ரபியுல் அவ்வல் (1435) மாத அமாவாசை ஜனவரி 1 புதன்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி மதியம் 11:14 மணி அளவில் ஏற்படுகிறது.
அப்போது இந்திய நேரம் ஜனவரி 1 அதிகாலை 4:44 மணி.
ஜனவரி 1 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:10 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:11. சந்திரனின் வயது சுமார் 1.5
மணி நேரம். அன்று காயல்பட்டினத்தில் சூரியன் மறைந்து 1 நிமிடம் கழித்து சந்திரன் மறைந்தாலும், வெறுங்கண்ணால் பிறையை காண இயலாது.
அன்று - வடக்கு பசிபிக் கடல் பகுதியில் வெறுங்கண்ணால் பிறையை எளிதாக காணலாம். வட அமெரிக்காவின் அநேக பகுதிகளிலும், தென்
அமெரிக்காவின் வட பகுதியில் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு பிறையை காணலாம்.
ஜனவரி 2 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:10 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:07. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 25.5 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 57 நிமிடம் வரை பிறை இருக்கும். காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால்
எளிதாக காணலாம்.
அன்று ஏறத்தாழ உலகின் அனைத்து பகுதிகளிலும் - வெறுங்கண்ணால் பிறையை எளிதாக காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ள ஒரு சாராருக்கும் (Hijra Committee, Kerala), மற்றொரு விதிமுறை அடிப்படையில்
பிறையினை கணக்கிடும் Islamic Society of North America [ISNA], Fiqh Council of North America [FCNA], European Council for
Fatwa and Research [ECFR], Conseil Français du Culte Musulman அமைப்புகளை ஏற்றுக்கொள்ளும் சாராருக்கும் ஜனவரி 2 - ரபியுல்
அவ்வல் 1 ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஜனவரி 1 (அமாவாசை) அன்று சஃபர்
29 பூர்த்தி ஆகிறது. வட அமெரிக்காவின் அநேக பகுதிகளிலும், தென் அமெரிக்காவின் வட பகுதியில் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு
பிறையை காணலாம். அப்பகுதிகளில் ஜனவரி 1 அன்று பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றால் - அவர்கள் சஃபர் 29 பூர்த்தி செய்து, ஜனவரி
2 அன்று ரபியுல் அவ்வல் மாதம் துவக்குவர். அவ்வாறு தகவல் கிடைக்கப்பெறவில்லை எனில் அவர்கள் - ஜனவரி 2 அன்று சஃபர் 30 பூர்த்தி
செய்து, ஜனவரி 3 - ரபியுல் அவ்வல் மாதம் துவக்குவர்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு ஜனவரி 1 (அமாவாசை) அன்று சஃபர் 28 பூர்த்தி
ஆகிறது. ஜனவரி 2 அன்று காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால் காணலாம். அவ்வாறு பிறையைக்கண்டால் ஜனவரி 2 அன்று
அவர்கள் சஃபர் 29 பூர்த்தி செய்வர். ஜனவரி 3 ரபியுல் அவ்வல் மாதம் துவக்குவர். வானிலை சூழல் காரணமாக அன்று பிறை தென்படவில்லை
எனில் - ஜனவரி 3 அன்று சஃபர் 30 பூர்த்தி செய்து, ஜனவரி 4 ரபியுல் அவ்வல் மாதம் துவக்குவர்.
சஃபர் 1435 மாத பிறை விபரங்களை காண இங்கு அழுத்தவும்
|