காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், 17.12.2013 செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
அன்னாரது ஜனாஸா, அன்று மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்குமுகமாக, 20.12.2013 வெள்ளிக்கிழமை மாலையில், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் இரங்கல் கூட்டம், ஐக்கியப் பேரவை துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ தலைமையில் நடைபெற்றது.
ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், அதன் கவுரவ ஆலோசகர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப், முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, ஹாஜி எம்.எம்.உவைஸ் குடும்பத்தினர் மற்றும் நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மஹ்ழரா அரபிக்கல்லூரி, மத்ரஸத்துன் நஸூஹிய்யா ஆகியவற்றின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஐக்கியப் பேரவை துணைச் செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வரவேற்புரையாற்றினார்.
திமுக நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், அதிமுக ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி இசக்கி மாரியப்பன், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் காயல் முத்துவாப்பா, மதிமுக மாநில பொறுப்புக்குழு உறுப்பினர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, ஹாங்காங் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், துளிர் அறக்கட்டளை செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் - சென்னை அமைப்பின் செயலாளர் ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஐக்கியப் பேரவை துணைப் பொருளாளர் ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, லட்சத்தீவு உள்ளாட்சி மன்றத் தலைவர் ஹாஜி என்.கோயா சார்பில் எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிர்வாகி முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், எல்.கே. பள்ளிகளின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி நிர்வாகி வாவு நெய்னா ஸாஹிப், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரும், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) தலைவருமான ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர், காயல்பட்டினம் நகர்மன்ற 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், கே.எம்.டி. மருத்துவமனை சார்பில் ஹாஜி ஏ.ஆர்.லுக்மான், காயல்பட்டினம் நல அறக்கட்டளை செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஹாஜி பி.மீராசா மரைக்காயர், பழைய காயல் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் எம்.எம்.நிஸ்தார் உள்ளிட்டோர் ஹாஜி எம்.எம். உவைஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கருத்துரையாற்றினர்.
காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் - முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், அல்ஜாமிஉல் கபீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ ஆகியோர், மறைந்த உவைஸ் ஹாஜியின் வாழ்க்கைச் சரிதத்தை விளக்கி சிறப்புரையாற்றினர்.
ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா ஆகியோர் அனுப்பி வைத்திருந்த இரங்கல் செய்திகளும் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
மவ்லவீ ஹாஃபிழ் கத்தீப் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இரவு 20.45 மணி வரை நடைபெற்ற இக்கூட்டத்தில், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.
களத்தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
[விடுபட்ட படம் இணைக்கப்பட்டது @ 14:24 / 07.01.2014] |