Re:...Too late ...tributes to late uvais haaji posted bymackie noohuthambi (kayalpatnam)[06 January 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 32307
15 ஆண்டுகள் வேகப் பயணம் இப்போது துவண்டு விட்டது ஏன்?
உவைஸ் ஹாஜி அவர்களின் மண்ணறை ஈரம் காய்ந்துவிட்டது அவர்கள் கேள்வி கணக்கு முடிந்து விட்டது சுவர்க்க பயணம் தொடங்கி விட்டது.
நிழல்படங்கள், சில மனக் கசப்புக்கள் இன்னும் நிலை கொண்டிருப்பதை சொல்லாமல் சொல்கிறது. தாகத்தை பகிர்ந்து கொள்ள முடியாமால் போனது, இந்த ஊரின் நன்மைக்கு தோள் கொடுக்க முடியாமல் போனது..எல்லாம் உண்மைதான். அது ஒரு ஷைத்தானின் சூனியம்தான். ஆனாலும் சோகம் நம் தொண்டையை அடைத்தபோதும், நம் எல்லோராலும் நல்லவர் என்று அடையாளப் படுத்தப் பட்ட ஒரு பெரும் தலைவர்.. கட்சிக்கு அப்பால் நின்று, ஏழை பணக்காரன், அந்த முஹல்லா இந்த முஹல்லா , அந்த தெரு இந்த தெரு, அந்த ஜமாத்து இந்த ஜமாத்து என்ற எல்லைகளை கடந்து ஒரு மனித நேயராக வாழ்ந்து மறைந்தவரின் இரங்கல் கூட்டத்தில் நடந்தபோது, அவர்களோடு இணைந்து பணியாற்றி ஊழ் வினையால் பிரிந்து சென்றவர்கள் பலரின் திருமுகங்கள் இந்த நிழல் படங்களில் காண முடியவில்லையே, படம் பிடித்தவரின் தவறா அல்லது தவறுகளில் இருந்து பாடம் படிக்க மறுப்பவர்களின் தவறா அல்லது பிரிந்தவர்கள் இனி எப்போதும் இணைய முடியாது என்ற தவறான வாதங்களின் விளைவா? கண்கள் பனிக்கின்றன, இதயம் கனக்கின்றது ...
ஒரு மறைவு ஒரு விடியலின் வரவு....
வாருங்கள்....நீர் வெட்டி நீர் பிரிவதில்லை... அல்லாஹ்வுக்காக...ஊருக்காக... ஊர் நன்மைக்காக..நாம் மீண்டும் இணைந்து செயல்படுவோம்..விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.
ஒற்றுமை, அது ஒரு வழிப் பாதை அல்ல, இரு வழிப் பாதை..அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.உள்ளங்களை இணைத்து வைப்பானாக..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross