கல்வி நிறுவனங்கள், தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் விருதுகள் வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் தங்களை
ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு
2013-ஆம் ஆண்டின் ‘சுற்றுச்சூழல் விருதுகள்’ வழங்கி கௌரவிப்பதற்குத் தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது.
விருதுகளின் விவரம் / தகுதியுடைய நபர்கள்
1) சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள் / கல்வியாளர்கள் / தனி நபர்கள்
2) சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை
அ) சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் தனி நபர்கள்
ஆ) சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள்
1) விண்ணப்பதாரர் தனிநபராக இருப்பின் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
3) கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர் / நிறுவனம் செய்த பணிகள் மட்டுமே விண்ணப்பத்தில் இடம்பெற வேண்டும்.
4) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவின் கீழ் அறிவிக்கையில் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்த பணிகளை மட்டும் நிறுவனங்கள் சமர்ப்பிக்கலாம். தனி நபராக இருப்பின் தமிழக அரசால் வேறு எந்த விருதுகளுக்கும் அனுப்பப்படாத பணிகளின் விவரம், அவற்றின் பயன் மற்றும் விவரங்களை அறிக்கையுடன் இணைத்தல் வேண்டும்.
5) தனிநபர் எந்த நிறுவனத்திலும் பணி புரிபவராக இருத்தல் கூடாது. ஆனால் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் தனிநபர் செய்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து விண்ணப்பிக்க தகுதியுடையவர்.
6) சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பிரிவில் விண்ணப்பிக்கக்கூடிய தனிநபர்/நிறுவனம் அறிவிக்கையில் குறிப்பிட்ட கால கட்டத்தில் மேற்கொண்ட களப்பணி மற்றும் அதைச் சார்ந்த பிரசுரங்கள், பத்திரிக்கை குறிப்புகள், திட்ட அறிக்கைகள், அதனால் ஏற்பட்ட பயன்பாடு, பயனாளிகள்/பங்கு பெற்றோர் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும்.
7) மேற்கொண்ட களப்பணியை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள்/தேர்வுக் குழுவினர் தணிக்கை செய்வார்கள்.
8) ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே தனிநபர்/நிறுவனம் விண்ணப்பிக்கலாம்.
9) மேற்கண்ட மூன்று பிரிவிற்கும் அப்பிரிவின் எதிரே குறிப்பிட்டுள்ள தகுதியுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்கள் / நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
10) மேற்கண்ட மூன்று பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் என உள்ள தனித்தனி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
11) ஏற்கனவே சுற்றுச்சூழல் துறையால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நபர்கள் / நிறுவனங்கள் மீண்டும் விருதுகள் பெற விண்ணப்பிக்க இயலாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஆறு நகல்களில் ‘இயக்குநர், சுற்றுச்சூழல் துறை’ (Director, Department of Environment) என்ற பெயரில்
ரூ.100/-க்கான கேட்புக் காசோலையுடன் மூன்று புகைப்படங்களையும் (Passport size) இணைத்து அனுப்ப வேண்டும்.
சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கு ரொக்கப் பரிசு
சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் கட்டுரை
சுற்றுச்சூழலின் சிறந்த மேலாண்மைக்கு வித்திடும் ஆராய்ச்சியாளர்கள் / ஆராய்ச்சி நிறுவனங்கள்
1) சிறந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஊக்குவிக்கும் வண்ணம் 2013-
ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் டிசம்பர் 2013 வரை வெளியான, தனிநபர்
அல்லது ஒன்றிற்கு மேற்பட்டோர் இணைந்து உருவாக்கிய, சிறந்த ஆராய்ச்சிக்
கட்டுரைக்கு ரொக்கப் பரிசும், பாராட்டு மடலும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2) ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழிலும் / ஆங்கிலத்திலும் தரமான ஆராய்ச்சி ஏடுகளில்
பிரசுரிக்கப்பட்டவைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
3) ஆங்கில கட்டுரையானால் ஆராய்ச்சி கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு
இணைக்கப்பட வேண்டும்.
4) இதற்கு ஆதாரமாக எந்த ஆராய்ச்சி/அறிவியல் ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டது என்ற
விவரம் அளித்தல் வேண்டும்.
5) இந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள்
பிரசுரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
6) ஆராய்ச்சி கட்டுரை பிரிவின்கீழ் சம்பந்தப்பட்ட தலைப்பில் புத்தகமாக
வெளியிடப்பட்டிருப்பின் (தமிழிலும்/ஆங்கிலத்திலும்), அந்த புத்தகம் முழுமையாக
இணைத்தல் வேண்டும்.
7) ஆராய்ச்சி கட்டுரை மற்றும் புத்தகம் ஒன்றுக்கு மேற்பட்ட ந்பர்கள் சேர்ந்து பிரசுரம்
செய்திருந்தால், முதல் நபர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்.
8) ஆராய்ச்சிக் கட்டுரையின் நான்கு நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.
9) ஏற்கனவே விருது பெற்ற தனி நபர் / ஒன்றிற்கு மேற்பட்டோர் மீண்டும் விருது பெற
விண்ணப்பிக்க இயலாது.
இவ்விருதுக்குரிய விண்ணப்பப் படிவங்களை, இயக்குநர், சுற்றுச்சூழல் துறை, தரை
தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-600 015 என்ற முகவரியிலிருந்து
அனைத்துப் பணி நாட்களிலும் 02.01.2014 முதல் 26.02.2014 வரை காலை 10.00
மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தினை
இத்துறையின் வலைதளத்திலிருந்தும் படி எடுத்துக் கொள்ளலாம்.
வலைதள முகவரி – www.environment.tn.nic.in
தொலைபேசி எண்.- 2433 6421 / நிகரி 2433 6594
விண்ணப்பங்கள் வழங்கும் நாள் - 02.01.2014 முதல் 26.02.2014 வரை
விண்ணப்பங்கள் பெறுவதற்குரிய கடைசி நாள் - 26.02.2014 (மாலை 5.00 மணி வரையில்)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 28.02.2014
சுற்றுச்சூழல் துறை இயக்குநருக்காக
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9.
|