Re:... posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[05 January 2014] IP: 113.*.*.* China | Comment Reference Number: 32289
கார்டு முறை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட சுய கட்டுப்பாட்டு முறைதான். அனுமதி மறுத்த கல்யாண வீட்டுக்கரைரையோ அல்லது கார்டு கொண்டுவர மறந்தவரையோ குறை சொல்லி பயனில்லை. மொத்தத்தில் நம் ஊர் பழக்கவழக்கங்களைதான் குறை சொல்ல முடியும்.
முன்பு கல்யாண நிகாஹ் வைபவத்திற்கு அதிகமானோரை அழைத்து பொட்டலம் போடுவர். தற்போது இம்மாதிரி பொட்டலம் போடும் பழக்கம் முற்றிலும் இல்லை . மாறாக 2000 / 4000 பேர் என விருந்துக்கு அழைக்கின்றனர்.கல்யாண வீட்டாருக்கு இந்த 2000 / 4000 பேரின் முகம் தெரிவதில்லை. அவரும் வாசலில் நின்று அனைவரையும் வரவேற்க நிற்பதில்லை. மாறாக அந்த பகுதியின் முன்னணி குடும்ப அல்லது ஜமாத் நபர்தான் விருந்து நடக்கும் நுழைவு வாயிலில் நிற்கிறார். சொல்லாதவர்களும் நிறையவே விருந்திற்கு வருகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த வாயிலில் நிற்கும் நபர் முனையும்போது இம்மாதிரி அசம்பாவிதம் நடைபெற்று விடுகிறது.
ஊர் விரிந்துவிட்டது. மக்கள் தொகை அதிகம்.நிறைய பேரைதெரியும்.இன்ன தெரு இந்த குடும்பம் அல்லது இன்னார் பிள்ளை என்று தெரியும். ஆனால் பெயர் தெரியாது. ஒரு கணக்கெடுப்பில் ஜலாலியாவில் நடந்த ஒரு கல்யாணத்தில் 20 % முதல் 15% வரை சொல்லாதவர்கள் விருந்துக்கு வருகின்றனர்.அதிலும் முதல் சுற்றிலேயே அவர்களில் பெரும்பகுதி நுழைகின்றனர் .டேபிள்& சேர் சாப்பாடுகளில்தான் இந்த ஒழுங்கீனம் அதிகம். சஹன்சாப்பாடுகளில் இந்த ஒழுங்கீனம் குறைவுதான்.இது ஒரு பொது வலைத்தளம் என்பதால் இன்னும் விரிவாக எழுத முடியவில்லை.
எனவே கார்டை நாம் கையில் வைத்திருப்பது நல்லது.இது ஒரு சுய ஒழுங்குமுறைதான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross