1. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[05 January 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32290
நல்ல செயல் தான். பாராட்டுவோம்.
பல தெருக்களில் இரண்டு வார்டுகள் வருகின்றன, அதை எப்படி குறிப்பிடப் போகிறார்கள்.
ஊரில் பல பல பகுதிகள், நகர்கள் உருவாகி விட்டன. அதனை முறையாக பெயர் வைக்க வில்லை. தெருக்களுக்கு அவரவர்கள் விருப்பத்திற்கு பெயர் வைத்து விடுகின்றார்கள். சில முரண்பாடான பெயர்களும் தொடருகின்றன.
குறிப்பாக, நகராட்சிக்கு முன்பு ஆரம்பிக்கும் தெரு "முத்தாரம்மன் கோயில் தெரு ", இது மஹ்லரா நகர் வரை தொடர்ந்து அழைக்கப்படுகின்றது.
மஹ்லரா நகர், அதன் பின்புறம் தேவமார் தெரு வரை "சேது ராஜா தெரு". இந்த பகுதியில் பல நூறு வீடுகள், ஒரு நகர், பர்ப் பல தெருக்கள் முளைத்து நீண்ட காலம் ஆகிவிட்டன. ஆனால் இந்த இரு தெரு பெயர்தான் உள்ளது.
அதிலும் கொடுமை என்ன வென்றால், மஹ்லரா நகரில் புதிதாய், அழகாய் ஒரு பெண்கள் தைக்கா உருவாகி உள்ளது. அதன் முகவரி தெரியுமா,
மஹ்லரா காதிரிய்யா பெண்கள் தைக்கா,
முத்தாரம்மன் கோயில் தெரு,
பஞ்சாயத்து ரோடு,
காயல் பட்டினம்.
2. Re:... posted bymohmed younus (kayalpatnam)[05 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32293
சதுக்கை தெருவை மகான் லெப்பை அப்பா தெரு என்றும் துஷ்டர ராயர் தெருவை ஆசாத் தெரு என்றும் மாற்றி பல வருடங்கள் ஆகின்றது. கெஜட்டில் பதிந்தவர்கள் சரியாக பதிய வில்லையா? இல்லை நகராட்சியின் கவனக்குறைவா?
3. தனியார் வைக்கும் பெயர் பலகைக்கு முக்கியத்துவும் கொடுக்காதீர்கள்... என்பதே என் கருத்து. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[05 January 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 32295
சிவன் கோயில் 1வது தெரு / சிவன் கோயில் 2வது தெரு / சிவன் கோயில் 3வது தெருவில் தற்போது இடைப்பட்ட காலத்தில் அக்பர் ஷா 1வது தெரு, அக்பர் ஷா 2வது தெரு, அக்பர் ஷா 3வது தெரு என்று தனி நபரால் வைக்கப்பட்ட பெயர் பலகைகளை நகராட்சி கண்டு கொள்ளமால் உள்ளதே ஏன்...? நகராட்சியில் இதற்க்கு ஏதும் தெரு பெயர்மாற்ற தீர்மானம் ஏற்றப்பட்டதா..! நகர் மக்களே சிந்தியுங்கள்..!
அக்பர் ஷா 1வது தெரு, அக்பர் ஷா 2வது தெரு, அக்பர் ஷா 3வது தெரு என்று தனி நபரால் வைக்கப்பட்ட பெயர் பலகைகளால் ஏற்படும் குழப்பம் அதிகம் வர நேரிடும் அதை தவிர்க்க என்ன வழிமுறைகளோ அதை அங்கு குடியிருக்கும் மக்கள் இன்றே யோசித்து செயல் படுங்கள்..!
அங்கு குடியிருபோருக்கு தபால் முகவரி குழப்பம் / ரேசன் கார்டின் முகவரி / தேர்தல் அட்டை / ஆதார் அட்டை / வங்கி கணக்கு ஆரம்பிக்க முகவரி / வீட்டு தீர்வை ரசீது / குடிநீர் வரி ரசீது / பிறப்பு / இறப்பு சான்றிதல் பெறுதல் / பாஸ்போர்ட் க்கு முகவரி அளித்தல் / பள்ளி - கல்லூரி சான்றிதல் பெறுதல் இப்படி பல ஆவணங்கள் பெறும் போது பல சிக்கல் (இப்போது அல்ல பிற்க்காலத்தில்) கண்டிப்பாக ஏற்பட வாய்ப்புள்ளது...!
மத்திய - மாநில அரசின் ஏதாவது ஒரு ஆவணத்தை நமக்காக நாம் பெறும் போது அத்துறையின் அதிகாரிகள் இந்த பலகையை ஆதாரமாக வைத்து நமக்குரிய ஆவணத்தை தரமாட்டார் - அவர் ஆராய்வது அரசின் விதிமுறை ரெகார்டில் என்ன உள்ளதோ அதை தான் அன்று சட்டமாக முறைப்படி பேசுவர்..
ஆகையால் அரசு ஆவணத்தில் என்ன பெயர் உள்ளது அதை கவனமாக நகராட்சியில் RTI மூலம் கேட்டு தெரிந்து நகர்மன்றம் தரும் அப்பெயரில் விண்ணப்பம் பூர்த்தி செய்வதும் - பெறுவது அனைவருக்கும் நல்லது... குறிப்பாக நாளைய தலைமுறையினருக்கு நல்லது..
தற்போது தாசில்தார் அலுவலகத்தில் இருப்பிட முகவரி திருத்தம் சம்பந்தமாக நமதூர் மக்கள் அலைந்து அலைந்து நொந்து போய்வருவது பிறகு வக்கீல் மூலம் கோர்ட்டில் சரி செய்வதும் வாடிக்கையாகி வருகிறது என்பதே உண்மை...
தனியார் வைக்கும் பெயர் பலகைக்கு முக்கியத்துவும் கொடுக்காதீர்கள்... என்பதே என் கருத்து.
5. இது தான் சமத்துவமா..? இது தான் மாற்று மத சகோதரர்களின் மத்தியில் நாம் காட்டும் சகோதரத்துவமா..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[05 January 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 32297
கொம்பு துறை பெயர் பலகையோடு இணைத்து கடையக்குடி என்ற பெயர் பலகையை பதிக்கும் நகராட்சி அக்பர்ஷா 1, 2, 3, வது தெருவுக்கும் ஏன் இதுவரை பெயர் பலகை நிறுவவில்லை..? நகராட்சியை வன்மையாக கண்டிக்கிறேன்... இதனால் மத துவேசம் நகரில் பரவும்..
மேலும் கொம்புதுரை - சிங்கதுரை என்ற பெயர் தற்போது உருவாகியது என்று எதிர்ப்பு குரல் கொடுக்கும் நம்மில் பலர் அக்பர் ஷா 1 வது தெரு - அக்பர் ஷா 2 வது தெரு - அக்பர் ஷா 3 வது தெரு என்று தற்போது புதியதாய் முளைத்த பெயர் பலகைக்கு எதிர்ப்பு குரல் எழுப்பாது இருப்பது உள்நோக்கம் அல்லவா..!
இதுதான் சமத்துவமா..? இது தான் மாற்று மத சகோதரர்களின் மத்தியில் நாம் காட்டும் சகோதரத்துவமா..!
நியாயம் என்பது ஊரில் பெரும்பான்மையாக வாழும் நமக்குள் மட்டும் இருக்க கூடாது.. சிறுபான்மையாக வாழும் அணைத்து சமுதாய மக்களிடமும் இருத்தல் வேண்டும்...!
குறிப்பு:- அட்மின் அவர்களே.. ஏன் பதிவை கத்திரி போடாதீர்கள் நியாயத்தை கருத்தின் மூலம் வெளிபடுதுகிறேன்.. மக்கள் உணர வேண்டும் என்பதற்காக...!
7. Re:...தேவையான தேவை posted byرحمةالله T.M.RAHMATHULLAH (Kayalpatnam)[06 January 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 32301
(DHAARUL ULOOM STREET) முன் காலங்களில் உள்ள தெரு பெயர்களில் மக்களின் விருப்பத்திற்கேற்ப அல்லது விரும்பத்தகாத பெயர்களில் சில பொதுமக்களின் நெடு நாள் வழக்கமாய் வாய் மொழியாய் மாற்று பெயர் வழங்கி வந்தாலும் முறைப்படி கெஜட் பதிவாகததால் இன்னும் அப்படியே இருக்கிறது.
சம்மந்த பட்ட தெரு, வார்ட் மெம்பர்கள் முறைப்படி முயன்று ஆவன செய்யவேண்டும்.உதாரணமாய் துஷ்ட ராயர் தெரு = ஆசாத் தெரு, கூலக்கடை பஜார் =L.K லெப்பை பைத்தம்பி சாலை , சதுக்கைதெரு = லெப்பை அப்பா தெரு, பெரிய நெசவு தெரு= பெரிய தெரு ,கி.மு .கச்சேரி தெரு = ஜாவியா தெரு , அம்பல மரிக்கார் தெரு= மகலரா தெரு , பண்டக சாலை காரனார் தெரு = தீவுத் தெரு அல்லது D . U ( டீ யூ ) தெரு அதாவது தாருல் உலூம் தெரு (DHAARUL ULOOM STREET) போன்றவையாகும்.
மேலும் இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் கீழநெய்நார் தெரு முஹம்மது கல்ஜி சாலை என்றும் ,கொச்சியார் தெரு காஹிரா தெரு என்றும், முகைதீன் தெரு= முஹியதீன் தெரு என்றும் ஒழுங்காக வும் ஈக்கியப்பாதெரு என்று சமீப காலங்களில் புழங்கப்படும் தெரு பழ்ளுல்லாஹ் சாஹிப் தெரு என்று அழைக்கவும் ,எழுதப்படவும் வேண்டும் .இவ்விஷயங்களில் பொது மக்களின் ஆதரவும் அந்தந்த தெருவினரின்
வேட்கையும் வேண்டும் .
இது தவிர முன் காலங்களில் எல்லா தெரு க்களிலும் " வாகனங்கள் இடது பக்கமாய் ஓட்டவும் " என சாலை களில் இரு முனைகளிலும் இடைக்கிடையே யும் பலகை போர்டு பெரிதாய் மாட்டி இருக்கும் . அவைகள் இப்போதில்லை , நகராட்சியும் மெம்பர்களும் அவசியமாகவும் அவசரமாகவும் கவணிக்கவும். சாலை விதிகள் தடு மாறி அடிக்கடி விபத்துக்கள் நடை பெறுவது வெகுவாக குறைந்து விடும்.
Please leave reply To T .M .ரஹ்மத்துல்லாஹ் 9488507221 MOB.
4-3-1435 Mon .6-1-2014
10. Re:... posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[06 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32309
தம்பி முத்து இஸ்மாயீல் ...
அக்பர்ஷா 1-வது தெரு, 2-வது தெரு என்று பெயர் வைத்தது பிடிக்கவில்லை என்றால், உங்களின் எதிர்ப்பை வெளியிட உங்களுக்கு முழு உரிமை உண்டு. "இதை தவிர்த்த மற்ற நகர்கள், புதியதாக layout போட்டு நகராட்சியில் பிளான் அப்ருவல் வாங்கும்போது, எந்த பெயர்களில் அனுமதி வழங்கப் பட்டுள்ளதோ அந்த பெயர்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்." (C&P) இது நான் இந்த இணையதளத்தில் நான் பதிந்த கருத்து.(கமெண்ட்ஸ் # 29554
ஆனால் அந்த பகுதிக்கு இன்னும் நகராட்சி சார்பில் பெயர் பலகை வைத்த மாதிரி தகவலோ, புகைப்பட ஆதாரமோ இல்லை. அப்படி இருக்கும்போது ஏன் இப்படி துள்ளி குதிக்கிறீர்கள்? நகராட்சி ஆவணங்களில் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் பெயர்பலகை வைப்பார்கள்.
இந்த தெரு பலகைகளை பார்த்தால் சில விஷயங்கள் புரியும். நீண்ட நாட்களாக புழக்கத்தில் இருக்கும் பல தெருக்கள், நகராட்சியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும், அரசாங்க கெஜட்டில் அறிவிப்பு வெளியிடப் படாததால் இன்னும் பழைய பெயரிலேயே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
தம்பி முத்து இஸ்மாயீல், நீங்கள் குறிப்பிடும், கற்புடையார் பள்ளி வட்டம் மற்றும் கடையக்குடி ஆகியவை, அந்த பகுதி மக்கள் தாங்களாகவே அரசு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய முயற்சித்தது அனைவரும் அறிவோம். அதற்கு எதிராக நாம் (நீங்களும்) சீதக்காதி திடலில் ஆர்ப்பாட்டம் செய்து, இன்று வரை நகராட்சி ஆவணங்களில் எந்த பெயர்களில் உள்ளதோ, அதன்படியே, பெயர்பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
"ஆசாத் தெரு (துஷ்டராயர் தெரு) தீவு தெரு (பண்டக சாலை தெரு) & மரைக்கார் பள்ளி தெரு (கடற்கரை தெரு பற்றி நம் நகராட்சி பதிவேடுகளில் இன்னும் பழைய பெயர்களில் இருந்தால் அதை இப்போது இருக்கும் புதிய பெயர்களில் மாற்ற ஆட்சேபனை இல்லாமல் இருந்தால் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசாங்க gazette -இல் மாற்ற நடவடிக்கை எடுக்க அந்தந்த தெருவாசிகள் முயற்சி எடுக்கவும். (C&P) இதுவும் என் கமெண்ட்ஸ் # 29554.
அன்பார்ந்த தலைவி மற்றும் உறுப்பினர்களே! ஏற்கனவே நகராட்சியால் பெயர் மாற்றம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அரசு Gazette- இல் பெயர் மாற்றம் செய்ய முயற்சிக்க வேண்டியது.
11. முயற்சிக்க தவறி விட்டார்களா..? அல்லது - முயற்சித்து பலன் கிடைக்கவில்லையா...? posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[07 January 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 32313
அன்பார்ந்த தலைவி மற்றும் உறுப்பினர்களே! ஏற்கனவே நகராட்சியால் பெயர் மாற்றம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அரசு Gazette- இல் பெயர் மாற்றம் செய்ய முயற்சிக்க வேண்டியது. C & P
அன்றைய நகர்மன்ற அன்பார்ந்த தலைவர்களும் / அன்றைய நகர்மன்ற அன்பார்ந்த உறுப்பினர்களும் அவர்கள் பதவி காலத்தில் ஏற்கனவே நகராட்சியால் பெயர் மாற்றம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அரசு Gazette- இல் பெயர் மாற்றம் செய்ய முயற்சிக்க தவறி விட்டார்களா..? அல்லது - முயற்சித்து பலன் கிடைக்கவில்லையா...?
தற்போதைய தலைவரும் - உறுப்பினர்களும் இன்று அதற்க்கான முயற்சிகளில் இறங்குவதால் மட்டும் எடுபடாது என்றே கருதுகிறேன்.. மக்கள் இந்த தெரு பெயரால் குழப்பம் அடையாதிருக்க நகர்மன்றதிற்க்கு நெருக்கடி கொடுக்கவேண்டும்... வலியுறுத்தி கொண்டே இருக்க வேண்டும்.. RTI அணுக வேண்டும்..
மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் பரவ வேண்டும் / வரவேண்டும்... மக்கள் முயற்சி செய்தால் மட்டுமே சாத்தியமாகும்...
கடந்த காலத்தில் "ஏற்கனவே நகராட்சியால் பெயர் மாற்றம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை RTI மூலம் நகராட்சியில் பெற்று அதை வைத்து மக்கள் போராட வேண்டும்.. அதுவரை சொந்த / சுய விருப்பத்தின் தனி தனி மனிதர்களால் நிறுவப்படும் பெயர்பலகைகள் தொடரத்தான் செய்யும்..
12. இருவரில் ஒருவராவது இது விசியத்தில் முயற்சிக்க வேண்டும். posted bysyed ahamed (chennai )[07 January 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 32315
இருவரின் விவாதத்தால் தனி நபர்களால் தெருவில் வைக்கப்படும் பெயர் பலகைக்களுக்கு முடிவு ஏற்படாது. இருவரில் ஒருவராவது இது விசியத்தில் முயற்சிக்க வேண்டும்.
LAYOUT போட்டு நகராட்சியில் பிளான் அப்ருவல் வாங்கும்போது எந்த பெயர்களில் அனுமதி பெற்றார்கள் என்பதை இருவரில் ஒருவராவது நகராட்சியில் (LAYOUT பிளான்) அப்ரூவளின் ஆவணத்தை பெறுங்கள். அடுத்து ஏற்கனவே நகராட்சியால் பெயர் மாற்றம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அன்றைய ஆவணத்தை பெறுங்கள் பிறகு இந்த இரு ஆவணங்களை மக்கள் அனைவர்களும் பார்க்கும்படியாக பொது நல சங்கங்கள், ஜமாஅத் ஆகிய அறிவிப்பு பலகையில் பொது மக்களின் பார்வையில் வைக்க ஏற்பாடு செய்யுங்கள்.
(அந்த பகுதிக்கு இன்னும் நகராட்சி சார்பில் பெயர் பலகை வைத்த மாதிரி தகவலோ, புகைப்பட ஆதாரமோ இல்லை. அப்படி இருக்கும்போது ஏன் இப்படி துள்ளி குதிக்கிறீர்கள்? நகராட்சி ஆவணங்களில் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் பெயர்பலகை வைப்பார்கள். C & P)
விரைவில் தமிழன் என்ற முத்து RTI யின் மூலம் தகவல் பெற்று அதன் ஆதாரத்தை மக்கள் முன் சமர்பிப்பார் என எதிர்பார்க்கிறேன். நாம் ஒற்றுமையாக இருந்தால் இந்நகரில் அனைத்தையும் மிக இலகுவாக பெறலாம் சகோதர்களே.
13. Re:... posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[07 January 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 32317
தம்பி முத்து இஸ்மாயீல், நான் பதிந்தது, இந்நாள் தலைவி மற்றும் உறுப்பினர்களை குறை சொல்லி அல்ல. மாறாக, இதுநாள் வரை உள்ள பேரூராட்சி, நகராட்சி அங்கத்தினரைதான்.
இந்த பெயர் மாற்றம் செய்யப்பட தீர்மானத்தை, அரசு கெஜட்டில் கொண்டு வர நாம் (நான் மட்டும் அல்ல) அனைவரும் முயற்சி செய்வோம். இது வரை பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப் படவில்லை என்றால், இந்த நகர்மன்றம் மூலமாவது தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
வெறும் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. அதன் தொடர்ச்சியாக (follow up) அரசு கெஜட்டில் அறிவிப்பு செய்து, நகராட்சி ஆவணங்களில் நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்.
14. அது சரி அப்ப மத்த தெருக்களெல்லாம்...(?) posted byM.N.L.முஹம்மது ரபீக் (காயல்பட்டினம்.)[07 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32320
தீவுத்தெரு D . U ( டீ யூ ) தெரு அதாவது தாருல் உலூம் தெரு (DHAARUL ULOOM STREET) .-நல்ல கற்பனை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross