தமிழகத்தில் அக்டோபர் 21 (2013) அன்று வடக்கிழக்கு பருவ மழை துவங்கியது.
2012 ஆம் ஆண்டின் வடக்கிழக்கு பருவமழை பொய்த்தது. அதனை தொடர்ந்து - 2013 ஆம் ஆண்டின் தென் மேற்கு பருவமழையும் பொய்த்ததால்,
2013 ஆம் ஆண்டின் வடக்கிழக்கு பருவ மழை பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கியது.
இருப்பினும் - வடக்கிழக்கு பருவமழை காலம், அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 31, 2013 அன்று முடிந்துள்ள நிலையில் - மாநில அளவில்
இக்காலகட்டத்தில் (அக்டோபர் 1, 2013 - டிசம்பர் 31, 2013), இயல்பைவிட 33 சதவீதம் குறைந்த மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சுமார் 30 மாவட்டங்களில், தர்மபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டும் இயல்பான மழை
பெய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் - இக்காலகட்டத்தில், இயல்பை விட 12 சதவீதம் குறைந்த மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் - இக்காலகட்டத்தில், இயல்பை விட 29 சதவீதம் குறைந்த மழை பெய்துள்ளது.
|