திட அவன் செய்யும் சூழ்ச்சிகள் என்ன? என்றும் அதிலிருந்து நம்மை நாம் எவ்வாறு பாதுகாத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியாக மாணவர்களின் பேச்சு திறனை வளர்க்கும் விதமாக பேச்சுப் பயிற்சி வகுப்பும் நடைபெற்றது.
சென்ற முதல் வகுப்பினை நினைவூட்டும் விதமாக மாணவர்களுக்கு தேர்வும் நடத்தப்பட்டது என்பது குறுப்பிடத்தக்கது.
இவ்வாறு, அந்த நிகழ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |