காயல்பட்டினம் சமுதாய கல்லூரியில் இலக்கிய மன்றத் துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. இது குறித்து அக்கல்லூரி சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் சமுதாய கல்லூரியின் இக்கல்வியாண்டில் இலக்கிய மன்றத் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி மாணவி M.A.K. நபிஷத் மிஸ்ரியா கிராஅத் ஓதினார். கல்லூரி உதவி பேராசிரியை திருமதி ரவூப் நிஷா அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜனாப் M.A. புஹாரி விழாவிற்கு தலைமையேற்று தலைமை உரை நிகழ்த்தினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக எல்.கே. மேல்நிலைப்பள்ளியின் ஆட்சி மன்ற செயற்குழு உறுப்பினரும், நமது கல்லூரியின் ஆலோசகருமான ஜனாப் எல்.டி. இப்ராஹிம் கலந்து, சிறப்புரையாற்றினார்.
இறுதியில் கல்லூரி முதல்வர் நன்றி நவிழ, விழா இனிதே நிறைவு பெற்றது, அல்ஹம்துலில்லாஹ். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியைகள் திருமதி ரைஷா, திருமதி ஆஷா தௌலத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M. A. புஹாரி,
கல்லூரி முதல்வர்.
|