Re:...வாழ்த்துக்கள் posted byM.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா)[21 December 2013] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32138
16-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காயல்பட்டணம்.காம் க்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். எங்களை போன்ற வெளிநாட்டில் வாழும் காயலர்களுக்கு உடனுக்குடன் உள்ளூர் செய்திகளை அறிய சிறந்த முறையில் வாய்ப்பினை முதன்முதலில் ஏற்படுத்தி கொடுத்த தங்கள் இணையதளத்திற்கு நன்றிகள் கோடி.
பல ஆக்கங்களை மிக தெளிவான சிந்தனையுடன் அதன் உட்கருத்து புரிந்து கொள்ளும் வகையில் மிக நீண்ட விளக்கத்துடன் தாங்கள் தரும் செய்தின் வடிவம் பாராட்டுக்குரியது.
இத்தனை வருட அனுபவத்தின் மூலமும் பல சமூக ஆர்வலர்களின், என்னை போன்றவர்களின் கருத்துக்கள் மூலமும் மக்களின் எண்ண வோட்டம் என்ன என்பதை புரிந்து இருப்பீர்கள். இந்த தருணத்தில் விரிவாக எழுத விரும்பவில்லை.
தங்களின் ஒருசார்பு நிலை என்பது நகராட்சி தேர்தல் முதற்கொண்டு தொடர்கிறது. அதனை சீர்தூக்கி பார்த்து நடுநிலையை கடைபிடிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஒரு சார்பு நிலை காரணமாகத்தான் மேலும் பல இணையதளங்கள் உருவாக அடித்தளமாக அமைந்தது. அதுவும் நன்மைக்கே. அதனால் தான் பலதரபட்ட செய்திகள் பல கோணங்களில் வெளிவர தொடங்கின. படிக்கும் வாசகர்களுக்கும் பகுத்தறிவாய்ந்து உண்மை நிலையை அறிய அரிய வாய்ப்பாக அமைந்தது.
தலைவிக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே எந்த வகையிலாவது மனகசப்பை உண்டாக்கி அதில் குளிர் காய்ந்து அற்ப சந்தோஷம் அடைய நம்மில் பலர் உள்ளார்கள். அதற்கு உங்களை போன்ற ஊடகங்கள் வழிவகுத்து கொடுக்காமல் பார்த்து கொள்வது தார்மீக கடமை.
முன்னால் உறுப்பினர் லுக்மான் அவர்கள் தனது ஆதங்கத்தை மிக தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். சகோதரர் முத்து இஸ்மாயிலுக்கும் தெளிவு ஏற்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன்.
தலைவியையோ, அல்லது உறுப்பினர்களையோ மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்ற ஒற்றை கொள்கையை கடைபிடிக்காமல் நடந்து என்ன?. உண்மை நிலவரம் என்ன? என்பதை சீர்தூக்கி பார்த்து நடுநிலையாக செயல்பட வேண்டும் என்பதே என்னை போன்றவர்களின் எண்ணம்.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். சமீபகாலமாக எல்லா தரப்பு கருத்தாளர்களின் கருத்துக்கும் மதிப்பளித்து வெளியிடும் பாங்கு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
பல கருத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளது போல் :
---- Login/password system
---- Rating System
---- Wedding, Birth, death, - separate column
…… பெருநாள் செய்திகளின் ஒன்றுபட்ட தொகுப்பு
…… பாபநாசம் அணை, கடலின் நிலவரம் - வாரம் ஒரு முறை
…… நேர்காணல் நிகழ்ச்சி
……. உள்ளூர், வெளியூர், வெளிநாடு - வேலைவாய்ப்புக்கு தனி பிரிவு
போன்றவைகளில் மாற்றங்களை கொண்டு வந்தால் மேலும் சிறப்பாக அமையும் என்பது எனது கருத்து.
தொடரட்டும் உங்கள் சேவை என்று மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross