காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் இயங்கி வரும் - காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் அறங்காவலர்களுள் சிலர் காலமானதையடுத்து, வெற்றிடமாகவுள்ள அப்பொறுப்பிடங்களுக்கு - அதன் நிர்வாகக் குழு கூட்டத்தில் புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாகக் குழு கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நமது காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு கூட்டம், தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையில், பைத்துல்மால் செயலக கூட்டரங்கில், இம்மாதம் 02ஆம் தேதி வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு 08.30 மணியளவில் நடைபெற்றது.
கிராஅத்துடன் துவங்கிய இக்கூட்டத்தில், வெற்றிடமான அறங்காவலர் பொறுப்பிடங்களுக்கு புதியவர்களை நியமிப்பது குறித்து அறங்காவலர்களின் கலந்துரையாடல் நடைபெ்றறது. நிறைவில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - வெற்றிடங்களுக்கு புதிய அறங்காவலர்கள்:
காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளையின் காலியாக உள்ள இடங்களில், கீழ்க்கண்ட நான்கு நபர்களை அறங்காவலர்களாக இக்கூட்டம் ஏகமனதாக நியமனம் செய்கிறது:
(1) ஹாஜி ஏ.எச்.செய்யித் முஹம்மத் நெய்னா ஸாஹிப்
(2) ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ
(3) ஹாஜி எஸ்.எம்.அஹ்மத் சுலைமான்
(4) ஹாஜி என்.எம்.எம்.முஹம்மத் அப்துல் காதிர்
தீர்மானம் 2 – நலத்திட்டங்களை சிறப்புற செயல்படுத்தல்:
இன்ஷாஅல்லாஹ் வருங்காலங்களில் கல்வி மற்றும் நலிவுற்றோர் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துஆ - ஸலவாத்துடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத் |