காயல்பட்டினம் நகராட்சியின் ஒரு வழிப்பாதையான தாயிம்பள்ளி - பெரிய நெசவுத் தெரு - எல்.கே.லெப்பைத்தம்பி சாலை வழியாக புதிய சாலை
அமைக்கும் பணி டிசம்பர் 26 அன்று துவங்கியது. துவக்கமாக 715 மீட்டர் நீளம் கொண்ட இப்பாதையில்,
சாலையைத் தோண்டும் வேலைகள் நடைபெற்றன.
பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த செய்யத் அஹமத் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கின் மூலமாக இச்சாலைப் பணிகளுக்கு - சென்னை
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை - நகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியரை, ஒரு வாரத்தில் விளக்கம் வழங்கக் கோரி - ஜனவரி 2 அன்று இடைக்காலத் தடை வழங்கியது.
இதற்கிடையே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் இச்சாலைப் பணிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
==> பணிகள் நடைபெறவுள்ள - தாயிம்பள்ளி சந்திப்பு - பெரிய நெசவு தெரு - லெப்பை தம்பி சாலை - பகுதியின் நீளம் - 715 மீட்டர்
------ தாயிம்பள்ளி சந்திப்பு முதல் பெரிய நெசவு தெரு துவக்கம் வரையிலான நீளம் - 100 மீட்டர்
------ பெரிய நெசவு தெரு துவக்கம் முதல் IOB வங்கி சந்திப்பு வரையிலான நீளம் - 360 மீட்டர்
------ லெப்பை தம்பி சாலை நீளம் - 255 மீட்டர்
தாயிம்பள்ளி சந்திப்பு முதல் பெரிய நெசவு தெரு துவக்கம் வரையிலான பகுதியில் சாலை 3.75 மீட்டர் அகலத்திற்கும், 20 சென்டி மீட்டர்
ஆழத்திற்கும் தோண்டப்படும்.
பெரிய நெசவு தெரு துவக்கம் முதல் IOB வங்கி சந்திப்பு வரையிலான பகுதியில் சாலை 3.75 மீட்டர் அகலத்திற்கும், 20 சென்டி மீட்டர் ஆழத்திற்கும்
தோண்டப்படும்.
லெப்பை தம்பி சாலை பகுதியில் சாலை 6.00 மீட்டர் அகலத்திற்கும், 20 சென்டி மீட்டர் ஆழத்திற்கும் தோண்டப்படும்.
மேலும் புதிய சாலை -
<><><> தாயிம்பள்ளி சந்திப்பு முதல் பெரிய நெசவு தெரு துவக்கம் வரையிலான பகுதியில் 4.00 மீட்டர் அகலத்திற்கு விரிக்கப்படும்
<><><> பெரிய நெசவு தெரு துவக்கம் முதல் IOB வங்கி சந்திப்பு வரையிலான பகுதியில் 4.30 மீட்டர் அகலத்திற்கு விரிக்கப்படும்
<><><> லெப்பைத்தம்பி சாலை பகுதியில் 6.00 மீட்டர் அகலத்திற்கு விரிக்கப்படும்
715 மீட்டர் தூரத்திற்கும் கீழ்க்காணும் அடுக்கு (Layer) முறையில் சாலை அமைக்கப்படும்.
--> 715 மீட்டர் தூரத்திற்கும் WMM (Wet Mix Mecadam) - 20 சென்டி மீட்டர் ஆழத்திற்குப் போடுவது
--> 715 மீட்டர் தூரத்திற்கு 10 சதுர மீட்டருக்கு 6 கிலோ கிராம் அளவில் ப்ரைம் கோட் (Bituminious Emulsion) பூசப்படும்.
--> 715 மீட்டர் தூரத்திற்கு 10 சதுர மீட்டருக்கு 2.5 கிலோ கிராம் அளவில் டாக் கோட் (Emulsion Bitumen) பூசப்படும்.
--> 715 மீட்டர் தூரத்திற்கும் Compacted Thick Bituminous Macadam - 5 சென்டி மீட்டர் ஆழத்திற்கும் போடப்படும்.
--> 715 மீட்டர் தூரத்திற்கும் Compacted Thick Semi-dense Bituminuous Concrete - 2.5 சென்டி மீட்டர் ஆழத்திற்கும் போடப்படும்.
--> 360 மீட்டர் தூரத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட பெரிய நெசவு தேர்வு சாலை ஓரங்களில் - 60 சென்டி மீட்டர் அகலத்திற்கு, 15 சென்டி மீட்டர்
ஆழத்திற்கு Red gravel விரிக்கப்படும்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர்
ஐ. ஆபிதா சேக்கின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik |