விருந்தம்பலின் வேதனைக்குறிய நிகழ்வு!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[05 January 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32286
சகோதரர் ஷூஐப் அவர்கள் அலையாத விருந்தாளியாக நம்மை கல்யாண வீட்டிற்கும்,களரி சாப்பாட்டிற்கும் அழைத்து சென்றுவிட்டார்.வயிறு நிரம்ப ரசித்து (கட்டுரை) விருந்தை உண்டோம். மாஷா அல்லாஹ்!
எல்லாவற்றையும் அலசிய தாங்கள், விருந்துக்கு வரும்பொழுது கட்டாயம் கார்டை கொண்டுவரவேண்டும் என்ற வாசகத்தின் பொருளையும்,அதன் மரியாதையையும் சற்றே அலசி இருக்கலாம்!
என்னைப்பொருத்தவரை,கட்டாயம் கார்டு கொண்டுவரவும் என்ற வாசகம் பொருந்திய அட்டையையுடன் அழைக்கும் திருமண விருந்திற்கு செல்லமாட்டேன்.அவர்கள் வீட்டு அழைப்பு,கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதோடு சரி!
அப்படி கார்டுகேட்டு அது இல்லையென்றவுடன் அவரை விருந்துமண்டபதிற்க்குள் விடாமல் திருப்பி அனுப்பிய சம்பவம் ஏதும் நடைப்பெற்றிருக்கிறதா என்றுகேட்ப்பீர்கலேயானால்,
அந்த சம்பவமும் நடந்திருக்கிறது!
(பெயர்சொல்ல விரும்பவில்லை,
நிரூபித்துதான் ஆகணுமஎன்றால் நிரூபிக்கத்தயார்) அவர் கார்டை எடுத்து செல்ல மறந்து விட்டார்,விருந்து மண்டப வாசலில் ஒருவர்(கல்யாண வீட்டு சொந்தக்காரர் என்று சொன்னார்) இவரிடம் கார்டை கேட்டிருக்கிறார்,கார்டை மறந்திட்டம்ப்பா பஜாரிலிருந்து நேராக இங்கு வருகிறான் என்று சொல்லி இருக்கிறார்,இல்லைங்க கார்டு வேணுமே என்று
கேட்கவே,அந்த இடத்தில அவமானத்தால் கூனி குறுகிய அவர் அரகில் உள்ளவர்களெல்லாம் அவரை ஏதோ ஒரு அர்த்தத்தில் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவ்விடத்தை விட்டு சென்று விட்டார்.
சென்ற அவர் நேராக வீட்டிற்கு வந்து தனக்கு வந்த விருந்து கார்டை எடுத்துக்கொண்டு திரும்பவும் அந்த விருந்து மண்டபத்திற்கு வந்து எந்த நபர் தன்னை தடுத்தாரோ அந்த நபரிடம் கார்டை காட்டிவிட்டு அவர் முன்னாலேயே
அந்த கார்டை கிழித்து விட்டு,இந்த கார்டுக்குள்ள மதிப்புக்கூட எனக்கில்லை,ஆள் தராதாரத்தை அறியாத உங்கள் வீட்டில் நான் கை நினைப்பது எனக்குத்தான் அவமானம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்!
இன்றைக்கு நாகரீகம் நெடிய வளர்ந்து விட்டது என்று சொல்லிக்கொள்ளும் நாம்,அன்றைய வழக்கத்திலிருந்து மாறி இன்று நாகரிக முறையாம் கார்டு முறையை ஒரு சில
பிரிவினர்களால் பின்பற்றபடுகிறது. விருந்துக்கு வருபவர்களையும் அனுமதி சீட்டின்றி அனுமதியோம் என்பது எப்படிப்பட்டநாகரீகம்,எப்படிப்பட்ட விருந்தோம்பல்பண்பு. பண்பின் இலக்கணத்தை இவர்களிடம்தான் பைய்லனும் போலும்!
நாங்கள எவரிடமும் எந்த கார்டையும் கேட்பதில்லை என்று எவராவது வாதிட முன் வந்தால்,நான் கேட்கிறேன் பிறகு ஏன் அந்த வாசகத்தைபபோடுகிறீர்கள்;?
இந்த கார்டு வாசகதைப் பார்த்துவிட்டு வெளியூர் நபர் கேட்க்கிறார்,ஆக விருந்தென்றால் விழுந்தடித்து ஓடுவீர்களோ அதற்குத்தான் இந்த அளவுகோல் கார்டோ?எகிறார்!
விருந்தாலிக்குள்ள மறியாதை, விருதோம்பல்மரபு போன்ற பண்புகளில் பெயர்பெற்ற நமதூரில் நாகரீகம் என்ற வேறுபட்ட சிந்தனையில் அப்பண்புகள் வேக வேகமாக விலகி கொண்டிருக்கும் நிலையை எண்ணி வேதனையால் வெட்கி தலைகுனிகிறேன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross