வேதனை கலந்த விரக்க்திதான் மிஞ்சுகிறது! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[18 December 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32093
சகோதரர் V D சதக் தம்பி அவர்களே,உங்கள் உணர்வுகளலிருந்து வெடித்து சிதறும் வார்தைகள் உங்களின் வாயிலிருந்தோ விரல்களிருந்தோ வெளிவரவில்லை.உங்கள் உள்ளத்தின் பள்ளத்திலிருந்து, நம் உன்னத மார்க்கத்திற்கு ஏதாவது ஒரு வழி பிறக்காதா? எப்படியாவது ஒன்றுபட்டு ஓரணியில் நின்று
நம் வலிமையை இந்த வையகத்தார்களுக்கு உணரச் செய்ய மாட்டோமா? என்ற உண்மையான கவலை மிகு கருத்தாகத்தான் காண்கிறேன்!
ஏற்கனவே கூட்டணியில் இருந்தாலும், பா.ஜ.க வுடன் கூட்டணி இல்லை என்று கலைஞர் அறிவித்தாலையும் தோழமை கட்சி என்ற அடிப்படையில் நன்றி தெரிவித்து என்றும் உங்களுடன் இருக்கிறோம் என்று பேராசிரியர் பேட்டி கொடுத்துள்ளார்!
இப்பொழுதும் ஒன்று கெட்டு விடவில்லை,தமிழக அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும்,அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஓரிடத்தில்கூடி தங்களுக்குள்ள மார்க்க அணுகுமுறை கொள்கைகளையெல்லாம் ஒருபுறம் நிலைநிறுத்திவிட்டு,கலிமா சொன்ன அத்தனை முஸ்லிம் மாந்தர்களும் நம் அண்ணன் தம்பி என்ற பாச உணர்வோடு அவர்களின் வாழ்வாதார உரிமைக்காக ஒத்த கருத்துடன் ஒற்றுமையாக ஓரணியில் திரண்டு தேர்தலை சந்தித்து சிர்பான்யர்களின்சிறப்புறும் பிரதிநிதிகளாக நாடாளுமன்றதில் முஸ்லிம்கள் மாணிக்கங்களாக மிளிர வேண்டும், சிறுபான்மையரின் உரிமை வேண்டி சிங்கங்களாக கர்ஜிக்க வேண்டும்!
அப்படிப்பட்ட புனிதமான நாளும் நேரமும் பிறக்காதா ?அன்புள்ளங்களே, நம்மால் இயன்றவரை அந்த ஒன்றுகூடும்
ஒற்றுமை நாளுக்காக எல்லாவகையிலும் முயற்சிப்போம்!
எல்லா சக்திகளையும் மிஞ்சிய புனித வழி எதுவென்றால் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சி கேட்கும் "துவா"தான்,அவனிடமே அண்டிக்கேட்போம் அவன் அறியாதது ஒன்றும் இல்லை!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
வேதனை கலந்த விரக்க்தியுடன் ,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross