Just a posted byAbdul Wahid S. (Kaayalpattinam)[22 December 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 32145
"டிசம்பர் 25 0001 இயேசு கிறிஸ்து (கிருஸ்துவ மத ஸ்தாபகர்) பிறந்த தினம்" (C&P)
மேற்கண்ட (தினமலரில் வந்ததாக சுற்றிக் காட்டப்பட்ட) வாசகத்தில் சிறிதளவும் உண்மையில்லை.
1) டிசம்பர்: இயேசு கிறிஸ்து இந்த மாதத்தில் பிறக்கவில்லை,
மாறாக ஜனவரியில் பிறந்தார் என்பது வரலாற்றாசியர்களின்
கூற்று.
2) 0001 என்று குறிப்பிடப்பட்ட வருஷம் கி.பி. 1 ஆண்டு. இயேசு
கிறிஸ்து கி.பி. 7 ஆம் ஆண்டிருக்கும் கி.பி. 2 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட வருடத்தில் பிறந்தார் என்பது வரலாறு. குறிப்பாக அவர் கி.பி. 4 ஆம் ஆண்டில் பிறந்தார் என்பது பல வரலற்றாசிரியர்களின் கூற்று.
(டிசம்பர் 25 ஆம் நாள் கி.பி. 1 ஆம் ஆண்டில் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்பது கிறிஸ்துவ திருச்சபையால் கிறிஸ்தவர்களுக்கு ஊட்டப்பட்ட நம்பிக்கையே தவிர உண்மையல்ல. கிறிஸ்துவ திருச்சபை இந்த நம்பிக்கைக்கு இதுவரை எந்த ஆதாரமும் அளிக்கவில்லை.)
3) கிறிஸ்துவ மதத்தை ஸ்தாபித்தவர் இயேசு கிறிஸ்து அல்ல. இயேசு வாழ்ந்த காலத்தில், அவரை நேரில் கண்டறியாத, அவர் இந்த உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டபின் அவர் "என் கனவில் வந்தார்" என்று கூறிய புனித பவுல் அடிகள்தான் (St. Paul) இந்த மதத்தை நிறுவியவர் ஆவார்.
இயேசு இந்த உலகில் வாழ்த்த காலத்தில் ஒரு புதிய மதத்தை (கிறிஸ்துவத்தை) நிறுவ முற்படவில்லை. மாறாக அவருக்கு முந்திய தீர்க்கதரிசிகள், இறைத் தூதுவர்கள் மூலம் அருளப்பட்ட வேதங்களின் கட்டளைகளை பின்பற்றி நடந்தார் என்பதற்கும் , நடக்கும் படி மக்களை அறிவுறுத்தினார் என்பதற்கு, அதற்காகவே அனுப்பப்பட்டவர் என்பதற்கும் கிறிஸ்தவர்கள் இறைவேதம் என்று நம்புகிற விவிலியத்தில் ஆதாரம் உள்ளது.
Matthew 5:17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
Matthew 5:18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Matthew 5:19. ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.
Matthew 5: 17 “Do not think that I have come to abolish the Law or the Prophets; I have not come to abolish them but to fulfill them.
18. For truly I tell you, until heaven and earth disappear, not the smallest letter, not the least stroke of a pen, will by any means disappear from the Law until everything is accomplished.
19. Therefore anyone who sets aside one of the least of these commands and teaches others accordingly will be called least in the kingdom of heaven, but whoever practices and teaches these commands will be called great in the kingdom of heaven.
------------------------- END -----------------------
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross