பதினாறும் பெற்றுயர்வாயாக! posted byஅன்புடன் முஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU)[20 December 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32128
படைத்தோனின் உதவியினால் 16-ம் ஆண்டடில் அடியெடுத்து வைக்கும் காயல்.டாட்.காமே, நீ பதினாறும் பெற்று பெருவாழ்வுபெரும் பயணப்பாதையில் பின்னடைவில்லாமல் உன் நீடித்த நெடியபயணம் நிற்காமல் நீளட்டும்!
காயல்.டாட்.காமே... கடல்கடந்து வாழ்பவருக்கு நம்காயலை ஒரு காட்சிப்பெட்டகமாய் பார்க்க, பரவசமுடைய பெருமகிழ்வை முதன் முதலில் தொடங்கி வைத்தவனே உன் தொண்டு தொடர்ந்துயரட்டும்!
காயல்.டாட்.காமே... உன்னையழிக்க ஒரு குழு. அதுவும் ஒர் இரும்பு அரணைப் போல் வசதிபடைத்தவர்கள் முதல் வலிமைமிகு சக்திகள் அனைத்தும் சேர்ந்து வகுக்கப்பட்ட திட்டத்தின் விளைவால் விரிக்கப்பட்ட சதிவலைகளை உன் நேர்மை, நெஞ்சுறுதி துணிச்சலால் அந்த இரும்பரணைக்கூட இலவம் பஞ்சாய் பறக்கடிக்கச் செய்ததை பகுத்தறிவு நடுநிலையானர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
காயல்.டாட்.காமே... உன் உண்மையான உபயோகமான நேர்மையான பணிகளை புரிந்தும் புரியாதது போல் நடித்து இப்படிப்பட்ட இணையதளம் தேவைதானா? என்று கூப்பாடிட்டவர்கள் கூட இன்று இதுபோன்ற சேவை நமதூருக்கு தேவை என்ற எண்ணத்தை பதிய வைத்து, தகவல் உலகில் தன்னிகரற்ற வெற்றியடைந்த வீரனே, இது 16 வயது பாலகனின் செயலா என்று பிரமிக்க வைக்கிறது!
காயல்.டாட்.காமே.. உன் உன்னத சேவையால், ஊர் கடைக்கோடியிலுள்ளவரும் விழிப்புணர்ச்சிப்பெற்று நமதூர் நற்பணிகளில் பின்னிப் பிணைய வைத்தவனே! ஒரு சிறிய ஊழல் நிகழ்வுகளும் ஊடுருவாமல் காப்பவனே!
காயல்.டாட்.காமே.. உன் புண்ணிய பணியானது ஊர் நன்மைகள் என்ற வெதுவெதுப்பான உணர்வுக்கொப்பானது, அந்த வெதுவெதுப்பை விட்டு சற்று விலகி நின்றாலோ அந்த நன்மையின் பலன் கிட்டாமல் போய்விடும், அத்துமீறி அதன் அருகில் சென்றால் அந்த வெப்பம் உன்னை கரியாக்கிவிடும் ஆகவே, நேர்மை, நடுநிலை, நியாயம் என்ற மிதமான நேர்க்கோட்டில் நீ நின்றால் இந்த நாடே மெச்சும் வண்ணம் நன்மைகள் நிறைந்த நற்பெயரில் நிலைத்திருப்பாய்!
காயல்.டாட்.காமே… நீ ஊடகசெய்தியை மட்டும் தந்திருந்தால் 10-த் தோடு 11யென்று நானும் சம்பிரதாய வாழ்த்துக்களோடு நிறுத்தி இருப்பேன். ஆனால் நீயோ ஊடகச்சேவையையும் தாண்டி ஊர் நல உதவி என்ற வற்றாத நதியாக மாறி பல கிளை நதியாக பிரிந்து பல இடங்களுக்கும் புகுந்து புண்ணிய பணியை செய்து வருகிறாய்! தம்மூர் முதல் தலைநகர் ஊர்வரை உன் புண்ணிய நதி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்ற பெருமையை நாளெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
பேரிறைவன் பெருமைக்குறிய கருணைக்கண்களால் உன் உண்மையான ஒப்புயர்வற்ற பணிகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் அதற்குறிய பண் மடங்கு நன்மைகளை நிச்சியம் நீ அடைந்திடுவாய்,அதற்காக நானும் அனுதினமும் அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross