விழிப்புணர்வுடன் செயல்படுங்கள் posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[29 December 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 32214
நம் நகராட்சியால் போடப்படும் பெரிய சாலை. கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் இரண்டு சாலைகளில் ஒன்று. ஒப்பந்தக்காரர், ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிட்டவாறு, தரமாக போடுகின்றாரா? அந்த சாலையில் தோண்டிய மண்ணை நகராட்சியில் கொட்டினாரா? என்று இந்த சாலை அமையும் 11-வது மற்றும் 13-வது வார்டு உறுப்பினர்கள் கண்காணிக்க வேண்டிய தருணம்.
இவ்வளவு காலம் கஷ்டப்பட்டு விட்டோம். எப்படியாவது போட்டுவிட்டால் போதும் என்று விரக்தியில் இருக்க வேண்டாம். அதே போல், ஊழல் கண்காணிப்பு அமைப்பினரும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம்.
நமதூரில் ஏற்கனவே போடப்பட்ட சில சாலைகள் தரமாக போடப்படாததால், மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்து, அதிகாரிகள் ஆய்வு செய்து, தற்போது அந்த சாலைகள் தரமான சாலையாக அமைய காரணகர்த்தாவாக செயல்பட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர், இந்த சாலையும் தரமாக போடப்பட விழிப்புடன் செயல்பட்டு நகருக்கு நல்லது செய்வார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross