மாதம் மாதம் இது போன்ற கூட்டங்கள் தொடரட்டும்... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[23 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32155
இது முன் நடந்த பல கூட்டங்களுக்கும் சமீபத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கும் மிக பெரிய மாற்றங்கள் இருந்தன அதை நேரில் கண்டேன். மக்களுக்கு பயனுள்ளதாக இக்கூட்டம் அமைந்தன அதில் மாற்று கருத்து அல்ல.
தலைவி சரி இல்லை அவரால் தான் திட்டங்கள் செய்யபடுவதில்லை என கூறி வந்த உறுப்பினர்கள் மத்தியில் உண்மை நிலவரம் என்ன என்பதை அறிந்து நகராட்சி அதிகாரிகளில் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையில் உள்ளவர்கள் தான் பிரச்சனைக்கும் - தடைகளுக்கும் மேலும் நாங்கள் முன்பு எங்களுக்குள் (தலைவி + உறுப்பினர்கள்) விரோத போக்கிற்கும் இதற்க்கு காரணம் அதிகாரிகள் நீங்கள் தான் என பல குற்றசாட்டுக்களை முன் வைத்து காரசாரமாக இக்கூட்டம் நடைபெற்று முடிந்தது...
விருத்தாசலம் முன்னால் நகர்மன்ற தலைவரின் அனுபவ உரை என் நினைவுக்கு வந்து சென்றது இதோ... நகர்மன்றத்தில் தலைவரையும் + உறுப்பினர்களையும் நகர்மன்ற அதிகாரிகள் ஒன்று சேரவே வைக்க மாட்டார்கள் - இந்த அதிகாரிகள் தலைவர் - உறுப்பினர்கள் இருவருக்குள் ஒற்றுமையை விரும்புவது இல்லை...!
ஏன்...? எதற்காக....? புரியவில்லையா...? எல்லாம் அதற்காக தான்...! நமது இந்தியாவில் உள்ள எல்லா மாநில அரசு அலுவலகங்களில் மலிந்து காணப்படும் செயல் எது..? லஞ்சமும் - ஊழலும் தான்... இதற்காகவே இவர்கள் (அதிகாரிகள்) ஒற்றுமையை விரும்ப மாட்டார்கள்... என்பது குறிப்பிடத்தக்கது...
5 வார்டு உறுப்பினர் சகோதரர் ஜனாப் ஜகாங்கீர் அவர்கள் நகராட்சி அதிகாரிகளின் மேல் போட்ட கிடுக்கு பிடி பார்வையாளராக வந்த அனைவரையும் கவர செய்தது... வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள்...
உறுப்பினர்களே அதிகாரிகளை கேள்வி கேளுங்கள் உங்களுக்குள் சச்சரவு வேண்டாம்.. இப்போதாவது உணர்தீர்களே... மக்கள் வரி பணத்தில் நடக்கும் நகர்மன்ற கூட்டம் மக்களுக்கு பயன் உள்ளதாக அமையட்டுமாக... தொடரட்டும்... மாதம் மாதம் இது போன்ற கூட்டங்கள் தொடரட்டும்...
குறிப்பு - நகர் மன்ற கூட்டத்திற்கு பார்வையாளராக வர முடியாதவர்கள் வீடியோவை பாருங்கள் உண்மை விளங்கும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross