ஜனவரி 1 (புதன்கிழமை) அன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் - தொலைநோக்கி உதவிக்கொண்டு - ரபியுல் அவ்வல் 1435 பிறை காணப்பட்டதாக moonsighting.com இணையதளம் தெரிவிக்கிறது.
ரபியுல் அவ்வல் 1435 மாதம் பிறைக்காணப்பட்டது குறித்து தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
பிறைதேட வேண்டிய நாளான 02.01.14 வியாழன் கிழமை மஹரிபிற்குப் பிறகு காரைக்காலில் பிறை தென்பட்டதையடுத்து 02.01.14 வியாழன் கிழமை மஹரிபிலிருந்து ரபியுல் அவ்வல் முதல் பிறை தமிழகத்தில் ஆரம்பமாகியுள்ளது என்பதனை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
1. Re:.காலண்டர் ,பிறை கணக்குகளில் வார்த்தைகள் ..தெளிவாக இருக்கணும் posted byT.M.RAHMATHTHULLAH (Kayalpatnam)[09 January 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32334
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பர்களே குறிப்பாக மொடறேட்டர்களே:.காலண்டர் ,பிறை கணக்குகளில் வார்த்தைகள் ..தெளிவாக இருக்கணும் . இஸ்லாமிய நாள் கணக்குகள் எழுதும்போதும் பேசும்போதும் இரவை குறித்து சரியான நாளை சொல்லவேண்டும். இஸ்லாமிய முறையில் பகல் முந்தியா இரவு முந்தியா என்பதும் இன்னும் நம் மக்களிடையே சரியான முறையை அறியாமலே இருக்கிறோம் இஸ்லாமிய முறையில் இரவே முந்தியதாகும். பகல் பிந்தியது ஆகும். உதாரணம் இன்று 9-1-2014 .வியாழன் . சென்ற இரவு ஒருவர் மரணித்து இருந்தால் .அறிவிப்புகளில் நேற்றிரவு என கூறுவதினால் மாற்று மத்தத்தினரின் வழி முறை ஆகிவிடுகிறது . ஆனால் இன்றிரவு என்றோ வியாழன் இரவு என்றோதான் கூறவேண்டும். இக்காலங்களில் மரண ர்விப்புகளில் சாதாரணமாக இந்த தவறுகளை தெரியலாம்.இனி வெள்ளி , திங்கள் இரவுகளில் ராத்திபு ,ஜிக்ர் மஜ்லிஸ் நடத்துவதை நாம் பார்கீறோம் . ஆனால் அது மாற்றார்களின் வழிபடி ஞாயிறு இரவு... வெள்ளி இரவு ராத்திபு செய்துவிட்டு விடிந்து வெள்ளிகிழமை என்றுதான் சொல்லுகிரோமல்லவா? கவனிப்போமாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross