Re:... posted byM.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா)[16 December 2013] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31984
தலைவரின் உரை அருமை அருமை... தலைவரின் உரையில் சுயநலம், குடும்பநலம் மட்டுமே பிரதானமாக இருந்தது.
காங்கிரஸுடன் கூட்டு இல்லை என்பதற்கு அவர் சொல்லும் காரணம், தனது மகள் சிறையில் வாடினார், அதற்கு காங்கிரஸ் சிபிஐ மூலம் தூபம் இட்டது என்று. தனது மகள் சிறைக்கு செல்லாமல் இருப்பதற்காக தாங்கள் விட்டு கொடுத்த தமிழர்களின் நலன்கள் எத்தனை என்பதை நாட்டு மக்கள் அறியாமல் இல்லை. தங்கள் மகளை காப்பாற்ற காங்கிரஸ் எவ்வளவோ முயற்சி செய்தது, ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் விடாமுயற்சியினால் தான் கொள்ளை அடித்த தங்கள் மகள் உட்பட பலர் சிறைக்கு செல்ல வேண்டியது வந்தது. இதே மகள் எம் பி ஆக வேண்டும் என்பதற்காக தானே இதே காங்கிரஸ் காலில் விழுந்தீர்கள். அப்பொழுது எங்கே போயிற்று சுயமரியாதை... இதே சுப்ரிம் கோர்ட்டில் தங்கள் வழக்கறிஞர் சொன்னாரே, ராஜா மட்டும் தான் காரணம்.. கனிமொழி அல்ல என்று. இப்பொழுது ராஜாவிற்காக நீலிகண்ணீர் வடிப்பதை போல் நடிக்கிறீர்களே... ஆக, திமுக என்பது தனது குடும்ப நலனை மட்டுமே பிரதிபலிக்கின்ற கட்சி என்பதை திரும்பவும் நினைவூட்டி உள்ளீர்கள்.
அடுத்து, பிஜேபி பற்றி கூறும் போது, வாஜ்பாய் நல்லவர், வல்லவர் அதனால் கூட்டு சேர்ந்தோம் என்று சொல்கிறீர்கள். ஆனால் இதே வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது தானே குஜராத்தில் முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். அப்பொழுது தங்கள் கட்சியினர் மந்திரிகளாக இருந்தார்களே, அப்பொழுது என்ன செய்தீர்கள். உலகமெல்லாம் மோடியை காரி துப்பும் போது தாங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தீர்களா.... சரி, இந்த சந்தர்ப்பத்திலாவது அந்த நிகழ்வை பற்றி சிறிதளவேனும் குறிப்பிட்டீர்களா.... மோடியின் அடாவடிதனத்தை பற்றி சிறு குறிப்பு கூட இல்லையே.. ஆக உங்கள் அடிமனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து சிறுபான்மையினர் விழிப்படைந்து உள்ளார்கள். சும்மா வெறும் வாய் சொல்லில் சிறுபான்மையினர் காவலன் என்று சொல்வதை விட்டு விட்டு செயலில் காட்டுங்கள், அப்பொழுது நாங்கள் உங்களை நம்பி உங்கள் பின்னால் அணி திரள்கிறோம். கோயம்பதூர் சம்பவத்தையும் மறக்க முடியவில்லை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross