செய்தி: காயல்பட்டினம் அரசு நூலகத்திற்கு கணினி, ஒளிபடிப்பொறி இயந்திரங்கள் வழங்கப்படும்! சிறந்த நூலகருக்கான பாராட்டு விழாவில் மாவட்ட நூலக அதிகாரி அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாசிப்பறிவு சிந்தனை அமுத சுரபியே ஒரு நூலகமாகும்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான். (yanbu)[02 January 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32257
மாஷா அல்லாஹ் எவ்வளவு ஆக்கபூர்வமான அறிவிப்பூர்வமான நிகழ்ச்சி! வாசிப்பறிவு சிந்தனை அமுத சுரபியை அடையாளம் காட்டி அதன் சுவையை பருக வைத்து முன்னணி நூலகம் என்ற முத்திரையை பெற்றுதந்த சகோதரர் முஜுபின் பாராட்டுவிழா நமதூரில் நடைபெற்ற்மைகண்டு களிப்புருகிறேன்!
மேடையில் சான்றோரும் பெரியோரும் புடைசூழ அமைந்திருக்கும் இந்த அறிவுப்பூர்வமான நிகழ்ச்சியைக்காண உள்ளூர் மக்கள் உவகை பொங்கிட உறசாகதுடன் அணியணி யாய் திரண்டிருக்கவேண்டும்!
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறார்கள்,எம்மை தீண்டுபவர் எவரும் இல்லையா என்று ஏராளாமான
இருக்கைகள் ஏளனமாக கேட்கிறது!
நம் மண்ணின் மைந்தனுக்கு மகிமை செலுத்தும் இந்த முத்தான நிகழ்ச்சிக்கு அகம் மகிழ ஆதரவு தெரிவிப்பது தான்
நம் மண்ணுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும் !
விளையாட்டு விழா.வேடிக்கை விழா மற்றும் நம்மை நெடிய நாட்களுக்கெல்லாம் வீணாக்கும் கட்சிகள் விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ஆட்சிமன்ற தலைவர்கள் முதல் ஊர் முக்கியஸ்தர்கள் வரை முண்டியடித்துக் கொண்டு மொய்க்கும் நிலையைத்தான் தற்போது அதிகம்மாக பார்க்க முடிகிறது!
அறிவுபூர்வமான இதுபோன்ற நிகழ்ச்சிக்கு மதிப்புமிகு ஊர் முக்கியமானவர்கள் என்று நாங்கள் கருதும் நீங்கள் போகாமல் இருக்கலாம், ஆனால் அருகாமை ஊரிலுள்ள ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும் உங்களின் ஆதரவு தரத்தின் அடையாளத்தை அப்பட்டமாக தெருவிக்க இச்செயல் ஏதுவாகிவிடும் என்பதை மிக வேதனை கருத்தாய் இங்கு விதைக்கிறேன்! .
அல்லது இன்னனவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் தான் நானும் கலந்துகொள்வேன் என்று இனம் பிரித்து பார்த்து பின்னேர் செல்லும் ஒரு சில குறுகிய சிந்தனையில் சுழல்பவர்களின் வழியை நிறையபேர்கள் நாட ஆரம்பித்து விட்டார்களா?
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross