Re:... posted byCnash (Makkah )[19 December 2013] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32104
எதற்காக வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்க வேண்டும் என்று புரியவில்லை .. அப்படி என்றால் கலைஞர் பிஜேபி யுடன் போய் விடுவார் என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது போல் உங்களுக்கும் இருந்ததா .. அவர்தான் சிறுபான்மையோரின் காவலர் ஆகிட்டே அவர் எப்படி பிஜேபி யுடன் போவர் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கும் போது ஏன் போய் விடுவாரோ என்று பயப்படவேண்டும்..
போகாததற்கு வாழ்த்து சொல்ல வேண்டும் .. அவர் போனால் அவருக்கு நஷ்டம் என்பதை அவருக்கு உணர்த்துவதை விட்டு விட்டு .. உங்களுக்கு நஷ்டம் ஏற்பட போறதை கலைஞர் தடுத்த மாறி நன்றி வேற சொல்ல வேண்டுமா? முன்பு ஒரு முறை முஸ்லீம்கள் முதுகில் குத்தி பச்சை துரோகம் செய்து விட்டு பிஜேபி கொஞ்சி கூட்டணி வைத்த வரலாறு மீண்டும் திரும்பி விடும் என்று உங்களுக்கு பதட்டமா?
கூட்டணி என்றால் அவர் செய்த தவற்றை தட்டி கேட்டு உங்களுக்கு பின் நிற்கும் சமுதாயத்தை தலை நிமிர்ந்து நிற்க வைப்பது தானே? அப்படி என்றால் ஏற்காட்டில் காவிகளின் ஆதரவு கேட்ட போது தட்டி கேட்டு இருக்க வேண்டுமே? கட்சி விசுவாசிகளுக்கு வேண்டுமானால் ஜெயா போது எதிரியாக இருக்கலாம் அவரை வீழ்த்த யார் காலையும் பிடிக்கட்டும் ஆனால் நம் முஸ்லீம்களுக்கு போது எதிரி பிஜேபி தானே அவர் ஆதரவை கேட்ட போதே kanditthu இருக்க வேண்டுமே .....
சரி மீண்டும் மீடியா வில் பிஜேபி திமுக கூட்டணி என்று யூகங்கள் வரும்போது கருணாநிதிக்கு சவால் விட்டு அல்லவா பேசி இருக்க வேண்டும் .. இப்படி சமாதன தூதுவர் போல் சென்று நன்றி தெரிவிக்க வேண்டுமா ? ஏதோ உங்களை விட்டால் எங்களுக்கு கதி இல்லை போய்விடாதீர்கள் என்று சொல்லாமல் சொல்லுவதை போல் உள்ளது .. அப்படி ஒரு நிலைமை இந்த சமுதாயத்திற்கு என்றுமே இல்லை ..
தலை நிமிர்த்து தவறுகளை சுட்டி காட்டுங்கள் ... பிரச்னை அடிப்படையில் எது எப்போது தேவையோ அதை ஆராய்ந்து முடிவு செய்து ஆதாரவு கொடுங்கள் .. நேற்று ஆதரவு இன்று ஆதாரவு நாளையும் ஆதரவு கோஷமெல்லாம் கலைஞரை வேணுமானால் மனம் குளிர வைக்கலாம் நிச்சயமாக சமுதாயத்தை தலை நிமிர செய்யாது. மீண்டும் ஒரு முறை ஒரு சீட்டை தந்து உதயசூரியன் சின்னத்தில் உட்கார வைக்கத்தான் உதவும் !!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross